கண்ணீரில் முஸ்லீம் சமூகம். பிப்ரவரி 14 போராட்டம். ஏன்?
>> Sunday, February 12, 2012
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும் இந்திய முஸ்லீம் சமுதாயம்
அப்பட்டமான உண்மைகள்.
'PIRAPPURIMAI'
“விடியுமா? தெரியல வேதனை தீரல”
இஸ்லாமியர்கள் தேவைக்கு அதிகமான சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பொய்யுரைக்கப்பட்டு இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
சமூக நீதி என்னும் வெளிச்சத்துக்காக ஏங்கி காத்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
மற்ற எவரையும் விட இந்த மண்ணின் மீது உரிமை கொண்டாட தகுதி படைத்த
இந்திய முஸ்லீம் சமுதாயம்
நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த
நாட்டிற்காக சகல பணிகளிலும் சகல தியாகங்களிலும் பங்கேற்ற
இந்திய முஸ்லீம் சமுதாயம்
உடலை உருக்கி உதிரம் பெறுக்கி இந்திய மண்ணுக்கு தந்த
நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களின் சுகங்களை அன்று இருளாக்கி கொண்டு போராடிவிட்டு இன்னும் இருளிலே வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
வெள்ளையர் சமூகத்தை வீரத்துடன் விரட்டி அடித்து விட்டு இன்னும் கருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
முதலில் பாகிஸ்தானுடன் யுத்தம் வந்தபோது போரிலே முன்னிலையில் நின்று நாட்டிற்காக முதலில் உயிர் இழந்தது ஒரு இந்திய முஸ்லீம் என்ற மறைக்கப்பட்ட மறக்கபட்ட ஒரு வரலாறு படைத்த
இந்திய முஸ்லீம் சமுதாயம்
இந்த நாட்டை இன்னொரு நாட்டுக்கு விட்டு கொடுத்திராத
2 பாட்டல் சாராயத்துக்காக நாட்டின் இராணுவ ரகசியங்களை விற்றவர்களில்லை
இந்திய முஸ்லீம் சமுதாயம் .
நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் புறந்தள்ளப்படும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
அரசியல் அதிகாரத்திலும் அதளபாதாளத்திலேயே இருக்கும்
முஸ்லீம் சமுதாயத்தின் விகிதாச்சாரப்படி நாடாளும் மன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உரிய பிரதிநுத்துவம் இதுவரையிலும் கிடைத்திராத
இந்திய முஸ்லீம் சமுதாயம்
இன்று சமூக பொருளாதார கல்வி நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான நிலையில் முகமிழந்து தன் முகவரி இழந்து வாழ்வுரிமை வினாக்குறியாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீதியில் அழுது கொண்டு நிற்கும்
இந்திய முஸ்லீம் சமுதாயம்
இடஒதுக்கீட்டை பொறுத்த வரையில் அது முஸ்லீம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை என்பது உண்மை என்ற நிலையில்
இந்திய முஸ்லீம் சமுதாயம்.
தயவு செய்து இந்த"கை" படத்தின் மேல் க்ளிக் செய்து "தமிழ்மணத்தில்" வாக்களியுங்கள். |