**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)

>> Monday, July 22, 2013

இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.

குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதற்கு

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1

"இந்து-முஸ்லிம் கலவரம்" என்ற சப்பைக் கட்டு போல் சுற்றி வளைத்தெல்லாம் பேசாமல், "இனச் சுத்திகரிப்பு" என்று அஃபிஷியலாக அறிவித்து விட்டே அழித்து ஒழிக்கப்படுகிறார்கள்.

ஆச்சரியமாக இந்த இரு நாடுகளிலும் முஸ்லிம்களின்மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருப்பவர்கள் புத்தமதத் துறவிகள்! "ஆசையே துன்பங்களுக்குக் காரணம்" என போதித்து "உயிர்களைக் கொல்லாமை"யைக் கொள்கையாகக் கொண்டிருந்த புத்தரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள்!

முஸ்லீம்களை உயிருடன் சுட்டெரித்தும் கற்பழித்தும் கதறக்கதற வெட்டிச் சாய்க்கும் பௌத்த காவிகள்.


கலிங்கத்துப் போரில் வெற்றிபெற்ற அசோகர், ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்து உயிரற்ற ஜடமாகக் கிடப்பதைக் களத்தில் கண்ட, அக்கணத்திலேயே போர்க் கவசத்தைத் துறந்து வாழ்நாளில் இனிமேல் போர் புரிவதில்லை என உறுதி பூண்டதோடு, அதற்குப் பின்னர் வாழ்க்கை முழுவதும் புத்தரின் "உயிர்களைக் கொல்லாமை" கொள்கையைப் பரப்புவதில் செலவழித்ததாக வரலாறு கூறுகிறது.

போர்புரிவதைத் தர்மமாக எண்ணிய மாபெரும் மன்னர்களையே சாத்வீகமானவர்களாக மாற்றியமைத்த புத்தரின் கொள்கையை இன்றைய புத்த மதத்துறவிகள் மாற்றியமைக்கிறார்களா என்ன?

புத்த மதத்தின் அடிப்படையான மூன்று (புத்தம், தர்மம், சங்கம்) ரத்தினங்களைக் குறிக்கும் வகையில் 969 என்ற பெயரில் மியான்மரில் துவக்கப்பட்ட அமைப்பு, புத்தரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் துவக்கப்பட்டது எனத் தன்னைப் பறைசாற்றிக் கொண்டது. ஆனால், "அஸின் விராத்து" என்ற புத்த பயங்கரவாதி இந்த அமைப்பில் சேர்ந்ததிலிருந்து அதன் பாதை புத்தரின் அனைத்துக் கொள்கைகளுக்கும் சாவு மணி அடித்தது.

இந்தியாவுக்கு ஒரு பிரவீன் தொகாடியா, தமிழ்நாட்டுக்கு ஒரு இராமகோபாலன் போன்று பர்மாவுக்கு விராத்து என்று சுருக்கமாகச் சொன்னால் இவனைக் குறித்து புரிந்து கொள்வீர்கள். தன்னைத் தானே "பர்மாவின் பின் லேடன்" என்று அழைத்துக் கொள்ளும் இவன் தனது மேடைப்பேச்சுகளிலும் இணைய தளங்களிலும் பகிரங்கமாகக் கொக்கரிக்கும் ஸ்லோகன் "பர்மிய முஸ்லிம் பெண்களைத் தேடித் தேடிக் கற்பழியுங்கள்" என்பதே.

பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.

அன்பும் கருணையும் புத்தரின் அடிப்படை முழக்கங்கள் என்கின்றனர். ஆசையே துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் என்ற புத்தரின் தத்துவங்களைக் கடைபிடித்த துறவிகள், சிறு எறும்பைக் கூடத் துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பாதம் படும் இடங்களில் எல்லாம் விசிறி கொண்டு வீசிக் கொண்டு நடப்பர் என நாம் சிறுவயதில் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

அத்தகைய தத்துவங்களைப் பரப்புவதாகக் கூறிக்கொண்ட 969 அமைப்பில், விராத்து இணைந்த பின்னரான நவீன தத்துவங்களில் சில:

நீங்கள் கருணையும், அன்பும் நிறைந்தவராக இருக்கலாம். ஆனால் ஒரு வெறிநாயை அருகில் வைத்துக் கொண்டு தூங்க முடியாது.

நாம் வலுவிழந்தால் எங்கள் நிலம் விரைவில் இஸ்லாமிய நிலமாகி விடும். மியான்மரை புத்தநாடாகவே வைத்திருக்க வேண்டும்.

கலப்பு மணம் கூடவே கூடாது. குறிப்பாக புத்த-இஸ்லாமியக் கலப்பு.

அவர்கள் (இஸ்லாமியர்கள்) பல்கிப் பெருகுகிறார்கள். எங்கள் பெண்களைக் கவர்ந்து பாலியல் குற்றம் செய்கிறார்கள்.

மதமும் இனமும் பாதுகாக்கப்படுவது நாட்டின் ஜனநாயகத்தை விட முக்கியமானது.

இஸ்லாமியரின் கடைகளில் எந்தப் பொருளையும் வாங்காமல் புறக்கணியுங்கள்
.

மேற்கண்டவையெல்லாம் வெறும் சாம்பிள்கள் மட்டும்தான்.

இத்தகைய விஷக் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே வன்முறையினைத் தூண்டியதோடு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்குத் தலைமை தாங்கி 8 முஸ்லிம்களைக் கொலை செய்த குற்றத்திற்காக அஸின் விராத்தை மியான்மர் அரசு கைது செய்து 2003ஆம் ஆண்டில் சிறையில் அடைத்தது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற விராத்தை, அரசியல் காரணங்கள் சொல்லி 2010 ஆம் ஆண்டே விடுவித்தார் மியான்மர் அதிபர் தைன் சைன். விராத்தை விடுவித்ததுடன் நின்றுவிடாமல், அவனது பிரிவினைவாதக் கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துப் பாதுகாத்தும் வருகிறார் அதிபர் தைன் சைன்.

சிறையிலிருந்து விடுதலையான விராத்துவின் குரோதமும் காழ்ப்புணர்ச்சியும் பன்மடங்கானது. தற்போது பர்மாவில் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புச் செய்யப்படுவதற்கு இவனது நடவடிக்கைகளும் இவனுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும் அதிபர் தைனுமே காரணம்!

969 அமைப்பு மூலம் விராத்து பரப்பும் வன்முறைப் பேச்சுகளால் தூண்டப்பட்டு, புத்த துறவிகளின் தலைமையில் முஸ்லிம்களின்மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதுவரை இத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், கடைகள் என முஸ்லிம்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டு, லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இருப்பிடம் இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்குக்கூட மியான்மரின் தைன் அரசு எவரையும் அனுமதிக்கவில்லை. சில வசதி படைத்தவர்கள் மட்டும் பக்கத்து நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்துவிட்ட நிலையில், ஏழைகள் செல்வதற்கு இடமில்லாமல் சொந்த நாட்டினுள்ளேயே அகதிகளாய் ஊர் ஊராகச் சுற்றிவரும் பரிதாப நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

பர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதையும் எஞ்சியுள்ள இலட்சக்கணக்கானோர் நாடு கடத்தப்படுவதையும் கண்களால் கண்ட Human Rights Watch வெளியிட்ட153 பக்கங்கள் அடங்கிய கண்ணீர் அறிக்கையின் பெயர் "உங்களால் பிரார்த்திக்க மட்டுமே இயலும்" - All You Can Do is Pray

அன்பைப் போதிக்க வேண்டிய புத்த பிட்சுகள் எவ்வாறு முஸ்லிம்கள் பற்றிய தவறான வதந்திகளைப் பரவ விட்டுப் பிற மக்கள் மனதில் குரோதத்தையும் வெறுப்பையும் விதைத்தார்கள் என்று கார்டியன் கடந்த 18 ஏப்ரல் 2013 அன்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் விராத்துவின் பயங்கரவாத முகத்தைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் ஒரு பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தங்களின் தாக்குதலில் தற்போது முழு வெற்றி கிடைத்தால், பர்மாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இம்முறையினை விரிவாக்குவோம் எனக் கொக்கரித்துள்ளான் விராத்து.

(காண வேண்டிய வீடியோ : http://www.guardian.co.uk/world/video/2013/apr/16/burma-bin-laden-buddhist-monk-video ) விராத்துவின் பயங்கரவாத முகத்தை ஆதாரங்களுடன் விவரித்து, ஜூலை 1, 2013 இன் அட்டைப்படக் கட்டுரையாக டைம் இதழும் வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விதழை பர்மா அரசு தடை செய்தது. பர்மா அரசு முஸ்லிம்களுக்கு எதிராக 969 அமைப்பு நடத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ஒரு மாதிரியே இது.

பயங்கரவாதிகளாய் மாறிப் போன புத்தத் துறவிகளுக்கு, பர்மாவின் ஆளும் அரசு மட்டுமன்றி எதிர் கட்சிகளும் துணை போவது வேதனையின் உச்சம். இன்றைய ஆளும் அரசே கவிழ்ந்தாலும், புதிய அரசைத் துறவிகளின் துணை இன்றி அமைக்க இயலாது என்ற தொலைநோக்கு அரசியல் அது.

துறவிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் பின்னாளில் அது தமக்குப் பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அனைத்து அரசியல் கட்சிகளிடமும் காண முடிகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மியான்மரின் பிரபலமான ஜனநாயகப் போராளியான ஆங் சூன் சுகியும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான புத்தத் துறவிகளின் இந்த இன அழிப்பிற்கு எதிராக இதுவரை வாயைத் திறக்காததில் பர்மாவில் துறவிகளின் ஆளுமை பயங்கரம் உறைய வைக்கிறது.

"969 அமைப்பின் இந்த இன வன்முறையினைச் சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வில்லையேல், ஜெர்மனியின் நாஜி இன அழிப்பின் மறுவடிவமாக 969 அமைப்பு மாறும்!" எனச் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டதை இங்கே குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் தோன்றிய புத்தமதம், பார்ப்பனீயத்தின் கொடுங்கோன்மையால் ஹிந்துத்துவ ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நிலையில் சீனா, ஜப்பான், பர்மா, தாய்லாந்து, இலங்கை முதலான நாடுகளில் மக்களின் மனதில் தஞ்சம் புகுந்தது பழைய வரலாறு.

இந்திய மண்ணில் முன்னொரு நாளில் தனக்கு ஹிந்துத்துவா செய்த அதே சூழ்ச்சியை, புத்தம் இன்று பர்மிய முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதை, முஸ்லிம்களுக்கு எதிரான ஹிந்துத்துவ ஃபாசிஸத்தின் நூற்றாண்டு காலத் திட்டமிட்ட சதிகளுடன் இணைத்து விரிந்த பார்வை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

- அபூ ஸாலிஹா

பகுதி-1 | பகுதி-3  (விரைவில்)

Thanks to source: SATYAMARGAM

மேலும் படிக்க... Read more...

முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற – மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு. அதிர்ச்சி தகவல்

>> Wednesday, July 17, 2013

பாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்துறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது.அதற்கு காரணமாக,இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் – இ – தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது. ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையைஆதரித்திருந்தது.

சி.பி.ஐ விசாரணையை எதிர்த்த முதல் பிரமாணப்பத்திரத்தை தயாரித்தது, சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்படவிருக்கும் ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமாரா? என்று சதீஷ் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு ஐ.பி ரிப்போட் தேவை என்பதால் அதிகாரிகள் ஐ.பியின் பக்கவாத்தியமாக செயல்படுவதாக சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார் என்றும் ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக நகர வளர்ச்சித்துறை துணை செயலாளரிடம் மணி புகார் அளித்துள்ளாராம். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க சதீஷ் வர்மா மறுத்துவிட்டார். கூடுதல் விபரங்களுக்கு சி.பி.ஐ தொடர்புக் கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஷ்ரத் வழக்கு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில்(எஸ்.ஐ.டி) உறுப்பினராக இருந்த சதீஷ் வர்மா, தனது சக ஊழியரேஆதாரங்களில் ஏற்படுத்திய குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். என்கவுண்டர் போலி என்பதை 2011-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வர்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் போராளிகளை வர்மா ஆதரிப்பதாக அரசும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களும் அவர் மீது பாய்ந்தனர்.இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஷ்ரத் மற்றும் ஜாவேத்(இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) ஆகியோரை வஸாத் என்ற இடத்தில் இருந்து குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் கடத்திச் சென்று அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய தயாரானார் வர்மா.

போலி என்கவுண்டர் தொடர்பாக உண்மையான ஃபோட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கை கைப்பற்ற அஹ்மதாபாத்தில் உள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபில் நடத்திய ரெய்டும் வர்மாவை இன்னமும் பிரபலப்படுத்தியது.ஏ.கே-56 துப்பாக்கிகளுடன் ஒன்பது எம்.எம் துப்பாக்கிகளை பயன்பத்தி இஷ்ரத் உள்ளிட்டோரை வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதை தெளிவுப்படுத்தும் ஃபோட்டோக்களாக இவை அமைந்தன.

1986 பாட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான வர்மா, அஹ்மதாபாத் ட்ராஃபிக் துணை கமிஷனராக பணியாற்றிய வேளையில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டார்.ஆனால், 16 மாதங்களுக்குள் ஜுனாகட்டில் உள்ள போலீஸ் ட்ரெயினிங் கல்லூரிக்கு மாற்றம்செய்யப்பட்டார்.இவ்வேளையில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக வர்மாவை, உயர்நீதிமன்றம் நியமித்தது. காலாவதி முடிந்த பிறகும் இவரது சிறந்த சேவையின் காரணமாக, சி.பி.ஐ இரண்டு முறை பணிக்காலத்தை நீட்டித்து வாங்கியது.கடந்த ஜூன் 24-ஆம் தேதி சி.பி.ஐக்கு உதவு பணி வர்மாவுக்கு முடிவடைந்தது.பின்னர் மாநில போலீசுக்கு திரும்பிய மீண்டும் போலீஸ் ட்ரெயினிங் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

Ref: Times of India, thoothuonline.com, Inneram.com,Thejas, youtube.com etc. etc..

***********


பாராளுமன்றம் – மும்பை தாக்குதல்கள்:வலுப்பெறும் சந்தேகம்!


16 Jul 2013 புதுடெல்லி:2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலும், 2001-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலும் மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகளே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகளின் உதவியுடன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப்போலவே, நாட்டை ஆளும் அரசுகளும் தங்களது கேவலமான லட்சியங்களை நிறைவேற்ற இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் கூற்றில் இருந்து தெரியவருகிறது.

பாராளுமன்ற தாக்குதல் குறித்து பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலரான நந்திதா ஹக்ஸர் உள்ளிட்டோர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் சதீஷ் வர்மாவின் கூற்று அமைந்துள்ளது. சவப்பெட்டி ஊழலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ அரசு வெட்கி தலைகுனிந்த வேளையில்தான் பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறியது.

பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறுவதற்கு முன்பே இத்தகையதொரு சம்பவம் நடக்க இருப்பதாக அரசும், போலீசும் தெரிவித்திருந்தன.

2001-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் பாராளுமன்ற தாக்குதல் விரைவில் நடக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னரும் வெடிப்பொருட்களுடன் ’தீவிரவாதிகள்’ எனக் கூறப்படுவோர் வந்த கார் பாராளுமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது? என்ற கேள்வியை அருந்ததி ராய் எழுப்பியிருந்தார்.

இவ்வழக்கில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்ஸல் குரு, சரணடைந்த போராளி என்றும், இவர் ஜம்மு-கஷ்மீரில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று நீதிமன்றமே உறுதிச் செய்திருந்தது.

போலீஸின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், எவ்வாறு நாட்டின் உயர் பாதுகாப்புடன் கூடிய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டமுடியும்? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

தாக்குதலின் போது மோதலில் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் என்று அரசு கூறும் ஐந்து நபர்கள் குறித்த விபரங்களை இதுவரை அரசால் அளிக்க முடியவில்லை என்பதும் பாராளுமன்றத்தாக்குதலில் நிலவும் மர்மமாகும்.

பாராளுமன்ற தாக்குதலில் பங்கேற்றார் என்று கூறப்படும் நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னிடம் கஷ்மீர் டி.எஸ்.பி தவீந்தர் சிங் ஒப்படைத்தார் என்ற அப்ஸல் குருவின் வாக்குமூலம் குறித்தோ, அப்ஸல் குருவும், தவீந்தர் சிங் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்தோ இதுவரை போதிய விசாரணைகள் நடைபெறவில்லை. போலீஸ் மற்றும் ஐ.பி.யின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் அப்ஸல் குரு ஆவார்.

மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள், சதீஷ் வர்மாவின் கூற்றைத்தொடர்ந்து வலுப்பெறுகிறது.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இண்டலிஜன்ஸ் பீரோ மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள் உள்ளதாக ஏற்கனவே மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஸ்ரிஃப் தகவல் வெளியிட்டிருந்தார்.

கர்கரேயைக் கொன்றது யார்? என்ற நூலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

புல்லட் ப்ரூஃப் (குண்டு துளைக்காத ஆடை) ஜாக்கெட் அணிந்த பிறகு கர்கரேயின் உடலில் தோட்டாக்கள் எவ்வாறு துளைத்தன? என்று கர்கரேயின் மனைவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமான இந்த ஜாக்கெட் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போனது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில் தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்திப்பதற்காக காமா ஹஸ்பிடல் வளாகத்திற்கு சென்ற கர்கரேக்கு ராம்பவனுக்கு முன்னால் வைத்து தோட்டா தாக்கியது. கர்கரேயுடன் அசிஸ்டெண்ட் கமிஷனர் அசோக் காம்தே, சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சாலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் குறிப்பேட்டின் (மானுவல்) படி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் போலீஸ்காரர்கள் தேவை என்று கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்கரே அளித்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு மணிநேரம் கழியும் வரை கர்கரே மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளின் அருகில் போலீஸ் வராதததும் மர்மமாக உள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு நிமிட தொலைவிலேயே உள்ள இடத்தில் தான் கர்கரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டு கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. SOURCE: http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95/#sthash.JnOE0maZ.dpuf

***********


Sunday, 10 February 2013
நாடாளுமன்றத் தாக்குதல்: அருந்ததிராய் எழுப்பிய‌ 13 கேள்விகள். இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்
1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.

டிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது?

2) நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ.இ.814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து? அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது?

3) நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர்? அந்த ஆறாவது நபர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை? அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை?

4) இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்?

5) நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது? இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன?

6) டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா? பொய்யா?

7) நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு? இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள்? கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர்? நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர்? கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்?

8) கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர்? காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்?

9) காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன?

10) லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா?

11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்?

12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ள ‘தானே’ மாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்?

காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்?

நாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்?

13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்:

”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்” -M.G.M

SOURCE:http://vaigaraivelichammagazine.blogspot.sg/2013/02/13.html

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

மேலும் படிக்க... Read more...

மனுஷ்ய புத்திரனும் மறுமையும். இறைவனாவது? கண்காணிப்பதாவது?

>> Tuesday, July 16, 2013

உங்களுடைய ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்படுகிறது. இறைவனுக்கு அஞ்சி வாழுங்கள் எனக்கூறினால் இறைவனாவது; கண்காணிப்பதாவது; மறுமையை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்களே? என கிண்டலடிப்பவர்களே ! மறுமையில் இறைவன் உங்களை எழுப்பி நீங்கள் செய்தவைளை சுட்டி காட்டமுடியாதா?

படத்தின் மேல் ஒர் / இரு முறை க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


நன்றி: Samarasam.net.

மேலும் படிக்க... Read more...

புத்த பிட்சுக்கள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி- 1)

>> Monday, July 15, 2013

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்ட பல குண்டுவெடிப்புகள் "முஸ்லிம்களின் பெயரால்" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.

(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை) மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் "முஸ்லிம்களின் பெயரால்" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித் தாக்குதல்கள் என வெட்ட வெளிச்சமானதும் ஆதாரங்களுடன் பதிவான வரலாறு.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் பீகாரிலுள்ள புத்தர் கோயிலில் 9 குண்டுகள் வெடித்துள்ளன. மேலும் வெடிக்காத நான்கு குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. எப்போதும்போல் இந்தக் குண்டுவெடிப்பிற்குப் பிறகும், காவல்துறை தனது விசாரணையைத் துவங்கும் முன்னரே, சில ஃபாசிஸ பத்திரிக்கைகள் சொல்லி வைத்தார் போல் பழியினை முஸ்லிம்களின் மீது திருப்பி எழுத ஆரம்பித்து விட்டன.

"மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டு வருவதற்குப் பதிலடியாக, இந்தியாவிலுள்ள புத்தபீடங்கள் தாக்கப்படும் என்று கடந்த ஜனவரியிலேயே ஜிஹாதிகள் பகிரங்கமாக எழுதியிருக்கிறார்கள்!" என்று இந்திய காவல்துறையும் ஐ.பி - யும் இடைவெளி விட்டு அறிவித்திருந்தன. இதற்கு "ஆதாரமாக" இந்தியன் முஜாஹித்தீன் என்ற பெயரில் எவனோ இயக்கும் ட்விட்டர் வலைத்தளமும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இன்றைய இணைய உலகில், எட்டாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனால் கூட ட்விட்டர் வலைத்தளம் துவங்கிவிட முடிவதோடு "இண்டியா ஃபார் ஹிந்துத்வா" என்ற பெயரிலோ "ஜெய் ஆர்.எஸ்.எஸ்" என்ற பெயரிலோ எதை வேண்டுமானாலும் கிறுக்கி அறிவிக்கவும் முடியும். சாதாரண மக்களுக்கு இது குறித்து அதிக விவரம் தெரியாததால், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என பாமரர்களுக்கு எளிதில் புரியாத பெயர்களுடன் அவ்வப்போது புதிய கதைகளைப் பரப்பி மக்களை மடையராக்குகிறார்கள் போலும்!

பர்மா மற்றும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகே அரங்கேற ஆரம்பித்தன. எனில், இந்திய முஜாஹிதீன் மேற்கண்ட அறிவிப்பை எப்படி ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருக்க முடியும் என்ற அடிப்படை கேள்விகூட ஐபியினை நோக்கி கேட்க இங்கு யாருக்கும் தோன்றவில்லை!

இது போன்ற "முன்னறிவிப்புகள்" நிகழும் போதெல்லாம், இந்தியன் முஜாஹித்தீனுக்கு கண், காது, மூக்கு வைத்து ஊடகங்கள் எழுத ஆரம்பித்து விடுகின்றன. ஆனால், தொடர் விசாரணை முடிந்து உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்று பளிச்சிட வரும் போது, முன்னர் இந்திய முஜாஹிதீன் என கூவிக்கூவி எழுதியவர்கள் எல்லாம் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளுக்காக முஸ்லிம் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் மும்முரமாகி விடுகிறார்கள்.

ஊடகங்களின் சமூகப் பொறுப்பற்ற இச்செயலுக்கு எதிராக எத்தனை கட்சுக்கள் காட்டுக் கத்தல் கத்தி என்ன பயன்?

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவை - மக்கா மஸ்ஜித் ஆகட்டும், அஜ்மீர் தர்கா ஆகட்டும், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ஆகட்டும், சம்பவ இடத்திலிருந்தே தலைப்புச் செய்திகளிலும் ஃபிளாஷ் நியூஸ்களிலும் பெரும்பாலான ஊடகங்களால் முன் மொழியப்பட்டவை முஸ்லிம்களின் பெயர்களே!

ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையானது, தீரர் கார்கரேயின் கீழ் வந்த பின்னர், மாலேகான் உட்பட இந்தியாவில் நடத்தப்பட்ட சுமார் 16 பயங்கரவாத குண்டுவெடிப்புகளுக்கும் மேலானவை ஹிந்துத்வா பயங்கரவாதிகளால் நிதானமாக, ஆற அமர அமர்ந்து சதிதிட்டம் தீட்டி நடத்தப்பட்டவை என்பது வெட்ட வெளிச்சமானது. [வாசிக்க: http://www.satyamargam.com/timeline-samjotha-express.html, http://en.wikipedia.org/wiki/Saffron_terror மற்றும் http://blog.tehelka.com/facts-of-the-hindutva-terror/)

நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வந்த குண்டுவெடிப்புகளும், அதில் ஹிந்துத்துவாவின் பின்னணி குறித்த விவரங்கள் வெளியானதன் பின்னர் நீண்ட காலத்துக்கு நின்றுவிட்டதையும் எப்போதெல்லாம் இந்திய அரசியலில் பாஜக தனிமைப்படுத்தப்படும் சூழல் ஏற்படுகிறதோ அல்லது பாஜகவுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிப்புகள் நடந்து, அடுத்த நிமிடங்களிலேயே சொல்லி வைத்தது போல் ஒரு சில ஃபாசிஸ ஊடகங்களில் மட்டும் முஸ்லிம்கள் அவற்றை நடத்தியதாக செய்திகள் வெளியாகி விடுவதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். (வாசிக்க: The Rise Of Hindutva Terrorism : http://www.outlookindia.com/article.aspx?265400 )

எப்பாடு பட்டாவது மோடியினைத் தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்து, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க பாஜக தயாராகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிலுள்ள சிவசேனா உட்பட பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியே அதனை எதிர்த்து உட்கட்சி போரில் இறங்கியதும், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான பீகாரின் நிதீஷ்குமார் கட்சிக் கூட்டணியிலிருந்தே விலகி வெளியேறியதும், இதனைத் தொடர்ந்து பீகார் வந்த மோடி, "நிதீஷ்குமாருக்குத் தக்க பாடம் புகட்டப்படும்!" என்று பகிரங்கமாகவே அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து பீகார் புத்தமடத்தில் இக்குண்டுவெடிப்புகள் நடந்ததையும் கண்முன்னே வரிசைப்படுத்திப் பார்க்கவேண்டும். (பார்க்க: மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டம் : திக்விஜய்சிங்!)

சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த புத்த கோயிலின் மிக உயரமான கோபுரத்திலும், வெடிக்காத ஓரிரு குண்டுகள் பொருத்தப் பட்டிருந்ததாக காவல்துறை அறிவித்திருந்ததும் குறிப்பிட்டு கவனிக்கத்தக்கது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இச்சம்பவங்களின் பின்னணியில் பலமான அரசியல் சதித் திட்டங்கள் பின்னப்பட்டிருப்பது புலப்படுகிறது. இதனைப் புரிந்து கொள்ள முப்பரிமாணக் கண்ணாடி ஒன்றை மாட்ட வேண்டியுள்ளது. எனவே சம்பவங்களுடன் தொடர்பு படுத்தப் பட்ட பர்மா, இலங்கை முஸ்லிம்களின் நிலைமைகளையும் சற்று பார்த்து விட்டு வருவோம் - அபூ ஸாலிஹா

பகுதி- 2

(தொடரும்...)

THANKS TO SOURCE:http://www.satyamargam.com/articles/series/research-articles/2132-buddhists-a-new-weapon-of-hindutva-terrorists.html

மேலும் படிக்க... Read more...

புத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்திகளின் 'அரிப்பு'களும்

>> Tuesday, July 9, 2013

புத்தகயா குண்டுவெடிப்பு! மோடிக்கு தொடர்பு? புத்தகயா குண்டுவெடிப்புக்கு நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை

பீகாரில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள்வெடித்து, இரண்டு புத்தத்துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த பயங்கரவாதச்செயல் மிகவும் கோழைத்தனமான செயல் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இச்செயல் நிச்சயம் கண்டிக்கப்படவும், செய்தவர்கள்யாராக இருந்தாலும்கட்டாயம் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், இந்தக்குண்டு வெடிப்புகளைச் சாதகமாக்கிக்கொண்டு சில தரங்கெட்ட ஊடகங்கள் வெளிப்படுத்தும் உள்ள வெடிப்புகளோ சற்றும் சகித்துக்கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. 'பூக்கயிறு' திரிக்கும் ஊடகங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் இது முஸ்லிம்தீவிரவாத செயல்என்பது போலவே செய்திகளை 'ஊர்ஜிதப்படுத்தி' வெளியிடுகின்றன.

மத்திய உளவு அமைப்புகளும் ஒவ்வொரு குண்டுவெடிப்புக்குப்பிறகும் ஆரம்பத்தில் அவசரகோலத்தில் வெளிப்படுத்தும் தம்வழக்கமான வசனத்தையே இம்முறையும் கூறியுள்ளன. "ஏற்கனவே எச்சரித்தோம்".

ஊடகங்களில் நடுநிலை போல வேடமிடும் ஏடு ஒன்று தமிழகத்தில் உள்ளதென்றால்அது தினமணி தான். அதன்ஆசிரியர், புத்தகயா குண்டுவெடிப்புகளைக் கண்டிக்கும் தனது தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறார் :

//அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமுக்கு கொள்கை அளவில் நேர்எதிரிடையான மதம்பௌத்தம்தான். இஸ்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் இறை மறுப்பாளர்களையும் "காஃபிர்'கள்" என்று இடித்துரைக்கிறது. ஏனைய மதங்கள் இஸ்லாமைப்போல ஏகஇறைவனை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர இறை மறுப்பை அங்கீகரிக்கும் மதங்களல்ல. ஆனால், பௌத்தத்தின் அடிப்படையே இறை மறுப்பு என்பதால் பௌத்தமும் இஸ்லாமும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை.

அதனால்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாமியான் புத்தர்சிலைகளைத் தகர்க்க முற்பட்டனர். ஆகவே மியான்மர் மற்றும் இலங்கையில் இந்த இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதற்காக இந்தியாவிலுள்ள புத்த கயையில் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.//


இதைப்படித்தப்பிறகு மனதில்தோன்றியது : "ஏம்ப்பா, முடிவே செஞ்சிட்டியா?" என்கிற கேள்வி தான். காவல்துறையும், அரசு அமைப்புகளும், தீர விசாரித்து முடிவெடுக்கும்முன்பே 'இன்னார்தான் செய்திருப்பார்கள்' என்று காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஒரு 'நடுநிலை' ஊடகம் முடிவெடுக்கிறது என்றால், அந்த ஊடகத்தைப்பற்றி என்னவென்று சொல்வது. (இந்த இடத்தில் குறிப்பிட்டுச்சொல்ல நினைப்பது : பயங்கரவாதச் செயல்கள் யார் செய்திருந்தாலும் நிச்சயம் ஊடகங்கள் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு பாரம்பரிய ஊடகம் 'தன்மன ஊகத்தை' அல்லது ‘மன ஊன’த்தை உண்மை போல எழுதுவதைத் தான்ஏற்க இயலவில்லை. மாறாக, ஊடகங்களின் இப்போக்கு கருத்தியல் தீவிரவாதமாகவே கருதப்படத்தக்கது).

இத்தனைக்கும, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பதினைந்து கண்காணிப்புப் படக்கருவிகளைக் கொண்டு 48 மணி நேர நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் காவல் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் வினோத் மிஸ்த்ரி ஒரு முஸ்லிமல்லாதவரே.

எந்தவொரு குண்டு வெடிப்பிலும், தொடகத்தில் 'க்ளிஷே'வாக முதலில் முஸ்லிம் அமைப்புகளின் பெயரை *உரத்துச்சொல்வதும், பின்னாள்களில் ஆர் எஸ் எஸ் போன்ற வேறு மத பயங்கரவாத அமைப்புகளே குண்டு வெடிப்புகளுக்கு உணமையான காரணம் என்று தெரியவரும் போது இயன்ற அளவு அதை அமுக்கி வாசிப்பதும் அண்மைக் காலமாக ஊடகங்களின் இயல்பாகி வருகிறது. மாலேகாவ்ன், ஹைதராபாத், என்று தொடங்கி அதுதான் நடைபெற்று வருகிறது.

மியான்மர், இலங்கையில் நடைபெறும் பெளத்த பயங்கரவாதங்களுக்குப் பதிலடியாக முஸ்லிம் பெயரிலான தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் இதைச் செய்திருக்கும் சாத்தியங்களினும் மிகுதியாக கீழ்க்காணும் சாத்தியங்கள் வலிமையாக உண்டு என்பதை அவசரமும், அரசியற் குதர்க்கமும் நிரம்பி வழியும் தினமணி வைத்திகள் விளங்க வேண்டும்.

அவையாவன: 1). 'நிதீஷ் குமாருக்குப் பாடம் புகட்டப்படும்' என்று குஜராத் இனப்படுகொலைகளின் நாயகன் மோடி திருவாய் மலர்ந்தருளியது.

('முஸ்லிம் அமைப்புகளின்மீது சுமத்தப்பட்ட அண்மை குற்றச்செயல்களை உண்மையில் செய்தவர்களாக இந்துத்துவ அமைப்பினர் என்றே பின்னாள்களில் வெளிப்பட்டுள்ளதன் கோணத்தில் இது பார்க்கப்பட வேண்டும்)

2). கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சிபிஐ - ஐ.பி ஆகியவற்றுக்கான மோதலைத் திசைத் திருப்பும்விதமாகவும் 'அரசியல்' இதில் இருக்கலாம்.

3). இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கு மீண்டும் தன் கழுத்தை வளைப்பதை விரும்பாத அரசியல் தீய சக்திகளின் செயலாகவும் இருக்கலாம்.

4)இலங்கையில் பெளத்தர்களின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிறுபான்மையினரின்செயலாகவும்இருக்கலாம்.

5). இதே ரீதியில், இந்தியாவில் குழப்பம் விளைவிக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாகவும்இருக்கலாம்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து விடுதலைபுலிகள், மாவோயிஸ்ட் எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என சில பொறுப்புள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்.

மேலே கூறப்பட்ட சாத்தியங்கள் எல்லாமே ‘லாம்’கள் தான். ஊடகப் பொறுப்புடன் எதையும் தற்சமயம் ஊர்ஜிதமாக உறுதிப்படுத்த இயலவில்லை எனும் போது பாரம்பரியமிக்க தினமணி போன்ற ஊடகங்களின் முந்திரிக்கொட்டைத் தனங்களும் பொறுப்பின்மையான தலையங்கங்களும் தொடர்ந்து ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் அரசியல் உள்நோக்கங்களும் தேசத்தின் சாபக்கேடாகவும், நல்லிணக்கத்திற்கு ஊறாகவும் அமைவன என்றால் மிகையில்லை.

இவ்வாறு பல கோணங்கள் இந்த வெடிப்புகளுக்குப் பின்னிருக்கும் போது, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று தன் மன 'அரிப்பை' வெளிப்படுத்துகிற வைத்திகளும், அவர்தம் ஊடக நாடகங்களும் இந்நாட்டின் நல்லிணக்கத்திற்கு மிகச் சிறிதளவும் பொருந்தக்கூடியதாக அமையவில்லை என்பதையே இங்கு நாம் உணர வேண்டுவது. -பாபு.

THANKS TO SOURCE: http://www.inneram.com/article/readers/835-bodh-gaya-blast.html

புத்த கயா குண்டுவெடிப்பு!-மோடிக்கு தொடர்பு? – திக்விஜய் சிங் தகவல்!

டெல்லி: பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார்.

மியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன. மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர்.

புத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா?


முழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா?

இன்னொரு பக்கமும் பாருங்கள். அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

அதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திக் விஜய்சிங் கூறியுள்ளார்.

THANKS TO SOURCE: - http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#sthash.DN7FZyGV.dpuf

நேர்மையான விசாரணை - உறுதி செய்யுமா உச்சநீதிமன்றம்!

பீகார் மாநிலத்தில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட புத்த கோவிலில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 5.30 மணி அளவிலிருந்து 6 மணி வரை சுமார் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.

இறைவனின் அருளால் பெரிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இரு புத்த துறவிகள் காயமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை, சுமார் 13 இடங்களில் குண்டுகள் வைக்கப் பட்டுள்ளன. .

குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக அடையாள அட்டையைக் கோவிலில் விட்டுச் சென்ற வினோத் மிஸ்ரி என்பவரும், கொல்கத்தாவில் ஒருவரும் கைது செய்யப் பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். .

வினோத் மிஸ்ரி ஒரு புத்த சன்னியாசியல்லாத நிலையில், புத்த சன்னியாசி வேடமணிந்து கோவிலில் வந்துள்ளது வீடியோவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது உள் வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. .

இன்னும் விசாரணை முழுவதும் முழுமை பெறாத நிலையில் வழக்கம் போலவே ஊடகங்கள் இந்தக் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன்கள் தான் காரணம் என்றும் மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் ரியாஸ் பட்கலே ஊடகங்களிடம் வந்து கூறினாரா என்பது தெரியவில்லை! .

இந்தியாவில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஒரு தரப்பினரைக் குற்றவாளிகள் எனக் கருதி கைது செய்து சித்ரவதை செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்த பின்னர் சில நேர்மையான அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் யாரையோ காப்பாற்றும் நோக்கில் அனைத்து ஊடகங்களும் குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் ஒரே பெயரை உச்சரிப்பதும் தலையங்கம் தீட்டி தாம் சார்ந்த மத அமைப்புகளுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதும் நல்லதல்ல.


புத்த கோவில் தாக்கப்படலாம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே மத்திய உளவுத் துறை எச்சரிக்கை செய்ததாகவும் எனினும் பீகார் மாநில அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடந்தது எனவும் ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மியான்மரிலும் ஸ்ரீ லங்காவிலும் கடந்த 4 ,5 மாதங்களாகவே முஸ்லீம்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு முன்னரே நடக்காத தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியது எப்படி? .

இதில் இன்னொரு விசயமும் உண்டு. மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை உணர்ந்துள்ள பயங்கரவாத இயக்கங்கள் முஸ்லீம்களின் மீதான பௌத்தர்களின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்காக ஏன் இத்தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது? .

சில மாதங்களுக்கு முன்னர் பயங்கர தாக்குதல் நடத்த டெல்லி வந்ததாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கதினைச் சேர்ந்தவர் எனக் கூறி லியாகத் அலி ஷா என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்வதற்கு முன்னர் டெல்லி ஜாமியா மஸ்ஜித் அருகே உள்ள ஹோட்டலில் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை மீட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது. .

ஜாமியா மஸ்ஜித் அருகே செயல்படும் தங்கும் விடுதியில் ஆயுதங்களைக் கொண்டு வைத்து விட்டு பயங்கரவாதி ஒருவன் தப்பி ஓடி விட்டதாகவும் தங்கும் விடுதியில் உள்ள சி சி டி வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை டெல்லி காவல்துறை வெளியிட்டது. .
தங்கும் விடுதியில் பயங்கர ஆயுதங்களை வைத்து விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதி இது வரை கைது செய்யப் படாததும் ஊடகங்களும் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க பயங்கர சதி திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக வரும் பொது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்த நிலையில், ஜம்மு மாநில அரசும் காவல்துறையும் லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க வர வில்லை என்றும் ஜம்மு மாநில அரசின் மறு வாழ்வளிப்பு திட்டத்தின் மூலம் மாநில அரசிடம் சரணடைய வந்ததாகவும் தெரிவித்தது. .

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. .

தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், லியாகத் அலி ஷாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை அளித்த ஆதாரங்கள் உறுதி செய்யப் படாததால் லியாகத் அலி ஷா பிணையில் விடுவிக்கப் பட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் தலையிட்டு விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு வசம் ஒப்படைத்து இருக்கா விட்டால் போலி என்கவுண்டரில் லியாகத் அலி ஷா கொலை செய்யப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. .

பயங்கரவாதிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்கள் உண்மையான பயங்கரவாதிகள்தானா என்பதில் தான் பலத்த சர்ச்சை உள்ளது. .

பல குண்டுவெடிப்பு வழக்குகளிலும் அப்பாவிகள் கைது செய்யப் படுவதால், உண்மையான பயங்கரவாதிகள் வெளியே சுற்றித் திரிந்து மீண்டும் மீண்டும் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். .

மத்திய அரசையும் நம்ப முடியவில்லை; மாநில அரசுகளையும் நம்ப முடிய வில்லை. மத்திய மாநில அரசுகளே ஊடகங்களின் பொய்ப் பிரசாரத்துக்குத் துணை போகிறதோ என்ற அச்சமும் உள்ளது.
.

உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு இது போன்ற பயங்கரவாத தாக்குதல் வழக்குகளை தாமே கையிலெடுத்து, நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை முடியும் வரை ஊடகங்களுக்கு வாய்ப் பூட்டு போடுவதோடு, நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். .

THANKS TO SOURCE: http://www.inneram.com/inneram-specials/editorial/847-buddha-gaya-blast-case.html

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP