**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சகோ: பீ. ஜே.அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.

>> Wednesday, October 10, 2012

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.

வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.

இப்படிக்கு
மாநில நிர்வாகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
10.10.2012

சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன்.

ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன்.

ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது.

ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.

ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை.

இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை.

என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன்.

இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல.

மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை.

நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும்.

எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை.

மறைக்கவும் முடியாது.

மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான்.

அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான்.

இதுதான் ஆச்சரியமானது.

இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல.

ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும்

மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும்

அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது.

எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும்.

அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.

அன்புடன் பி.ஜைனுல் ஆபிதீன்

10.10.2012

7 comments:

suvanappiriyan October 10, 2012 at 10:02 PM  

படித்தவுடன் மனது கனத்து விட்டது. நல்லவர்களைத்தான் இறைவன் அதிகம் சோதிப்பான். இந்த சிக்கலிலிருந்து மீளும் மனோ தைரியத்தை அண்ணனுக்கு கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

mohamedali jinnah October 11, 2012 at 1:15 AM  

இன்ஷா அல்லாஹ் அவர் உடல் நலத்தை லேசாக்கி வைப்பானாக.

suvanappiriyan October 11, 2012 at 2:17 AM  

நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் அண்ணனின் உடல் நலனையும் சேர்த்துக் கொள்வோம்.

பி.ஏ.ஷேக் தாவூத் October 11, 2012 at 12:32 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் அப்பா வாஞ்சூர் அவர்களுக்கு,
இஸ்லாமிய ஆய்வாளர் மற்றும் அழைப்பாளர் சகோ. பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு சமீப காலமாக சுகவீனம் அடைந்ததாக செய்திகள் வரும்போதெல்லாம் முதுமையின் காரணமாக தான் என மனதை தேற்றிக் கொள்வேன். ஏனெனில் அவர் இன்னும் பல்வேறு ஆய்வுகளையும் பணிகளையும் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உண்டு. ஆனால் அவருக்கு புற்று நோய் என்று செய்தி தெரிய வரும் போது மனதை அதிகமதிகம் கணக்க செய்து விட்டது.

நோய்க்கான நிவாரணம் அளிப்பதில் சிறந்தவன் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. எனவே அவனிடமே கையேந்தி கேட்கிறோம். இறைவா அவருக்கு வந்த நோயை முற்றிலும் நீக்கி அவரை ஆரோக்கியமாக வைப்பாயாக. உன் மார்க்கத்திற்கான பணிகளை இன்னும் பல காலம் செய்ய கூடிய பாக்கியத்தை அவருக்கு கொடு யா அல்லாஹ்.

Jayadev Das October 11, 2012 at 1:35 PM  

நானும் அவரது ரசிகன். அவருக்காக நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மாமிசம் சாப்பிடுபவராக இருந்தால், அதை நிறுத்தச் சொல்லுங்கள், இந்த மாதிரி பிரச்சினை மீண்டும் வராது.

usman January 25, 2013 at 11:08 PM  

அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளை தந்து நம் அனைவரையும் அவர் மூலம்அல்லாஹ் நேர் வழி நடத்த வேண்டும் .

Unknown February 3, 2013 at 11:09 PM  

சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன்

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP