**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அயோத்தி தீர்ப்பு ‍நீதியானதா? பேரா.அருணன். VIDEO.

>> Monday, December 27, 2010

அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது. அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை. இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

பாபர் மஸ்ஜித் நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.
Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01



Prof.Arunan Speech Part-02 உரை பகுதி -02



Prof.Arunan Speech Part-03 உரை பகுதி -03

**********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

வெற்றியடைய உங்கள் வாழ்வில் மூன்று சக்திகள்

>> Monday, October 25, 2010

உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா?

இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும்.

“ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்”தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான்.
இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், பழகத்தொடங்கி பத்து நிமிஷங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிறதென்றால், உங்கள் ஆளுமைப்பண்பு தீர்க்கமாக இருப்பதாய்ப் பொருள்.

அறிமுகமான வட்டத்தில் மட்டுமன்றி, உங்களுடன் பழக நேர்கிற மூன்றாம் மனிதருக்கோ, உங்கள் பணிகளைப் பற்றிக் கேள்விப்படுகிற புதியவர் ஒருவருக்கோ, உங்கள் மீது வியப்பு கலந்த பிரியமோ – மரியாதையோ தோன்றுமேயானால், அதுதான் உங்கள் ஆளுமைப் பண்பின் அழுத்தமான அடையாளம்.

இந்த ஆளுமைப்பண்பு வளர்கிறபோது, உங்கள் வருகை எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் மற்றவர்களால் ஏற்கப்படுகின்றன. உங்களைத் தவிர்க்க நினைப்பவரும், உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்.

“அப்படியா! இதற்கு மந்திர சக்தி எதுவும் வேண்டுமா?” என்று நீங்கள் கேட்கலாம். இது மந்திர சக்தியல்ல. இதற்குத்தான் மனித சக்தி என்று பெயர்.

இந்த அபரிதமான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், என்னென்ன வேண்டும் என்பதைப் போலவே, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதும் முக்கியம்.

பலபேர் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதும் ஆரவாரமாக நடந்து கொள்வதும் ஆளுமை என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மை என்னவென்றால், அப்படி நடந்துகொள்ளக்கூடிய மனிதருக்கு ஒரேயொரு ரசிகர்தான் இருப்பார். அந்த ரசிகர் அவரேதான்.

பொருத்தமில்லாமல் துருத்திக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே விலையுயர்ந்த முந்திரிகூட, “முந்திரிக்கொட்டை” என்ற வசவுச்சொல்லை வாங்கிக் கட்டிக்கொள்கிறது.

உங்கள் செல்வமோ – செல்வாக்கோ – சிறப்புப் பட்டங்களோ – பொது இடங்களில் உங்களாலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டால், அவற்றுக்கும் மதிப்பிருக்காது. நீங்களும் மதிப்பிழக்க நேரிடும்.

உங்கள் ஆளுமையை வலிமையாக வெளிக்காட்டப் போவது, உங்கள் பணிகளும் பணிவும் மட்டும்தான். வலிமைமிக்க மனிதர் எளிமை மிக்கவராய் விளங்கும்போதுதான் அவர் இருக்கும் இடமே அவரின் தாக்கத்தை உணர்கிறது. அவரைக் கூர்ந்து கவனிக்கிறது.

ஆர்ப்பரித்து வருகிற காட்டு யானையைக் கண்டால் மிரண்டு விலகுகிற மனிதன், கோவில் யானையைக் கண்டால் அருகில் சென்று ஆசீர்வாதம் வாங்குகிறானே….. இது ஏன்?

வலிமை மிகுந்த யானை பணிவின் வடிவமாய் கட்டுப்பட்டு நிற்பதுதான் காரணம். இதற்கு உளவியல் பூர்வமான காரணம் ஒன்றும் இருக்கிறது.

தன்னுடைய நிலையில் மனிதன் உயர்கிறபோது, அவனிடம் இனிமையான இயல்பான பண்புகள் இருக்காது என்கிற கணிப்போடுதான், சராசரி மனிதன் சாதனையாளர்களை நெருங்குகிறார். விறைப்பான முகம், புதைந்து போன புன்னகை – அதைவிட வேகமாய் சில சமயம் வெளிப்படும் செயற்கைப் புன்னகை – உயிர்ப்பில்லாத ஓரிரண்டு சொற்கள், கம்பீரம் என்று நினைத்து கடுகடுப்பாய் இருக்கிற முகம் – இவையெல்லாம் உங்களை மேலும் அந்நியப்படுத்துவதோடு, இனந்தெரியாத எதிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

எனவே மனிதர்கள் உங்களிடமிருந்து தள்ளி நிற்பதோடு உங்களைப்பற்றிய எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உங்களிடம் பயன்கருதிப் பழகுபவர்கள் மட்டுமே பணிந்தும் குழைந்தும் பேசுகிறார்கள்.

“பெருக்கத்து வேண்டும் பணிவு” என்கிறார் திருவள்ளுவர். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்கிறார் கண்ணதாசன்.

வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்ட போது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய அந்த மூன்று அம்சங்களையே அமைப்பின் நோக்கமாய் ஆக்கினோம்.

அந்த மூன்று அம்சங்கள் இவைதான்: பணம், பரிவு, பக்குவம்.

உங்களுக்கு வருகிற பணம், அடுத்தவர்களின் பொறாமையைத் தானே அதிகரிக்க முடியும்? உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.

பணம் என்கிற முதல் விஷயத்தை நீங்கள் புத்திசாலித்தனமாக அணுகினாலேயே பரிவு – பக்குவம் ஆகியவற்றை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.

ஓரளவு பணம் சேர்க்கத் தொடங்குகிறீர்கள். அந்தப் பணம் உங்களை நம்பிக்கைமிக்கவராக ஆக்குகிறது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் தாண்டி அதிகமான சில தேவைகளையும் உங்களால் எளிதில் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.

இந்தப் பணம், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய ஒரு கருவி என்ற அளவில் அதற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். சிலபேர், பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவி என்று கருதிவிடுகிறபோது அவர்கள் கண்களைப் பணம் மறைக்கிறது. வாழ்க்கையில் உறவுகளை, உற்சாகத்தை, உணர்வுகளை எல்லாம் அடகுவைத்துவிடுகிறார்கள். அவர்களை அண்டிப் பிழைக்கும் சிலரைத் தவிர மற்றவர்கள் விலகி நிற்கிறார்கள். வெறுப்பாகப் பார்க்கிறார்கள்.

ஆனால், சில செல்வந்தர்களைப் பாருங்கள் – சமூகத்தின் எல்லாத் தரப்பினரும் அவர்களை ஆர்வமாய் நெருங்குகிறார்கள் – அன்பு செலுத்துகிறார்கள். என்ன காரணம்? அந்தப் பணக்காரர்கள், தங்களிடம் சேர்ந்த பணத்தை ஒன்றும் பார்ப்பவர்களுக்கெல்லாம் பகிர்ந்து கொடுப்பதில்லை. ஆனால், அந்தப் பணத்தால் தங்களுக்கு வாழ்க்கை மேல் ஏற்பட்ட நம்பிக்கையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள்.

தங்களால் முடிந்த அளவு பணத்தை பிறர் நலனுக்கு உதவினாலும், எல்லையே இல்லாத அளவுக்கு அடுத்தவர்கள்மேல் அக்கறை கொள்கிறார்கள். மனிதர்களை, அவர்களின் இப்போதைய நிலையை வைத்து எடைபோடாமல், மதித்துப் பழகுகிற பக்குவத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல – வாழ்க்கையை வாழ்வதற்குத் தான் பணம் ஒரு கருவி என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இது பணத்திற்கு மட்டுமல்ல. உங்களிடம் இருக்கும் கூடுதல் திறமை எதற்கும் இது பொருந்தும்.

அறிஞர்கள், நம்மிடையே நிறைய உண்டு. சில அறிஞர்கள் அரங்கத்தில் பேசுகையில் அவர்களின் அபாரமான அறிவால் ஈர்க்கப்பட்டு, அருகே செல்பவர்கள், பழகிப்பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் விலகி வருவதுண்டு, என்ன காரணம்?

தங்கள் தனித்தன்மையான ஆற்றலைக் காரணமாக வைத்து மற்ற மனிதர்களிடமிருந்து விலகியிருக்கிற விசித்திரமான எண்ணம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது.

சில அறிஞர்களோ, உரை நிகழ்த்தும்போது காட்டும் அதே அக்கறையையும், பக்குவத்தையும் தங்களிடமும் நெருங்கி வருபவர்களிடம் வெளிப்படுத்துவார்கள்.

பணம் என்பது உங்களிடம் இருக்கிற கூடுதல் சிறப்பம்சத்தின் குறியீடு. எல்லோரிடமும் நெருங்கிப் பழகினால், அவர்கள் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்ய வேண்டி வருமோ என்ற கவலையாலேயே சிலர் விலகி நிற்பதுண்டு. அதற்கு அவசியமில்லை. ஒருவர் உதவி கேட்கிறார் என்றால், அது நியாயமென்று பட்டு நீங்கள் உதவுகிற நிலையிலிருந்தால் உதவலாம். அல்லது நாசூக்காக மறுத்துச் சொல்லிவிடலாம்.

உங்களை ஆளுமைமிக்க மனிதராக செதுக்கிக்கொள்ள என்ன வழியென்று இப்போது வரைபடம் ஒன்றைப் போடலாம். முதல் விஷயம், உங்களை தனிப்பட்ட முறையில் தகுதிமிக்கவர் ஆக்கிக் கொள்வது. அது பொருளாதாரம் – சமூக மதிப்பு – செல்வாக்கு என்று எந்தத் தகுதியாகவும் இருக்கலாம். அதனை உங்கள் முயற்சியால் பெருக்கிக்கொள்வது.

இரண்டாவதாக, சக மனிதர்களிடமிருந்து உங்கள் தகுதிகளே உங்களை பிரித்துவிடாமல் பார்த்துக்கொள்வது. இதற்குத்தான் பரிவு என்கிற அம்சத்தைப் பற்றிப் பேசுகிறோம். அடுத்த மனிதரிடம் நீங்கள் பரிவு காட்டும்போது உங்களை நீங்களே கொஞ்சம் விரிவுபடுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் அடிப்படையான சக்தியின் எல்லை இன்னும் விரிவடைகிறது. எத்தனை எத்தனை மனிதர்களிடம் நீங்கள் பரிவு காட்டுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சக்தி விரிவடைந்து கொண்டே போகிறது.

இதன் விளைவாக உங்களுக்கு ஏற்படும் தன்மைக்குப் பக்குவம் என்று பெயர் சொல்கிறார்கள். உங்கள் செல்வம் – கல்வித்தகுதி – சமூகத்தில் உங்களுக்கிருக்கும் சிறப்பு நிலை எவற்றோடும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், மேலும் பணிவுடன் எளிய மனிதராய் நடந்துகொள்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு – இந்தக் கட்டுரையில்கூட எழுதமுடியாத அளவுக்கு சூட்சுமமான உள்நிலை வளர்ச்சிகள் உங்களுக்கு உருவாகின்றன.

நீங்கள் பகட்டாக இருப்பதைவிட பணிவாக இருப்பது வசதியானது என்பதற்கு நகைச்சுவையான காரணம் ஒன்றை நான் சொல்வதுண்டு. உங்கள் பெருமைகளைப் பற்றி உங்களுக்கு ஒருபெருமித உணர்ச்சி இருக்குமானால் அதில் ஓர் அடிப்படை சிரமம் இருக்கிறது. சந்திக்கிற ஒவ்வொருவரிடமும் உங்களைப் பற்றி நீங்களே பேசவேண்டியிருக்கும். ஆனால் பலம் பொருந்திய நிலையில் இருந்தும் நீங்கள் பணிவோடும் பக்குவத்தோடும் நடந்துகொண்டால் ஒரு வசதி இருக்கிறது. உங்கள் பெருமைகளை, உங்களைத் தவிர எல்லோரும் பேசுவார்கள்.

பணம் என்கிற ஒரு பலத்தை எப்படி விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் சம்பாதிக்கிறீர்களோ, அதே விழிப்புணர்வோடும் விருப்பத்தோடும் பரிவு – பக்குவம் ஆகிய அருங்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கிற இடத்தில் உங்களைச் சுற்றி அபரிதமான ஈர்ப்பு சக்தி உருவாகும். நீங்கள் நடமாடும் இடங்களில் உங்களைப் பற்றிய நல்லெண்ண அலைகள் தோன்றும். அவையே கவசமாய் இருந்து உங்களைக் காக்கும்.

உங்களையும் அறியாமல், உங்கள் செல்வாக்கு வட்டம் விரிவடைந்து கொண்டே போகும். உங்களைப் பற்றி யாரோ எங்கோ பேசிக் கொண்டார்கள் என்று உங்கள் காதுக்கு வருகிற செய்திகளில் பெரும்பான்மையானவை, உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களாகவே இருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். இது மந்திர சக்தியல்ல, மனித சக்தி. பணம் – பரிவு – பக்குவம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை யார் உணர்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் வெற்றி!! - ஆசிரியர்: மரபின் மைந்தன் ம. முத்தையா

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மனதுக்குள் ஈட்டியிறக்கும் காட்சிகள்.

>> Monday, September 27, 2010

அரையும் குறையுமாகக் கடித்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் ஏழை குழந்தைகள் கூட்டம்.
படத்தின் துவக்கத்தில் கே.எஃப்.சி உணவகத்தில் இளம் பெண்கள் புன்னகையும், கதையுமாக சிக்கனை அரையும் குறையுமாகக் கடித்து உயர்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிக்க, பின்னர் தொடரும் காட்சிகளில் மிச்சம் மீதிகளைப் பொறுக்கும் ஓர் ஏழையும், அவன் கொண்டு செல்லும் அந்த மிச்ச மீதிக்காகக் காத்திருக்கும் குழந்தைகள் கூட்டமும் என மனதுக்குள் சட்டென ஈட்டி இறக்குகின்றன காட்சிகள்.

Ferdinand-dimadura இயக்கியிருக்கும் Chicken-a-la-Carte குறும்படம்.





இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.

>> Thursday, September 23, 2010


கொஞ்சும் குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.
இதை அவசியம் கேட்டு பய‌னடையுங்கள்.

வினாக்களும் பதிலும்.

குழந்தை வளர்ப்பு ப‌ற்றி ம‌னோத‌த்துவ‌ ரீதியான‌ விளக்க‌ விடியோ.-- டாக்டர் அப்துல்லா (பெரியதாசன்)

1.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.


2.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.


3.குழந்தைகளை கொஞ்சம் கவனியுங்கள்.


********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

நடந்தது என்ன? அதிர்ச்சி தகவல்கள். அப்பட்டமான உண்மைகள். PART 2.

>> Tuesday, September 21, 2010

அனைவரும் அவசியம் படிக்கவும்.

9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?.



நியூயார்க் வர்த்தக வளாகம் விமானங்களால் தாக்கப்பட்டது என்பது பொய்யான தகவல் ஆய்வு அறிவிப்பு.


அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.

மேலும் படிக்க... Read more...

ஒளிந்து கசியும் இந்துத்துவம்.

>> Thursday, September 16, 2010

அதிகார அடுக்குகளில் ஒளிந்து கசியும் இந்துத்துவம்.

குஜராத் துவங்கி கோவை வரை.................

இந்திய தேசத்தின் நிழல் கருமையாய் இருப்பதை காவியாய் மாற்ற நூற்றாண்டுகளாக இந்துத்துவ சக்திகள் முயன்றுகொண்டே இருக்கின்றனர். இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்ற அவர்கள் செய்யும் கலவரங்களும், படுகொலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


அவர்கள் செய்யும் நேரடிக் கலவரங்கள் உடனடியாக மதச்சார்பற்ற சக்திகளால் கண்டிக்கப்படுகிறது. எதிர் வினையாற்றப்படுகிறது.

ஆனால் இந்திய ஆளும் அதிகார வர்க்கத்தில் அவர்கள் ஊடுருவி சட்டப்பூர்வமாய், நீதியின் பெயரால், அதிகாரத்தின் பெயரால், அறத்தின் பெயரால் செய்யும் கொலைகளும் தவறுகளும் வெளியில் தெரிவதில்லை.

இது காவி அதிகாரிகள் மீதான விசாரணைக் காலம். அதிகார அடுக்குகளில் மறைந்து நின்று பல்லிளிக்கும் இந்துத்துவம் குஜராத் துவங்கி கோவை வரை நடத்திய அராஜகத்தின் அம்பல காலம் இது.

“குற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவில் செயல்படும் குற்றவாளிக் கும்பல்களில் எதுவும் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றவாளிக் கும்பலாகிய இந்திய போலிசின் அருகே கூட நெருங்க இயலாது. ரொம்பவும் பொறுப்புணர்வுடன் இதை நான் சொல்கிறேன்”

இது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.முல்லா அவர்கள் உத்தரப் பிரதேசத்திலுள்ள ஷாகாபாத் காவல்துறையினர் குறித்த தீர்ப்பில் 1961 ஆம் ஆண்டு குறிப்பிட்ட வாசகங்களாகும்.
இந்தத் தீர்ப்பை பார்த்து அதிர்ந்த உத்தரப்பிரதேச அரசு காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் பொருட்டாவது இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது.

இந்த முறையீட்டை தள்ளுபடி செய்த நீதியரசர் முல்லா கூறினார் “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்லமீனை தேடும் முட்டாள் நானல்ல” என்றார்*.

பாவம் இன்றைய காவல் துறையின் வளர்ச்சியை அறியாதவர். நீதியரசர் இன்று தீர்ப்பளித்திருந்தால் “நல்ல மீன்களே இல்லாத நாறிய கூடையில் நல்ல மீனை தேடச் சொல்லாதே” என்று கோபப்பட்டிருப்பார்.

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான புகார்களில் 60 சதம் காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் தான் பதிவாகிறது. பதிவானவைகள் தான் 60 சதம் பதிவாகாமல் இன்னும் எத்தனையோ?

காவல் நிலையக் கொலைகள், கடுமையான சித்திரவதைகள், பாலியல் கொடூரங்கள், மூன்றாம்தர சித்திரவதைகள், என்கவுண்டர் கொலைகள் என பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. அதைவிட மிகப்பெரிய அவலம் குஜராத்தில் தங்களது பதவி உயர்வுக்காக இஸ்லாமிய மக்களை போலி என் கவுண்டரில் படுகொலை செய்வது அதிகரித்துக்கொண்டே இருப்பது.

யாருக்காக? எதற்காக?

கடந்த 2010 ஜூலை மாதம் 22 ஆம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டின் கதவில் விசாரணை சம்மன் ஒட்டப்பட்டது. அந்த அமைச்சரின் வீட்டுக் கதவில் அது ஒட்டப்பட்ட காரணம் அதை அவர் வாங்காததுதான். அந்த அமைச்சர் அமித் ஷா. குஜராத்தின் நரேந்திர மோடி அரசின் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர். மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இவர் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டு 3 நாள் விசாரனை செய்யப்பட்டார். இவர்மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணை செய்யும் காரணத்தை அறிய 2005 நவம்பர் 26 தேதியில் நடந்த சம்பவத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அன்றைய தினம் சொராபுதின் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோர் ஆந்திரப் பிரதேச அரசு வாகனத்தில் மகா ராஷ்ட்ராவில் குஜராத் காவல்துறையால் விசாரணை என்ற பெயரில் கடத்தப்படுகின்றனர். இருவரும் பிணங்களாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர்.

அந்த என்கவுண்டர் கொலையை பார்த்த ஒரே சட்சி துள்சி பிரஜாபதி அவரும் மார்ச் 2006 ஆம் ஆண்டு என்கவுண்டரில் காவல்துறையால் படுகொலை செய்யப்படுகிறார். சொராபுதின் ஷேக் மரணத்திற்கு நீதி கேட்டு, சொராபுதின் ஷேக் தீவிரவாதி அல்ல என சொல்லி அவரது அண்ணன் ரபாபுதின் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டுகிறார். உச்சநீதி மன்றம் மத்திய புலனாய்வுத் துறையை இவ்வழக்கை விசாரணை செய்யச்சொல்லி பணிக்கிறது. மத்திய புலனாய்வுத்துறை இந்த என்கவுண்டர் கொலைகள் திட்டமிட்ட கொலை என்றும் இதில் அந்த மாநில முன்னாள் உள்துறை துணை அமைச்சர் சம்பந்தபட்டிருக்கிறார் என அவரை கைது செய்தது.

மற்றொரு சம்பவம். 2004 ஜூன் 15 இஸ்ரத் ஜஹன், ஜாவீத் ஷேக், சீஷன் ஜோஹர், அம்ஜத் அலி ரானா ஆகிய நண்பர்கள் அகமதாபாத் அருகில் உள்ள நரோடாவில் காரில் பயணம் செய்யும் போது குஜராத் காவல்துறையால் என் கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை திரைக்கதை எழுதியது.

ஆனால் இதுவும் போலி என்கவுண்டர் கொலைகள் என மத்திய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதற்கு கொல்லப்பட்ட இளம் பெண் இஸ்ரத்தின் தாயார் ஷமீமா நீதிமன்றத்தின் கதவை தட்டியதுதான் காரணமாகும். இப்படி குஜராத்தில் கடந்த சில ஆண்டுகளில் 34 என்கவுண்டர் கொலைகள் நடந்துள்ளது.

இவைகள் ஒவ்வொன்றையும் விசாரித்தால்தான் இன்னும் உண்மைகள் வெளிவரும். இந்தப் படுகொலைகள் நடந்திட காரணம், ஆட்சியில் உள்ள இந்துத்துவ மதவெறியர்கள் மத்தியில் தங்களது பராக்கிரமங்களைக் காட்டி பதவி உயர்வு பெறத் துடிக்கும் அதிகார வர்க்கத்தின் பதவி வெறியாகும்.

மற்றொன்று இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதத்தை காட்டி இந்துத்துவ வெறியை முடிந்த அளவு மக்கள் மனங்களில் விதைப்பது.

இந்த மதவெறிதான் ஆர்.எஸ்.எஸ் காணும் அகண்டபாரதம் என்பதை உருவாக்கும் என நினைக்கின்றனர்.

பாட்னா, அஜ்மீர், கான்பூர், மலேகாவ், தானே, கோவா, நாந்தட், ஹைதராபாத் அகிய இடங்களில் இந்து மதவெறியர்கள் வைத்த வெடிகுண்டுகள் குறித்த விசாரணை ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்கும் நிலை உருவாகி உள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பூதம் குஜராத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் பயன்படுத்தப்பட்டு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பழிவாங்கப்பட்டதும் நடந்தது.

குஜராத் வடிவம் மாறி கோவையில்...
2006 ஜூலை மாதம் கோவையில் வெடி குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது, தொடர் குண்டு வெடிப்பு நடத்தி தமிழகத்தில் நாசவேலைக்கு சதி, கோவையை அடுத்து சேலத்துக்கும் ஆபத்து, போலிஸ் அலுவலகங்களை தகர்க்க சதி என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துகளில் செய்திகளை வெளியிட்டன.

1998 பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த கொடூர குண்டு வெடிப்பு சம்பவத்தின் ரணங்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்ததால் மக்கள் அதிர்ந்து போனார்கள்.

மேலும் நமது ஊடகங்கள் தங்கள் வசதிக்கும் கற்பனைக்கும் தகுந்தவாறு செய்திகளை முந்தித்தந்தனர்.

இந்து தலைவர்களை தீர்த்துக்கட்ட சதி, கோவையில் கைதான தீவிரவாதிக்கு கேரள குண்டு வெடிப்பில் தொடர்பு, மும்பை தீவிரவாதிகளுடன் தொடர்பு, என்று அடுத்த நாளும் தொடர்ந்தது.

ஒசாமா பின்லேடன் கோவை வந்து தீவிரவாதிகளுக்கு திட்டம் தீட்டி தந்தார் என்று மட்டும்தான் எழுதவில்லை. நீண்ட தாடி, தலப்பாக்கட்டுடன் யாரும் கண்ணில் தட்டுப்படாத காரணத்தால் இதை எழுதவில்லை போலும். தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டதால் சதி அனைத்தும் முறிய டிக்கப்பட்டது என்று ஊடகங்கள் கூறி முடித்தன.

என்ன நடந்தது? 2006 ஜூலை 22 அன்று நள்ளிரவில் ஹாரூன் பாஷா, மாலிக் பாஷா, அதீக்குர் ரஹ்மான் (எ) போலேசங்கர், ரவி (எ) திப்புசுல்தான், சம்சுதீன் உள்ளிட்ட ஐந்து பேரை கோவை போலிசார் கைது செய்தனர். பைப் குண்டுகள், மேப்புகள் கைப்பற்றப்பட்டன. சதியை திறமையாக முறியடித்த உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, போத்தனூர் பி-13 இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோருக்கு கமிஷனர் கரண் சின்கா பாராட்டு.

அப்போது தமிழகத்தின் அனைத்து செய்திகளும் பின்னுக்குப் போய் மீடியாக்களில் இந்த வெடிகுண்டு குறித்த விவாதங்களே ஆக்கிரமித்திருந்தது.

ஆனால் காவல்துறையினர் தயாரித்த கதையில் ஆங்காங்கு ஓட்டை இருந்ததால், காவல்துறையின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பத்திரிகைகள் மறுபக்கத்தை தேட ஆரம்பித்தன.
சில தகவல்களைத் திரட்டின. ஆனாலும் சதியின் முழுபரிமாணத்தையும் அவர்களால் காணமுடியவில்லை.

அதே நேரத்தில் கைதான ஹாருன் பாஷா குறித்து இருந்த நன்மதிப்பு முறையான நீதிவேண்டும் என கோவை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகள் களம் இறங்கிவிட்டது.

கமிஷனர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடமும் முறையிட்டன. அதிகார வர்க்கத்திற்கு மனு போட்டனர். எதிர்ப்புக் குரல் வலுக்கவே, முதலில் உதவிகமிஷனர் நிஜாமுதீன் தலைமையில் விசாரணை நடந்தது. சில சந்தேகங்களை எழுப்பியதோடு விடை காணாமலே அவரும் விடைபெற்றார். வழக்கு சிபிசிஐடி-யின் வசம் போனது. அதன் சிறப்புப் புலனாய்வுக்குழு தலைவராக ஆர்.பாலன் களமிறங்கினார்.

ஏறத்தாழ 15 மாதகாலம் கடுமையான விசாரணையை மேற்கொண்டார். நிதானமாக உண்மைகளை உறுதி செய்துகொண்டார். அவர் எடுத்திருக்கும் வழக்கு மிகவும் நுட்பம் வாய்ந்தது மட்டுமல்ல, தேசபாதுகாப்போடு சம்பந்தபட்டது. எனவே அறிவியல் பூர்வமான தரவுகளையும் சேமித்துக்கொண்டார்.
அவரது விசாரணையின் துவக்கத்திலேயே தமிழக காவல்துறையின் கேவலமான வன்மம் மிகுந்த அணுகுமுறை தெரிந்தது.
இருப்பினும் நீண்ட விசாரணைக்குப் பின் தன்னுடைய இறுதி அறிக்கையில், கீழ்வருமாறு எழுதி முடித்தார்

“பி-13 போத்தனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 1067/2006 இல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120 (பி) 2/இ- வெடிபொருட்கள் சட்டம் 1908, பிரிவு-5இன் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவலறிக்கை மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டு, அதற்காக தயாரிக்கப்பட்ட கைப்பற்றல் மகஜர்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை, பொய்யானவை என்று என்னுடைய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் என்னால் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களும், வாக்குமூலங்களும் மேற் கூறப்பட்ட தகவல்களை அறுதியிட்டு உறுதிப்படுத்துகின்றன. எனவே, இது பொய் வழக்கு என்று கூறி இவ்வழக்கை நான் முடிக்கிறேன்.’’

அவர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் மேலும் கூறுகிறார் “காவல்துறை அதிகாரிகளைத் தவிர, மற்ற சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த அனைத்து சாட்சியங்களும், மேற்படி வழக்கும் முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதையும், மேலும் இந்த வழக்கில் கூறப்பட்டதைப் போல வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தும் விதமாக உண்மைகள் வெளிவந்துள்ளது” என்று கூறுகிறார்.
அதாவது காவல் துறையினர் தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்படவில்லை.

அப்படியாயின் ஏது அந்த வெடி குண்டு? யார் செய்தது? யார் போலிஸ் வசம் கொடுத்தது? வெடிகுண்டு செய்பவர்களோடு காவல்துறைக்கு உறவா? அல்லது அவர்களே வெடிகுண்டுகளை செய்தார்களா? தமிழக அரசாங்கம் விசாரித்ததா? விசாரிக்க வேண்டாமா? உண்மை வெளிவந்துவிட்டதால் வெடிகுண்டே இல்லை என்று கூறுவார்களா? அப்படியெனில் வெடி குண்டு வழக்கு ஏன் புனையப்பட்டது?

அடுத்து காவல்துறையினர் எப்படி திருட்டுத்தனமாக நடந்துக்கொண்டனர் என்பதற்கு அசைக்க முடியாத அத்தாட்சியை தருகிறார்.

குற்றம்சாட்டபட்டு கைது செய்யப்பட்ட 5 நபர்களின் வீட்டுக்கும் ஆய்வாளர் பால்ராஜ் என்பவர் தன்னுடன் ஒரு உதவி ஆய்வாளர், எட்டு தலைமைக் காவலர்கள், ஒரு காவலர், ஒரு கிராம நிர்வாக அலுவலர், ஒரு வருவாய் அலுவலருடன் சென்று கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவை அனைத்தும் பொய்யானவையாகும். எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா.

இவர்கள் அனைவரும் சென்று கைது செய்யப்பட்டதாக கூறும் நேரத்தில் காவல் நிலையங்களில் நடக்கும் வருகைப் பதிவு நிகழ்வில் (ரோல் கால்) போத்தனூர் மற்றும் குனியமுத்தூர் காவல் நிலையங்களில் கலந்துகொண்டதாக காவல் நிலைய பொது நாட்குறிப்பில் பதியப்பட்டுள்ளது.

ஆக இவர்கள் கைது செய்யச் சென்றது பொய்யாக இருக்க வேண்டும்.

அல்லது காவல் நிலையத்தில் பொய்யாக எழுதி இருக்க வேண்டும்.

இரண்டும் உண்மையாக இருக்க முடியாது.

இது அப்பட்டமான விதிமீறல். அதே போல கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலருடன் சென்றதாகச் சொன்னதும் பொய்யானதுதான். இதை விசாரணையில் அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். இன்னும் நிறைய விபரங்கள் காவல்துறையை அம்பலப்படுத்துகிறது அந்த அறிக்கை.

யார் குற்றவாளிகள்...
பொய்வழக்கு புனையப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

ஒரு மாதகால சிறைவாசம், விசாரணையில் பட்ட மன உலைச்சல். அந்த ஐந்து குடும்பங்களும் அடைந்த வேதனை. சமூகத்தில் பட்ட அவமானங்கள். குண்டு மீண்டும் வெடிக்குமோ என்ற பீதி. அதனால் அதிர்ந்து போன அப்பாவி மக்கள்.

இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை?
இந்த காயத்திற்கு மருந்திடுவது யார்?

சி.பி. சி.ஐ.டி அறிக்கை அளித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பொய்யான குற்றச்சாட்டு புனைந்து பீதியை உண்டாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

எந்த தண்டனையுமின்றி வெடிகுண்டு தயாரிப்பாளர் ரத்தினசபாபதி அதே கோவையில் மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக தொடர்கிறார்.

இந்த சம்பவம் நடந்தது கலைஞர் ஆட்சியில்தான்.

காவல் துறையின் மீது குற்றம்சாட்டப்பட்டதும் அவர் ஆட்சியில் தான். சிறுபான்மையினர் நலன் காப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கலைஞர் இதுவரை மவுனம் சாதிப்பது எதனால்.

மைனாரிட்டி திமுக என அதிமுக தலைவி பேசியதை பார்த்து கொதித்தெழுந்து கோவையில் பேசிய முதல்வர் “ஆமாம் நாங்கள் மைனாரிட்டிதான் அதாவது மைனாரிட்டியை ஆதரிக்கும் மைனாரிட்டிகளின் ஆட்சி” என்று வார்த்தை ஜாலங்களை வீசுகிறார்.

வார்த்தைகளை அடுக்கி விளையாடும் எளிதான காரியமல்ல இது. குஜராத்தைப் போல அதிகாரத்தின் அடுக்குகளில் மறைந்து தனது கோரமுகத்தை இந்துத்துவா நிறுவுவதை எதிர்த்து சமர் புரிய வேண்டிய தருணம் இது. பெரியாரின் சுண்டு விரலை பிடித்து வந்ததாக தம்பட்டம் அடிப்பவர் என்ன செய்ய போகிறார்?

(ஆதாரம்: கோவை போலீஸ் நடத்திய வெடிகுண்டு நாடகம். இலக்கிய சோலை- 25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை-600003)

THANKS TO : நட்புடன் ரமேஷ் http://natputanramesh.blogspot.com/2010/09/blog-post.html
============================

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மனித உடம்பின் அதிசயம்!

>> Wednesday, September 15, 2010

மனித உடம்பு எனும் அதிசயம்!
நாம் எதையெதையோ அதிசயம் என்று சொல்கிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான்.

கீழ்க்கண்ட உண்மைகளைப் படித்தால் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்...

மனிதர்களுக்குச் சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது.

மனித உடம்பில் பெரிய செல், பெண்ணின் அண்டம். சிறிய செல், ஆணின் உயிரணு.

நாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.

சராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்.

உங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன. மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன.

நமது மூளை செல்லால் `என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கலைக் களஞ்சியம் போல 5 மடங்கு தகவல்களை வைத்திருக்க முடியும்.

இரண்டு பாதங்களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன.

உங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஒரு `பிளேடை' கரைத்துவிட முடியும்.

வாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்வதற்கு 7 நொடிகள் ஆகின்றன.

நமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணீரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.

உங்கள் பல்லின் `எனாமல்'தான் உடம்பிலேயே கடினமான பொருளாகும்.

உங்களின் கட்டைவிரலும், மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்.----------------
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

கழுத்தையும் நெரிக்கும் கசகசா..! பறக்கும் பயணிகள் ஜாக்கிரதை!

>> Tuesday, September 14, 2010

வளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் தண்டனை:

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு?

சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.


இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.

அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை.

இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.

இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது.

இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!

சென்னை செய்த எச்சரிக்கை! முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.
கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார்.

அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.

கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.
இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது!

இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார்.

இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.
கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது.

இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்!'' என்றார்கள்.

நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக்கிறார்கள்!'' என்றார்கள்.
கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை.

மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.
'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது.


அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது,

இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய்.

ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான். இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும்.

அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து,
'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.


உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம்.

''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்!

சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி.

இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள்.

அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள்
,

இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள்.

கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு.
எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.

ஸ்டார் பார், குளிர்பான கிக்! இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது.

வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.
கசகசா ஏன் கதி கலக்குது?
உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.


இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம்.

'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
-ஜூனியர் விகடன்
thanks to:http://tvcode.blogspot.com/2010/09/blog-post_06.html

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்


கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பான் பராக், வாசனைப் பாக்கும் கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான்.

மேலும் படிக்க... Read more...

அப்பட்டமான உண்மை. 9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால்?. PART 1.

>> Monday, July 26, 2010

அப்பட்டமான உண்மை.
9/11 இரட்டைகோபுர குண்டுவெடிப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது ?.

அவசியம் பார்க்க வேண்டிய விடியோ.

Who is behind 9/11 Twin Tower terror attack? answer by Dr.Zakir Naik in Tamil



========
இதன் தொடர்பு மேலும்



இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

தோல்வி என்பது அபிப்ராயம்தான்

>> Monday, June 21, 2010

தோல்வி?? ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான். தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர்.

தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம்.

ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள்.

மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி.

ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.
தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது.

எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள்.

அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான். -லஷ்மி பிரியா
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

பாதங்களை பயமுறுத்தும் கால் ஆணி.

>> Friday, June 18, 2010

பாதங்களை தாக்கும் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப்பது கால் ஆணி.

இது பாதத்தை தரையில் வைக்க முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உருவாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழுத்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தை தருகிறது.

இந்த கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

கால் ஆணி ஏற்பட காரணம்: பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும், வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும்.

இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.

பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
SOURCE:http://files.periyar.org.in/viduthalai/20090511/news26.html
==========
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

எதிரியை வெல்வது எப்படி? படித்து பய‌னடையுங்கள்.

>> Tuesday, June 15, 2010

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள். துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள். புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது , தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா.

சினிமாவில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், டிவி-யின் மெகா தொடர்களில் வரும் வில்லன்களை பார்க்கும்போதும், எனக்கு அவர்கள் மீது மிகுந்த இரக்க உணர்வு தோன்றும். உண்மையிலேயே அவர்கள் எத்தனை பெரிய தியாகிகள் தெரியுமா?

நாம் யாவரும் நல்ல பெயர் வாங்க எத்தனை பாடுபடுகிறோம். நல்லவன் என்று நம்மைப்பற்றி நாமே எத்தனை கதை விடுறோம். யாராவது நம்மை நல்லவன் என்று பாராட்டினால் நாம் உச்சி குளிர்ந்து போகிறோம்.

ஆனால் இந்த வில்லன் நடிகர்கள், கதாநாயகர்கள் நல்ல பேர் எடுக்க வேண்டும். அதன் மூலம் படம் வெற்றி பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு சாத்தானின் அத்தனை தீய குணங்களையும், அருவறுக்கத்தக்க தீய குணங்களையும் தன்னகத்தே உள்ளது போல நடிக்கிறார்கள்.
எத்தனை முடியுமோ அத்தனை மனிதரால் வெறுக்கப்படும் கொடுமைக்காரர்களாக தங்களைத் தோன்றச் செய்கிறார்கள்.

ஒரு இளவரசி அழகாக தோன்ற வேண்டுமென்பதற்காக அவளைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் கரிபூசி அலங்கோலப்படுத்தி வைத்தார்கள். அப்போதுதானே அந்தப் பெண்களின் மத்தியில் இந்த இளவரசி பளிச்சென்று தெரிவாள்.
அதுபோலவே இந்த வில்லன் நடிகர்களும், கதாநாயகர்களை உயர்த்த தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.

திரைப்படத்தை பார்க்கும் யாவருக்கும் அந்த வில்லன் நடிகர் மேல் தாங்க முடியாத வெறுப்பும், கோபமும் பொங்குகிறது. அதே வேளை கதாநாயகர் மேல் ஒரு வித நல்ல எண்ணம் (Image) உருவாகிறது.

இந்த வில்லன் நடிகர் கடைசிக் காட்சியில் கதாநாயகனால் பழி வாங்கப்படும்போது அந்த வில்லன் மேல் தப்பித்தவறி அனுதாபம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் முன்பு செய்த கொடுமைகள் மீண்டும் நினைவு படுத்தப்படுகின்றன.

ஆகவே நாம் வில்லன்களை வெறுக்கிறோம். கதாநாயகர்களை மதிக்கிறோம், நேசிக்கிறோம், நெஞ்சில் நிறுத்துகிறோம்.

வில்லன்கள் இல்லாமல் கதையும் இல்லை, கதாநாயகனும் இல்லை. வில்லன் இல்லாவிட்டால் கதாநாயகனுக்கு ஒரு தேவையுமில்லை.

சில திரைப்படங்களில் கதாநாயகர்களே வில்லனாகவும், இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். வேறு வேறு நடிகர்கள் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிக்கும்போது நமக்கு ஏற்படும் வெறுப்பு இரு வேடங்களில் ஒரே நடிகர் நடிக்கும்போது தோன்றுவதில்லை. அப்போது இது வெறும் நடிப்புதான். எல்லாம் கதைதான், பார்த்து ரசிப்பதற்கு மட்டும்தான், என்று தோன்றுகிறது.

ஒரு கலைக்கூடத்தில் மெழுகினால் மிக நேர்த்தியாக பொம்மைகள் செய்து வைத்திருக்கிறார்கள். அதில் காந்தியின் பொம்மையும் இருக்கிறது. அதில் ஹிட்லரின் பொம்மையும் இருக்கிறது. அந்த ஹிட்லர் பொம்மையை பார்த்து ஹிட்லர் என்று நினைக்கும் போது வெறுப்பு தோன்றுகிறது. அதையே வெறும் மெழுகுதான் என்று நினைக்கும் போது ரசிக்கிறோம், தத்ரூபமாக இருக்கும் அந்த கலையைப் பார்த்து பாராட்டு கிறோம்.

“உலகமே நாடகமேடை, நாம் யாவரும் நடிகர்கள்”-ஷேக்ஸ்பியர்

வாழ்வில் நமக்கு நாம் கதாநாயகர்களாக வாழ்கிறோம். நமக்கு சில எதிரிகள் (வில்லன்கள்) ஏதோ ஒரு வகையில் முளைக்கிறார்கள்.

நாம் இறைவனின் படைப்பு என்றும் நம் எதிரிகள் சாத்தானின் படைப்பு என்றும் நாம் நினைக்கிறோம். உண்மையில் நம்மை படைத்த இறைவன்தான் நம் எதிரிகளையும் படைத்தான்.

நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.

துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள். நம் பயத்தை வெல்ல நமக்கு சோதனை வைக்கிறார்கள். அவர்களால் நம் திறமைகள் வெளிப்படுகின்றன.

அவர்களின் கொடூரமான செயல்களால் நமக்கு நற்பெயர்கள் கிடைக்கின்றன. கனத்துப்போன நமது ஆணவம் நம் எதிரிகளால் உடைக்கப் படுகிறது.

விமானம் மேலே எழுவதற்கு அளவான எதிர்காற்று வேண்டும். இழுத்து பிடித்திருக்கும் கயிறு, பட்டத்தை மேலே செல்ல விடாமல் தடுப்பது போல தோன்றும் அந்தக் கயிறு அறுந்து போனால் பட்டம் மேலே நிற்குமா? இது போலவே தங்கள் எதிர்ப்பின் மூலம் எதிரிகள் நமக்கு சேவை செய்கிறார்கள்.

சாலைகளில் சில திருப்பங்களும், சில இடையூறுகளும் இருப்பது நம்முள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்விலும் சில தடைகள், சில சிக்கல்கள், சில விரோதிகள் வரும்போதுதான் வாழ்க்கை பயணத்தில் சப்பு இல்லாமல் செல்கிறது. ஒரு சாதிப்பு இருக்கிறது.

பதிலுக்கு பதில்
நம்மை ஒருவன் திட்டிவிட்டால் பதிலுக்கு நாம் இரண்டு திட்டு திட்டினால்தான் காயப்பட்ட நம் மனது ஆறுகிறது. அன்று இரவு நல்ல தூக்கம் வருகிறது. நம்மை ஒரு அடி அடித்தால் அதற்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுத்தால் தான் நம் மனம் தேறுகிறது.

இப்படி பதிலுக்கு பதில், பழிக்குப் பழி நாம் செய்யாவிட்டால், நம்மால் செய்ய முடியாவிட்டால் நம் மனத்தில் காயத்தின் வடுக்கள் பதிவாகின்றன. அது வஞ்சனையாக உருவெடுக்கின்றது. நம் மனத்தில் அமைதி கெடுகிறது.

இப்படி பதிலுக்குப்பதில் என்று நாம் ஆரம்பிக்கும்போது அது ஒரு சங்கிலிபோல தொடர்கிறது. அப்போது ஒரு சக்கர சூழல் மாட்டிக் கொள்கிறோம். அப்போது நமது இலக்குகள் காணாமல் போய்விடுகின்றன.

இரண்டு சேவல்கள் சண்டை போடுகின்றன. மாறி மாறி கொத்தி மணிக்கணக்கில் சண்டை போட்டு முடிவில் இரண்டுமே சக்தியிழந்து இரத்தக் காயங்களுடன் கீழே சாய்கின்றன. இதுபோல் அநேகரின் வாழ்வு வசந்தங்கள் இல்லாமல் சண்டைகளால் வறண்டு போகின்றன.

நம் எதிராளியின் செயல்கள் அல்லது பேச்சுக்கள் மட்டுமல்ல, அவர் நம்மை பார்க்கும் பார்வைகள் கூட ஏளனமாக இருந்தால் அவரிடம் நேரில் பேச வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும்.

உங்களுக்கு என் மீது ஏதாவது வருத்தம் இருந்தால், நேரடியாக என்னிடம் பேசலாம். அதைவிட்டு நீங்கள் பேசும் விதம், பேசும் வார்த்தைகள் என் சுய மரியாதையை பாதிக்கிறது. நீங்கள் பார்க்கும் ஏளனப் பார்வை என் மனதை புண்படுத்துகிறது. நீங்கள் இப்படி நடந்து கொள்வதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. இதை என்னால் அனுமதிக்க முடியாது. இது போன்ற உங்கள் செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் பேசிவிட வேண்டும்.

இப்படி பேசும்போது, இதை சற்றும் எதிர்பாராத அவர்கள், நம்மைப் பொறுத்தவரை தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். நமக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பார்கள்.

பிறரிடமிருந்து நமக்கு வேண்டிய மரியாதையை நாம்தான் தெளிவாக முடிவு செய்யவேண்டும்.

அவர்கள், புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால் நாம் எடுத்துச் சொல் நம் மரியாதையை நாம் காப்பாற்றவேண்டும். நம் மரியாதை, கௌரவம் காற்றில் பறக்கும்போது நாம் விழிப்புணர்வு இல்லாமல் மந்தமாக இருந்துகொண்டு பின்பு வருத்தப்படவும், பிறர் மீது கோபப்படுவதும் ஆகாது. இதனால் நம் மனதில் சஞ்சலங்கள் உருவாகும்.

சமுதாயத்தில் நம் சுயமரியாதை (Image) பாதிக்கப்படும். நம் அனுமதி இன்றி யாரும் நம்மை அவமானப்படுத்திவிட முடியாது.

மதிமிக்க மனிதர்கள் பழிக்குப் பழி என்ற அந்த சக்கர வளையத்துக்குள் சிக்குவதில்லை.

நீரு பூத்த நெருப்பு:
நீரில் இருந்து நெருப்பு வருமா? நீரை கொதிக்க வைத்தால்கூட, அந்த சூடான நீர் கூட நெருப்பை அணைக்கவே செய்யும். அதே நீர் தன் அடுத்த நிலையில் நெருப்பை கக்குகிறதே! அது நமக்குத் தெரியுமா!

ஆம்! நீர் சூடாகி நீராவியாக மாறுகிறது. நீராவிகள் மேகங்களாக ஆகாயத்தில் சுற்றுகின்றன. அந்த மேகங்கள் என்ற நீர்த்துளிகளுக்குள் மின் காந்தங்கள் கலக்கின்றன. அந்த மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது நெருப்பு மிகப் பெரிய நெருப்பு உண்டாகின்றன. அதுவே இடி மின்னல்.

அது போலவே மனிதர்கள் தெளிந்த நிலையில், அன்பு நிலையில் இருக்கும் போது அவர்கள் உறவுகளில் உரசல்கள் வருவதில்லை. பதிலுக்குப் பதில் என்ற நெருப்பு பற்றுவதில்லை.

அகந்தை என்ற மின் காந்தம் இல்லாத மனதில் எதிரிகளின் தீ நாக்குகளால் தீயை பற்ற வைக்க முடிவதில்லை.

வலிமை மிகுந்த மிகப்பெரிய விமானம்கூட பறக்கும்போது ஒரு மிகச் சிறிய பறவை மீது மோதும் போது பலத்த சேதமடைகிறது. மிகச் சிறிய பறவை தானே விமானத்தை ஒன்றும் செய்து விடாது என்று நாம் உறுதி கூறமுடியுமா?

நாம் அற்பமாக நினைக்கும் மிகச்சிறிய பலமற்ற எதிரிகூட நம் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

சிறியவரானாலும், பெரியவரானாலும் நம் எதிரியின் எதிர்ப்புத் தன்மையை எக்காரணம் கொண்டும் நாம் கூர்மை படுத்தக்கூடாது.

அவர்களின் கொம்பைச் சீவி விடும் வேலையை, அவர்களை சீண்டிவிடும் மதியற்ற வேலையை தப்பித் தவறிக்கூட செய்ய மாட்டான் புத்திசாலி.

எதிரிகளை வெல்ல சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதே. அப்போது அவர்கள் பலமும் நம் பலமாகிறது.

முகமது நபியை, அவரது கொள்கைகளை எதிர்த்து நின்ற அவரது எதிரி பின்பு அவரின் மிகப்பெரிய சீடர் ஆனார். அவர்தான் மிகச்சிறந்த கலீபாவான உமர்.

மிகச்சிறந்த மன்னர்கள் தங்கள் எதிரி நாட்டை வென்ற பின்பு அந்த அரசர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறார்கள். மகா அலெக்ஸாண்டர் கூட போரஸ் மன்னனை மரியாதையுடன் நடத்தினார்.

நம் உள்ளத்தில் கேடான எண்ணங்கள் இல்லையென்றால் நமக்கு இந்த உலகிலும் கேடான மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

ஒரு மனிதனின் உயர்ந்த பண்பு எங்கே வெளிப்படுகிறது. அவன் நண்பர்களிடம் நடந்துகொள்ளும் தன்மையிலா? இல்லை அவன் தன் எதிரிகளிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதில்தான் அவனது உண்மையான மறுபக்கம் வெளிப்படுகிறது. - தே.சௌந்தரராஜன்.
************************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மற்றவர்களை மன்னியுங்கள் மற்றவர்களுக்காக அல்ல!. உங்களுக்காக!

>> Monday, June 14, 2010

உங்கள் மனம் லேசாக-- மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கக-- உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்க-- நீண்டகாலத் துன்பம் முடிவடைய-- மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள். தவறு செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் நாம் மன்னிக்கிறபோது அவர்களுக்கு நன்மை நிகழ்கிறது என்றுதான் பொதுவாக என்ணுகிறோம்.

ஆனால், உண்மையில், மன்னிக்கப்படுபவர்களைவிட, மன்னிப்பவர்களே நன்மை அடைகிறார்கள்.

மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்கு என்னென்ன நன்மைகள் நிகழ்கின்றன என்று பார்ப்போமா?

உங்கள் மனம் லேசாகிறது:
ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும்போது உங்கள் மனம் லேசாகிறது.

உங்கள் புன்னகை, தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது.

கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்.

உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:
எதிர்மறை உணர்வுகளிலிருந்து எழுகிற அலைகள் நோய்களை உருவாக்க வல்லவை.

தண்ணீரை அடிப்படையாகக் கொண்டே ஆவியும் எழுகிறது. ஐஸ்கட்டியும் உருவாகிறது. அதுபோல, உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவே உங்கள் உடலும் மனமும் இருக்கிறது.

ஒருவரை மன்னிப்பதால் மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. அதனால் உங்கள் ஆரோக்கியமும் முகப்பொலிவும் கூடுகிறது.

மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்கிறார்கள்:
மிகக் கடுமையான விதிமுறைகளோடும் கோபத்தோடும் வாழ்கிற மனிதர்களின் மனதிலிருந்து எழுகிற அலைகள், எல்லோரையும் எட்டி நிற்கச் செய்பவை.

முள்ளம்பன்றியின் முட்கள்போல் அவை சிலிர்த்தெழுந்து வறட்டுப் பிடிவாதத்தின் நுனிகளை நீட்டுபவை.

உங்கள் மனம் மலர்ந்து, அதில் மன்னிப்பு என்கிற மணம் பரவுகிறபோது, அந்த நறுமணம் அனைவரையும் ஈர்க்கிறது. காரணம் தெரியாமலேயே பலரும் உங்கள்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அனைவராலும் விரும்பப்படுகிற மனிதராக நீங்கள் ஆகிறீர்கள்.

நீண்டகாலத் துன்பம் முடிவடைகிறது:
ஒருவரின் தகாத செயல் நடந்து முடிந்து நீண்ட காலம் ஆகியிருக்கலாம். ஆனால் அதுகுறித்த உங்கள் அதிர்ச்சியும், மனப்பொருமலும் தொடர்ந்து கொண்டே போகிறபோது நீங்களே துன்பத்திற்கு ஆளாகிறீர்கள்.

யாரோ செய்த தவறுக்கு நீங்கள் துன்பம் அனுபவிப்பது என்ன நியாயம்?

அந்த மனிதரை மன்னிக்கிறபோது உங்களின் துன்பம் முடிவடைகிறது.

உங்களையே எத்தனை நாள் தண்டிப்பது? :
ஒரு சம்பவத்தில் அநியாயமாய் இழைக்கப்பட்ட அவமானம் என்பது, நம்மைப் பொறுத்தவரை ஒரு தகாத தண்டனை.

திரும்பத்திரும்ப அந்த நினைவுச் சுழலுக்குள் சிக்கும் போதெல்லாம் நம்மை நாமே தண்டித்துக்கொள்கிறோம்.

அந்த சம்பவத்தை ஒருபாடமாக மட்டுமே பார்க்கிற பக்குவத்தை வரவழைத்துக் கொள்கிறபோதுதானே அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும்.

நடந்துமுடிந்த சம்பவத்தை மாற்றமுடியாதே தவிர அடுத்து நாம் செய்வது மிகச்சிறந்த செயலாக அமையவேண்டுமல்லவா. அந்தச் செயல்தான் மன்னிப்பு.

எப்படி மன்னிப்பது? :
சம்பந்தப்பட்டவரின் முகத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் மன்னிப்பைப் பிரகடனம் செய்யக்கூடத் தேவையில்லை. மனதுக்குள்ளேயே கூட மன்னிக்கலாம்.

சிறிது சிறிதாகவும் மன்னிக்கலாம். மனக்கண்முன் அவரைக் கொண்டுவந்து, அவர் செய்த தவறுகளையும் அதனால் உங்களுக்கேற்பட்ட உணர்வுகளையும் மானசீகமாகச் சொல்லி, இந்த சூட்டோடு அவரை மன்னிக்கிறபோது உங்கள் மனம் தெளிவடைகிறது. இதுவரை சுமந்த பாரத்தை இறக்கி வைத்த நிறைவு ஏற்படுகிறது.

மற்றவர்களை மன்னியுங்கள்….. மற்றவர்களுக்காக அல்ல! உங்களுக்காக!!
- சிநேகலதா
****************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

மனஅழுத்தம் நீங்க 30 வழிகள். அவசியம் படியுங்கள்.

>> Friday, June 11, 2010

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.

மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.

இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம்:
கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

காட்சிப்படுத்துங்கள்:
பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:
உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:
மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:
நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?
மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எழுதிப்பாருங்கள்:
மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.

அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:
அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

காபி குடிப்பதைக் குறையுங்கள்:
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.

தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:
எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

நறுமணங்களின் நலம் பெறுங்கள்:
தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:
டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

மூன்று முக்கிய இடங்கள்:
பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.
2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.
3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:
மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:
கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள்
சொல்கிறார்கள்.

வைட்டமின் வேண்டும்:
வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடையாளம் என்ன?
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

ஆகாயம் பாருங்கள்:
அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நடைப்பயிற்சி நலம் தரும்:
நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வெந்நீர்க்குளியல்:
வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

இசையால் வசமாகும் இதயம்:
எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

செல்லப் பிராணிகள்:
நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.

கவனம் குவியுங்கள்:
மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

நண்பர்களை அழையுங்கள்:
மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

வஜ்ராசனத்தின் வல்லமை:
மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)

பிரார்த்தனை:
மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:
சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

தாவரங்களோடு சிறிது நேரம்:
பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.
-மரபின்மைந்தன் ம. முத்தையா
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

ஏன் சிந்திக்க மறுக்கிறோம்.? தயங்குகிறோம்.? எது கடினம்.?

>> Thursday, June 10, 2010

“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”- சாக்ரடீஸ்.

சிந்தனைசெய் மனமே! மனிதனின் பலம் எது? எது சிந்தனை? யார் அறிவாளி? படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை?

நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா? நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா?

மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச் சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா? பெரிய கோடரியால் மரத்தை வெட்டிச் சாய்ப்பதா?

கொடிய போர்க்களத்தில் உயிரை பணயமாக வைத்து முன்னேறிச் செல்வதா? இவைகள் யாவும் கடினமான வேலையா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

நம்மில் அநேகருக்கு இவைகள் யாவையும் விட மிகக் கடினமாக வேலை ஒன்று உண்டு. அதுதான் சிந்திப்பது!

மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது? எத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோ, அத்தனையும் விட உயர்வானது எது? சிந்திப்பது! ஆம். அதுவேதான்.

மனிதனின் பலம் எது?
குதிரையைப் போல ஓட முடியுமா? பறவையைப் போல பறக்க முடியுமா? யானையைப் போல மரங்களை சாய்க்க முடியுமா? சிங்கத்தைப் போன்ற பெரிய பற்கள் நம்மிடம் உள்ளதா? உறுதியான கொம்புகள் உள்ளதா? நீண்ட துதிக்கை உள்ளதா? இல்லையே!!

நம்மால் ஒரு நாயைக்கூட அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ கையினாலோ அடித்துவிட முடியுமா? அதற்குக்கூட ஒரு தடியின் துணை வேண்டுமே!

மனித உடல் எத்தனை மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு. இத்தனை பலவீனமான உடலைக் கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்?

எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான். இந்த மனிதனின் பலம் எது? அதுதான் மனிதனின் சிந்தனையின் பலம்!
அதுதான் ஆறாவது அறிவு:

காலம் காலமாக எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்களின் சிந்தனையால் புதிய புதிய வழிகளையும், புதிய புதிய கருவிகளை கண்டுபிடித்து உலகத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் நம்மில் அநேகர் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆறாவது அறிவான மனிதனின் மிகச் சிறந்த, பலமான இந்த அறிவை பயன்படுத்துகிறோமா? இந்த அறிவு தேவை இல்லை என்று மூட்டை கட்டி அட்டாலியில் போட்டு விட்டவர்கள் அநேகர். அநேகர் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த மூளையை எடுத்துச் செல்வதே இல்லை.

எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால் தலை தலையாக இல்லை. என்ன ஆச்சு? தலை வாலாக மாறிவிட்டது!

எது ஆடுகிறதோ அது வால்.

எது சிந்திக்கிறதோ அது தலை.

நம்மில் அநேகர் பிறர் சொல்லை ஆமோதிக்க தலையாட்டுவதற்கு மட்டுமே தலையை பயன்படுத்துகிறார்கள். சிந்திப்பதற்கு அல்ல. அப்போது அது வால்தானே?!

மறுப்பது ஏன்?
ஏன் நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
ஏன் சிந்திக்க தயங்குகிறோம்.

அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க!

நடக்குதா, இது போதும்டா சாமி. எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப் போகுங்கோ.

போகிற போக்கை மாற்ற, புதிய வழி காண அநேகருக்கு ஒரு தயக்கம். ஆறுகள் கூட தான் போகும் வழியை மாற்றலாம். ஆனால் இந்த சாதா மனிதர்கள் யாரும் தன் போக்கை மாற்ற விரும்புவதில்லை.

மாறுபட்டு சிந்திக்க, வேறுபட்டு செயல்பட, ஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வு, நம்மை மாறுபட்டு சிந்திக்க, நமது கூட்டத்தை தாண்டி வர அனுமதிப்பதில்லை. ஆனால் சிந்திக்காத மனிதர்கள் செம்மறியாட்டு கூட்டங்கள்.

ஒரு புகை வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின் ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது.

அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள், இந்த உலகை மாற்றியமைப்பவர்கள், இந்த உலகை உருவாக்குபவர்கள் சிந்திக்கும் சில மனிதர்களே! அவர்கள் ஆயிரத்தில் ஒன்று இருப்பது படு அபூர்வம்தான்.

இப்படி சிந்திப்பவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் ஆன்மிக அறிஞர்களாகவும், அரசியலில் பெரிய தலைவர்களாகவும், சிறப்புற்று விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற மாளிகையை கட்டும் உன்னத சிற்பிகள் இவர்களே!

கோபர்னிக்கோ, கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், டார்வின், எடிசன் இவர்கள் அறிவியல் புரட்சி செய்தவர்கள்.

வால்டேல், ரூஸோ, காரல் மார்க்ஸ் இவர்கள் அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர்கள்.

புத்தர், ஏசு, நபி, காந்தி போன்ற ஆன்மீக சிந்தனையாளர்கள் உலகை புரட்டிப் போட்ட உத்தமர்கள்.

எது சிந்தனை?

நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.

இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, மனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!

கணிதத்திற்கு விடைகாண முயலும்போது, புதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போது, நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.

பிரச்சனைகளை அலசி ஆராய்தல் ((Analysing), கணக்கிடல் ((Calculation), திட்டமிடல் (Plan), புதிய வழி காணல் இவைகளே சிந்தனை எனப்படும்.
ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.

இது போன்று நாம் சிந்திக்க முனையும்போது மனம் அங்கும் இங்குமாக அலைபாயும், தடம் மாறிப் போகும்.

ஆகவே தெளிவாக சிந்திக்க விரும்பினால் ஒரு பேப்பர், ஒரு பேனா, கொஞ்சம் மூளை இவைகளை எடுத்துக்கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிவியல், அரசியல் அறிஞர்.

யார் அறிவாளி?

நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா?
நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா?

எவர் நல்ல உணவுகளையும் உண்டு, கடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது.

அது போலவே நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும்.

நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால் அறிவாளிகள் ஆக முடியுமா?

படிப்பு நல்ல தகவல்களையும் நமது சிந்தனையை தூண்டவும் உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன்.

படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை ?
ஒரு மரக்கட்டைமேல் இரும்பு துண்டை போட்டால் அந்த இரும்புத் தூள் மரக்கட்டையில் ஒட்டுமா?

ஒரு காந்தத் துண்டின் அருகே இரும்புத்தூள் இருந்தால்கூட அது ஓடிப் போய் ஒட்டிக்கொள்கிறது. காந்தத் துண்டின் ஈர்ப்பினால் இரும்புத்தூள் போய் ஒட்டிக்கொள்கிறது.

எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோ, எங்கே சிந்தனை இருக்கிறதோ, அவர் படிப்பது அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது ஆர்வம் இல்லாது படிப்பவர்கள் படிக்கும் படிப்புகள் அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. அவர்கள் ஒரு பாத்திரம் (Carrier) போல இருக்கிறார்கள்.

செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை.

தொட்டியில் இருக்கும் நீரை குடத்தில் மொண்டு அண்டாவில் கொண்டு ஊற்றிய பின் அந்தக் குடத்தில் நீர் இருப்பதில்லை அல்லவா!

அநேகரின் படிப்பு இப்படித்தான் காணப்படுகிறது. புத்தகத்தை படித்து தேர்வில் கொட்டிவிட்டு தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறோம். அநேக மாணவர்களின் இன்றைய படிப்பு இப்படித்தான் ஒட்டாமல் இருக்கிறது. இன்று இந்த காலி குடம் போலவே காலியாக இருக்கிறது அநேகரின் மூளை.

கார்பரேட் நிறுவனங்கள்
மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் (R & D Department) புதிய வழிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஓர் ஆராய்ச்சி பகுதி செயல்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் இந்த பகுதிக்கு பல கோடிகளை செலவு செய்கிறார்கள்.

இந்த (R & D) ஆராய்ச்சி பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த கம்பெனியின் சாதனங்கள் உயர்வு பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்த ஆராய்ச்சி பகுதியின் கண்டுபிடிப்புகளை சார்ந்திருக்கிறது. இதுபோலவே எந்த சமுதாயம் புதிய வழிகளை சிந்திக்கிறதோ அந்த சமுதாயம் விரைவாக உயர்கிறது.
SOURCE: NAMBIKKAI.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

யாரோ போட்ட பாதை! நாம் செல்ல வேண்டிய பள்ளிக்கூடம்.?

>> Thursday, June 3, 2010

படித்து சிந்தியுங்கள். “வாத்துகள் கழுகுகளின் பள்ளிக்கு செல்வதில்லை”.
நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது குடும்பத்திலோ இணைகிறீர்கள். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?
வாத்து பேசுவது கழுகுக்குப் புரியவில்லை. கழுகின் மொழி வாத்துக்குப் புரியவில்லை.

“வாத்துகள் கழுகுகளின் பள்ளிக்கு செல்வதில்லை” – இதை யார் கூறினார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்க நாட்டின் கிராமியப் பழமொழியாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. ஓர் அமெரிக்க எழுத்தாளனின் நூலில் இந்த வரியைக் கண்டு மகிழ்ந்தேன்.

ஒவ்வொரு வகையான உயிரினங்களுக்கும் அவைகளுக்கேற்ப பள்ளிக்கூடங்கள் இருப்பது போல ஒரு கற்பனை. வாத்துக்களுக்கென்று ஒரு பள்ளி; கழுகுகளுக்கென்று ஒரு பள்ளி.

வாத்து ஒன்றிற்கு கழுகுகளைப் பார்த்தவுடன் நாம் ஏன் அந்தப் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்று ஓர் ஆசை வருகிறது. செல்லலாமா?! என்ற வினாவிற்கு என்ன விடை என்று அலசுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

வாத்து ஏன் கழுகுப்பள்ளிக்கு செல்லவேண்டும்?

வாத்திற்கும் கழுகைப்போல் உயரத்தில் சிறகடித்துப் பறக்க ஆசை! கழுகின் வலு, கூரிய பார்வை, வளைந்த அலகுகள், சிறப்பான நகங்கள், வேகம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நானும் கழுகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை தோன்றுகிறது!

“கழுகாக பிறக்கவில்லை; ஆனாலும் கழுகுப் பள்ளியில் சேர்ந்து விட்டால் கழுகாக மாற்றி விடுவார்கள் போலிருக்கிறது” என்ற ஆர்வத்தில் கழுகுப்பள்ளிக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகிறது. இது சரியா தவறா?

வாத்து தண்ணீரில் நீந்தும் பறவை; தரையிலும் நடக்கும். ஆனாலும் நீந்துவது அதற்கு எளிது. அதன் பாத அமைப்பு நீந்துவதற்கு ஏற்றாற் போல் அமைந்திருக்கிறது. வாத்து பறவைதான். இறகுகள் இருப்பதால் அதன் பெயர் பறவையே தவிர வாத்துக்கள் பறந்து செல்வதில்லை. பெரும்பாலும் அதன் உணவு மீன்களும், நீரில் அல்லது சதுப்பு நிலத்தில் வாழும் புழு பூச்சிகளுமே! வாத்துக்கள் எலிகளையும், கோழிக் குஞ்சுகளையும் உண்பதில்லை.

கழுகு தரையில் நடந்து செல்வதில்லை. நடக்க முடிந்தாலும் பெரும்பாலும் தரையில் இருப்பதில்லை. மரத்தின் மீதோ, மதிற்சுவர்களின் மேலோ உட்காரும்; பின்னர் பறக்கும். கழுகு நீந்துவதில்லை. அதன் அலகுகளும், கால் நகங்களும் இரையை கிழிப்பதற்கு ஏற்ப அமைந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் ஒரு வாத்தால் எப்படி கழுகாக மாறமுடியும், அதனால் ஒரு கழுகை இரசிக்கமுடியும்; பாராட்ட முடியும்; ஆனால் கழுகாக மாறமுடியுமா?
ஆகவே வாத்து, வாத்துப் பள்ளிக்கூடத்திற்கு செல்லலாம். இன்னும் சிறப்பாக எப்படி நீந்துவது, எப்படி மீன் பிடிப்பது, எப்படி தன் குஞ்சுகளை வளர்ப்பது என்று கற்றுக்கொள்ளலாம்.

எதற்காக இந்த உருவகம்?

ஒரு தொழிற்சாலையில் ஒருவர் கணிப்பொறியை இயக்கி, எல்லா விவரங்களையும் பதிவு செய்து, அலுவலக வேலையை செய்து வருகிறார். இன்னொரு பிரிவிலே ஒருவர் உலோகங்களை இணைக்கிற வேலையை செய்து வருகிறார். இந்த “வெல்டிங்” வேலை செய்து வருபவரைப் போல, தானும் வெல்டிங் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கணிப்பொறி வல்லுநருக்கு வந்தால் என்ன நடக்கும்?

நிஜமாகவே அவர் வெல்டிங் கற்றுக்கொண்டு, வல்லுநராக வரவும் முடியும். ஆனால் அது தேவைதானா, அவருடைய கல்வி, முழுமையான ஆற்றல் எங்கே இருக்கிறதோ அங்கே வளர வேண்டும். வேறு துறைகளுக்குப் போய் தன்னை உயர்த்திக்கொள்ள ஆகும் காலம், உழைப்பு, பணம் இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் அவர் புதிய முயற்சியில் இறங்குவது வீண் என்று தெரியும்.

ஒரு நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அவரவர்கள் துறையில் எப்படி மேலும் மேலும் வளர்வது உயர்வது என்று தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வது நிறுவனத்திற்கு பெரும் நன்மையை சேர்க்கும்.
ஜப்பானில் இதைத்தான் செய்கிறார்கள். தொடர்ந்து ஒரே துறையில் பயிற்சியும்- அனுபவமும் பெறப்பெற பொருள்களில் சூன்யப் பிழையை (ழங்ழ்ர் ஈங்ச்ங்ஸ்ரீற்) காணமுடிகிறது.

அப்படியானால் வேறு துறைகளில் செல்லவே கூடாதா?” என்று கேட்டால், மேற்கண்ட விதி ஒரு பொதுவான விதிதான்.

எல்லாவற்றிற்கும் விதி விலக்கு இருப்பது போல, ஒரு சிலர் எந்த வேலையையும் நன்கு கற்றுக் கொண்டு சிறப்பாக செய்பவர்களாக இருக்கலாம். அவர்கள் வேண்டுமானால் போகலாம். ஆனால் பொதுவாக ஒரே துறையில் தொடர்ந்து முன்னேறுவது சிறந்தது.

டெண்டுல்கரின் கவனம் கிரிக்கெட்டில் இருந்தால் நல்லது. “எப்படி கபடி விளையாடுவது” என்று எண்ணாமலிருப்பது முக்கியம். ஒரு நடிகனின் சிந்தனை நடிப்பில் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர் கால்பந்திலே கவனம் செலுத்தினால், நடிப்பும் கால் பந்தும் காணாமல் போய்விடும்.

வாத்தும் – கழுகுப் பள்ளியும் இன்னொரு கோணத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறது.

வேறு வழியில்லாமல் வாத்து கழுகுப் பள்ளியில் சேர்ந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பள்ளியில் வாத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?
வாத்து பேசுவது கழுகுக்குப் புரியவில்லை. கழுகின் மொழி வாத்துக்குப் புரியவில்லை.

கழுகு அழுகிப்போன ஒரு பூனையைக் கிழித்து, ருசித்து சாப்பிடுகிறது. வாத்துக்கு அதனுடைய நெடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கழுகுகளின் கூட்டம், இரைச்சல் எதுவுமே வாத்துக்குப் பிடிக்கவில்லை. வாத்து தண்ணீரில் இருந்தால், கழுகு மரக்கிளையின் மேல் உட்கார்ந்திருக்கிறது.

இந்த நிலையில் வாத்துக்கு மூன்று வழிகள் உள்ளன.

1. வாத்து கழுகுகளுக்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக் கொண்டு, கிட்டத்தட்ட கழுகாகவே மாறுவது.

2. கழுகுகளை தனக்கு ஏற்றமாதிரி மாற்றுவது. கழுகுகளை நீந்த வைப்பது, சேற்றைக் கிளறி புழு சாப்பிட வைப்பது, இப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டு வந்து கழுகுகளை வாத்துக்களாக மாற்றுவது.

3. இவையிரண்டுமே நடக்க முடியாதபோது, கழுகுப் பள்ளிக்கூடத்திலிருந்து, மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு, வேறு பள்ளிக் கூடத்தில் சேர்ந்துகொள்வது.

இந்த இரண்டாவது கோணம் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் சிக்கிக் கொண்டால் ஒன்று அந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும். அல்லது நமக்கு ஏற்றவாறு சூழ்நிலையை மாற்ற வேண்டும். இரண்டுமே நடைபெறாவிட்டால், அங்கேயே இருந்து புலம்பிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வேலையிலிருந்தே விடுபட்டு வெளியே வந்துவிடலாம்.

நீங்கள் ஒரு நல்ல தொழிற்சாலையில் அல்லது விற்பனை நிலையத்தில் அல்லது குடும்பத்தில் இணைகிறீர்கள். அந்த இடம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அப்போது முழுக்க முழுக்க அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அங்கே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்! உங்களால் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனை படைப்பீர்கள்!

நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது தொழிலிலோ அல்லது குடும்பத்திலோ இணைகிறீர்கள். ஆனால் அந்த சூழ்நிலை உங்களுக்குப் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம்?

மெல்ல மெல்ல சூழ்நிலையை மாற்றுங்கள். உற்பத்தியில் தரமில்லையா? தரத்தைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

ஒற்றுமையில்லையா? – ஒற்றுமையைக் கொண்டு வாருங்கள். எல்லோரும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்? – சுறுசுறுப்பை ஊட்டுங்கள்.

விற்பனையில்லையா? – வணிகத்தைப் பெருக்குங்கள்.

படிப்படியாக சூழ்நிலையை மாற்றி நல்ல நிலையை உருவாக்குங்கள்.

இது கடினமான வேலைதான், இதற்காகப் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டிவரும். ஆனாலும் நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடனும் நல்ல எண்ணங்களுடனும், அறிவுக்கூர்மையுடனும் செயல்படும்போது, அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.

இருட்டறையில் வெளிச்சத்தைக் கொண்டு வந்ததுபோல், பாலைவனத்தில் ஒரு பசுஞ் சோலையை உருவாக்கியதுபோல், அற்புதமான மாற்றங்களை உண்டாக்கிய பெருமை உங்களுக்குக் கிடைக்கும்.

“உங்களால் மாறவும் முடியவில்லை, மாற்றவும் முடியவில்லை” என்றால் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதுதான்!

வாத்து – கழுகுப்பள்ளிக்கூடம் இன்னொரு கோணத்திலும் நம்மை சிந்திக்க வைக்கிறது!

வாத்து மிகவும் மென்மையான ஒரு பறவை. ஒரு சாது. ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாகத் தண்ணீரில் நீந்திவரும் ஒரு பறவை.

கழுகு ஓர் ஆபத்தான பறவை. முயலும், கோழிக்குஞ்சும் மசால் வடையும் அதற்கு ஒன்றுதான். உணவுக்காக வேட்டையாடித்தாக்கும் பறவை கழுகு.
இப்படிப்பட்ட கழுகுகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில், வாத்தின் நிலைமை என்ன ஆகும்?

கழுகுகள் வாத்தை சக மாணவராகப் பார்ப்பார்களா அல்லது தாக்கி உண்பதற்குத் தக்க உணவாக எண்ணுவார்களா? கழுகுகளின் கோரப்பசிக்கு உணவாகத் தானே வலியப் போய் சிக்கிக்கொள்ளும் நிலைக்கு வாத்து நீந்தித்தள்ளப்படும் நிலை வந்தால் என்ன ஆவது?

சாதுவான சிலர், ஆபத்தான மனிதர்களோடு சிக்கிக் கொள்ளும்போது அவர்களுடைய நிலை என்ன?

ஒரு தொழிலைத் தொடங்கும்போது, எத்தகைய கூட்டாளிகளோடு இணைகிறீர்கள்?

பணம் வைத்திருக்கும் அப்பாவிகள், ஈவு இரக்கமற்ற கொடூரமானவர்களோடு அறியாமையால் இணைந்து, போட்ட முதலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் கேவலங்களை நாம் பார்ப்பதில்லையா?

பல நல்ல நிறுவனங்கள் இப்படிப்பட்ட கொடூரமான சுயநலமிகளால் சீரழிந்து போன காட்சிகளை நாம் காண்பதில்லையா?

நல்ல பண்புகளைப் பெற்ற சாதுவான பெண்ணை மோசமான குடும்பத்திலே திருமணம் செய்து கொடுத்துவிட்டு அன்றாடம் இரத்தக் கண்ணீர் வடிக்கிற பெற்றோர்களைப் பார்க்காதவர்கள் உண்டா?

வாத்து – கழுகுப்பள்ளியில் வரும் பள்ளிக் கூடங்கள் என்ன?

அசல் பள்ளி – கல்லூரி – சில அலுவலகங்களில் மட்டும் என்ன நிகழ்கிறது?

இயல்பாக வருகின்ற காதல் ஒருபக்கம் இருக்கட்டும். வசதியான அப்பாவியான ஒரு பெண்ணோ, ஆணோ இருந்துவிட்டால் காதல் என்ற வலைவீசி, ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி, ஏமாற்றி திருமணம் செய்து கொண்டோ செய்யாமலோ எல்லாவற்றையும் சுரண்டும் கழுகுகள் மானிட வேடத்தில் உலவி நடத்திவரும் நாடகங்களைப் பார்த்தால் அச்சமாகவல்லவா இருக்கிறது?

அதிகாரிகள், அலுவலர்களில் இலஞ்சப் பிண்டத்தைக் கீறி உண்ணும் கழுகுகள் எத்தனை?

எனவே வாத்துக்கள், கழுகுப் பள்ளிக்குச் செல்லத்தான் வேண்டுமா?
வாத்தும் – கழுகும் உருவகம்தான்.

அவை கிளறிய சிந்தனைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.

எந்தப் பாதையில் சென்றால் நல்லது என்று நமக்கு அடையாளங்கள் காட்டுகின்றன.

வாத்தை நல்லது என்றும் கழுகைத் தீயது என்றும் வகைப்படுத்திக் கொண்டால், நாம் செல்லவேண்டிய பள்ளிக்கூடம் எது என்று நமக்கே தெரியும்! – தி.க. சந்திரசேகரன்
*****************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP