**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ரஜினி : விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள்

>> Friday, January 25, 2013


விஸ்வரூபம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க கலை போர்வையில் விஷத்தை விதைக்கும் ஊடக தீவிரவாதம் என்பதை ரஜினியும் உணர்கிறார்.

கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து வெளியிட உறுதுணையாக இருக்குமாறு இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்ளும்
ரஜினியின் அறிக்கை
.
பட‌த்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கலாம்.
THANKS TO SOURCE ;http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/rajini-deeply-hurts-after-hear-the-ban-on-viswaroopam-168570.html
**********
இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விசுவரூபத்தை எதிர்ப்பது, "கலாச்சார தீவிரவாதம்" என்றும்
"தேசப்பற்று மிக்க முஸ்லிம்கள் விசுவரூபத்தை எதிர்க்கமாட்டார்கள்" எனவும், 
அறிக்கை விட்ட கமலஹாசனுக்கு
"பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா" கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
 
எது கலாச்சார தீவிரவாதம்?

25 ஜனவரி, 2013

கமல்: அறியாமையின் வடிவமா? எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலா?

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 15 நாள் தற்காலிக தடை விதித்ததை தொடர்ந்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை கமலின் உண்மை முகத்தை (சுயரூபத்தை) வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களுக்கு ஆதரவான திரைப்படம் என்றும் இத்திரைப்படம் வெளிவந்தால் முஸ்லிம்கள் பிரியாணி கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

ஆனால் திரைப்படத்தின் உண்மை நிலையோ வேறு.

திரைப்படம் முழுவதுமே முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆனை தீவிரவாத நூலாகவும், முஸ்லிம்களின் வழிபாட்டை தீவிரவாத வழிப்பாடாகவும் சித்தரித்தே வெளிவந்துள்ளது.

முஸ்லிம்களின் உயர்ந்த கலாசாரத்தையே தீவிரவாத கலாச்சாரமாக சித்தரிக்கும் கமல் அவரின் சுயரூபத்தை எதிர்க்கும் போது அதை கலாச்சார தீவிரவாதம் என்கிறார்.

இது கமலின் இரட்டை முகத்தையே காட்டுகிறது.

மேலும் விஸ்வரூபம் படத்தை எதிர்ப்பவர்கள் தேசபக்தி இல்லாதவர்கள் என்று அறிக்கைவிடுகிறார்.

கமல் தேசபக்தியின் அளவுகோல் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

தன்னுடைய படத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களின் தேசபக்தியை குறை சொல்ல வேண்டும் என்றால் கமல் தன் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும்.

ஹேராம், உன்னைப்போல் ஒருவன், போன்ற திரைப்படங்களில் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக கருத்துக்களை பதிவு செய்ததன் தொடர்ச்சியாக விஸ்வரூபத்தை வெளியிட்டுள்ள கமலுக்கு முஸ்லிம்களின் தேசப்பற்றை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

தங்களுடைய பொய் முகத்தை மறைப்பதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் பயன்படுத்தும் வார்த்தைதான் தேசப்பற்று.

இதையே இன்று கமல் உதிர்த்திருப்பதன் மூலம் கமலின் சுயரூபம் விஸ்வரூபமாக வெளிவந்துள்ளது.

இது போன்ற விஷமக்கருத்துக்களை வெளியிடுவதை கமல் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இது போன்ற விஷமக்கருத்துக்கள் அறியாமையில் வெளியிடும் கருத்துக்களைப் போல் தெரியவில்லை.

மாறாக எதேச்சியதிகாரத்தின் தூண்டுகோலாகத்தான் உள்ளது. கமலின் வார்த்தைகளும் முஸ்லிம்களின் போராட்டத்தை தீர்மானிக்கும்.
*********************
இதையும் படியுங்கள். விஷரூபம். கலை போர்வையில் ஊடக தீவிரவாதம்.




7 comments:

UNMAIKAL January 25, 2013 at 7:52 PM  

ஹைதராபாத், பெங்களூரில் பாதியில் நிறுத்தப்பட்டது விஸ்வரூபம்... 29-ம் தேதி வரை படம் கிடையாது!

Posted by: Shankar Updated: Friday, January 25, 2013, 17:07 [IST]

ஹைதராபாத் / பெங்களூர்: ஆந்திர அரசின் உத்தரவைத் தொடர்ந்து கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களுக்கு டிக்கெட் பணத்தைக் கொடுத்து அனுப்பினர் தியேட்டர்காரர்கள்.

வரும் 29-ம் தேதி வரை படத்தை வெளியிட வேண்டாம் என்றும் தியேட்டர்களை போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெங்களூரிலும் விஸ்வரூபம் படம் பாதியில் நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள விஸ்வரூபம், மீலாடி நபி விழாவான இன்று வெளியாவதாக இருந்தது.

முஸ்லிம்கள் எதிர்ப்பால் தென்னிந்தியாவில் தமிழகம், புதுவையில் இந்தப் படம் தடை செய்யப்பட்டுவிட்டது.

ஆனால் மற்ற மாநிலங்களில் வெளியாக தடை ஏதும் இல்லை.

ஆனால் இன்று வெள்ளிக் கிழமை, மீலாடி நபி என்பதால், கர்நாடகம், ஆந்திரத்தில் இந்தப் படத்தை வெளியிட தயக்கம் ஏற்பட்டது விநியோகஸ்தர்களுக்கு.

இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் படத்தை விநியோகஸ்தர்கள் வெளியிடாமல் நிறுத்திவிட்டனர்.

ஆந்திராவில் சில முஸ்லிம் தலைவர்கள் உள்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டியை சந்தித்து, விஸ்வரூபம் படத்தில் உள்ள காட்சிகளால் எந்த பிரச்சினையையும் உருவாக்காது என்று திருப்தி அடையும் வரை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.

ஹைதராபாத் நகரில் காலையில் எந்தத் தியேட்டரிலும் விஸ்வரூபம் ஓடவில்லை.

பிற்பகலில் படத்தை திரையிட்டனர்.

ஆனால் திடீரென காவல் துறையிடமிருந்து ஒரு உத்தரவு வந்தது, அனைத்து திரையரங்குகளுக்கும், படத்தை உடனே நிறுத்துமாறும், மறு உத்தரவு வரும் வரை விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இதனால் அனைத்து தியேட்டர்களிலும் உடனடியாக படம் நிறுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திரும்பத் தரப்பட்டது.

இதேபோல் சைபராபாத்தில் 29-ம் தேதி வரை படத்தை ரிலீஸ் செய்வதை ஒத்திவைக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே ஜனவரி 29-ம் தேதி வரை ஹைதராபாதில் படம் கிடையாது.

ஆனால் ஆந்திரா - தமிழக எல்லைப்புற பகுதிகளில் உள்ள அரங்குகளில் விஸ்வரூபம் ஓடுவதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரில்... பெங்களூரில் இன்று பிற்பகல் சில அரங்குகளில் விஸ்வரூபம் வெளியானது.

ஆனால் படம் திரையிடப்பட்ட சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டு, டிக்கெட் பணம் திருப்பித் தரப்பட்டது.

மாலை அல்லது நாளை படம் திரையிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீசாருடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு... இந்த நிலையில், காட்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட நகரங்களில் காவல் துறை அதிகாரிகளுடன் ராஜ்கமல் நிறுவனம் பேச்சு நடத்தியது.

ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், அரசின் உத்தரவுக்கேற்பவே போலீஸ் செயல்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/dandupalya-screened-instead-viswaroopam-in-hyderabad-168554.html

suvanappiriyan January 26, 2013 at 6:43 AM  

அழகிய பகிர்வு பாய்! ரஜினிக்கு உள்ள அறிவு கூட கமலுக்கு இல்லாதது வியப்பை அளிக்கிறது.

UNMAIKAL January 26, 2013 at 11:29 AM  

ஒரு கொள்கை அடிப்படையில் வாழும் ஏராளமான இஸ்லாமியர்கள் வாழும் மண் இது,

இங்கு வெளி வரும் படங்களில் இஸ்லாமியர்களை எப்படி சித்திரிக்கின்றனர் என சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் .

அதைப்பற்றியும் நான் சொல்ல வரவில்லை.

அமைதியாக இருந்த இஸ்லாமியர்கள் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து , ஜன நாயக ரீதியில் கமல் படத்துக்கு எதிர்ப்பை காட்டினார்கள் .

இத்தனை நாள் சும்மா இருந்தவர்கள் வீறு கொண்டு எழுவதை பலரால் தாங்கி கொள்ள முடியவில்லை.

நான் முன்பே சொன்னது போல , நாத்திகவாதம் , ரசவாதம் , இருத்தலியம் , அந்த கட்சி , இந்த கட்சி , பல்வேறு இயக்கங்கள் , பல்வேறு மதங்கள் என பல முகமூடிகள் இருந்தாலும் ,

அதற்கு பின் இருப்பதே இந்துத்துவ ஃபாசிசம்தான்.

இந்த பிரச்சினையில் எல்லா முகமூடிகளும் கிழிந்து போய் , ஃபாசிசம் வெளிப்பட்டது.


ஆளாளுக்கு இஸ்லாமியர்களுக்கு அட்வைஸ் சொல்ல கிளம்பி விட்டார்கள்.

இஸ்லாமியராக பிறந்து , இஸ்லாமுக்கு எதிராக கருத்து சொன்னால் முற்போக்கு முத்திரையும் , ஊடக வெளிச்சமும் கிடைக்கும் என கணக்கிட்டு , இஸ்லாமியர்கள் சிலரும்கூட இந்த அட்வைஸ் ஜோதியில் கலந்தது தனிக்கதை.


இஸ்லாமியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு எதிராக இவர்கள் சொல்லும் கருத்துகளில் இருக்கும் அபத்தங்களை பார்க்கலாம்.

கருத்து:
• ஒரு படம் சென்சாரில் அனுமதி பெற்ற பிறகு அதை எதிர்ப்பது தவறு.
• சென்சார் உறுப்பினர்கள் பலவற்றையும் யோசித்துதான் ஓகே சொல்வார்கள் .
• அதன் பின் எதிர்ப்பது தவறு. இது கருத்து சுதந்திரக்கு எதிரானது .



சென்சார் என்பதைத்தாண்டி , வெகுஜன உணர்வுகளின் அடிப்படையில் எதிர்ப்புகள் ஏற்கப்பட்டுள்ளன.

1. ரஜினியின் பாபா படத்தில் ஒரு பாடலின் வரிகள் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

2. விஜய் நடித்த கீதை என்ற படத்தின் பெயர் எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

3. கமல் நடித்த சண்டியர் படத்தின் பெயர் , எதிர்ப்பு காரணமாக மாற்றப்பட்டது.

4. எதிர்ப்பு காரணமாக டேம் 999 படம் தடை செய்யப்பட்டது.


சொல்லிக்கொண்டே போகலாம்.

யாராவது ஒரு தரப்பை ஒரு படம் புண்படுத்தினால் , அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பது தமிழ் நாட்டில் ஏற்கனவே இருக்கும் நிலைதான்.

அந்த எதிர்ப்பின்போதெல்லாம் கருத்து சுதந்திரன் பற்றி பேசாமக் சும்மா இருந்து விட்டு , இஸ்லாமியர்கள் குரல் கொடுக்கும்போது மட்டும் அட்வைஸ் கொடுப்பது கேலிகூத்து.



கருத்து:
• இஸ்லாமியர்களுக்கு சகிப்பு தன்மை குறைவு. அதனால்தான் எதிர்க்கிறார்கள்.
• இந்துக்களை கிண்டல் செய்து படம் எடுத்தால் அவர்கள் இவ்வளவு எதிர்ப்பு காட்ட மாட்டார்கள்.

யாராக இருந்தாலும் எதிர்ப்பு காட்டத்தான் செய்வார்கள் என்பதைத்தான் ஏற்கனவே பார்த்து விட்டோமே..

இன்னொன்றும் பார்க்க வேண்டும் .

கமல் தான் சார்ந்த பிராமண இனத்தையோ, இந்து மதத்தையோ விமர்சித்து படம் எடுத்தால் , அவ்வளவு எதிர்ப்பு இருக்காது .

சம்பந்தம் இல்லாமல் இன்னொரு இனத்தையோ , மதத்தையோ சீண்டுவதுதான் பிரச்சினை.


கருத்து:

• எங்கள் மதத்தை சார்ந்தவனை வில்லனாக காட்டகூடாது என எல்லா மதத்தினரும் கேட்க ஆரம்பித்தால் , எப்படி படம் எடுப்பது.....

ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவனை வில்லனாக காட்டுவது தவறல்ல.
ஆனால் குறிப்பிட்ட மதம்தான் வன்முறைக்கு காரணம் என காட்டுவது தவறு.


கருத்து:
• இஸ்லாமியர்கள் இவ்வளவு தீவிரமாக எதிர்ப்பதே தீவிரவாதம்தானே..

கட்சிக்கொடி கட்டிய காரில் வந்து பல தவறுகள் செய்கிறார்கள்.

அந்த கட்சிக்கொடியுடன் படம் எடுக்க முடியுமா?

சில ஜாதிக்கட்சியினர் வன் முறையில் ஈடுபடுகிறார்கள்.

அந்த கட்சி தலைவர்களின் படத்துடன் வன்முறையாளர்கள் நடமாடுவது போல எடுக்க முடியுமா?

அதை எல்லாம் யாரும் காட்டுவதில்லை.

ஆனால் நடப்பதைத்தானே காட்டுகிறேன் என நேரடியாக இஸ்லாமிய அடையாளத்துடன் எதிர்மறை காட்சிகளை காட்டுவதால்தான் அவர்கள் எதிர்க்க வேண்டி இருக்கிறது.

இதே போன்ற நிலை , ஓர் அரசியல் கட்சிக்கோ , ஜாதி அமைப்புகளோ ஏற்பட்டு இருந்தால் , அவர்கள் எதிர்ப்பு இதை விட பல மடங்கு அதிகமாக இருந்து இருக்கும்.


கருத்து:
• ஒரு சினிமா வெளி வரும் முன்பே சிறப்பு காட்சி கேட்டு , இப்படி ரகளை செய்வது சரியா?

இப்படிப்பட்ட சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன.

மணி ரத்தினம் எடுத்த பம்பாய் படம் , பால் தாக்கரேவுக்கு காட்டப்பட்ட பின் தான் அங்கு ரிலீஸ் ஆனது ,

பாபா படம் சர்ச்சையில் சிக்கியபோது , தன் படத்தில் யாரையும் புண்படுத்தவில்லை என்றும் ,

வேண்டுமானாலும் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து , தவறுகள் இருப்பின் திருத்திக்கொள்வதாகவும் ரஜினி சொன்னார்.

இப்படி ஆயிரம் முன் உதாரணங்கள் உள்ளன.

எனவே இஸ்லாமியர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை



THANKS TO source:http://www.pichaikaaran.com/2013/01/blog-post_25.html

UNMAIKAL January 26, 2013 at 1:22 PM  

ரஜினிகாந்த் அவர்களுக்கு தமுமுக தலைவர் கடிதம்
Friday, 25 January 2013

இஸ்லாமியர்களின் நண்பராக விளங்கும் திரு. ரஜினிகாந்த் அவர்கள், தனது ஆருயிர் நண்பர் திரு. கமலஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் தடையை கவனத்தில் கொண்டு, இஸ்லாமிய சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார்.

விஸ்வரூபம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, ரஜினிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பண்பட்ட மனிதர், ஆன்மீகவாதி. யாரையும் காயப்படுத்தும்படி பேசாதவர்.

அவரது திரைப்படங்களில் கூட எந்த ஒரு தனி மனிதரையும் சமூகத்தையும் தாக்கி வசனமோ காட்சிகளோ இடம்பெறாது.

1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் தொடர் குண்டுகள் வெடித்து தமிழகமே பதற்றமாக இருந்த சமயத்தில், சீனாவில் சுற்றுப்பயணத்தில் இருந்த திரு. ரஜினிகாந்த் அவர்கள் பாதியிலேயே சென்னைக்குத் திரும்பி வந்தார்.

"எனது அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இந்தப் பாதக செயலை செய்திருக்க மாட்டார்கள்' என்று கூறி தமிழகத்தை சூழ்ந்திருந்த பதற்றம் தணிய காரணமாக இருந்தார்.

அன்று அவரது ஆதரவான குரல், முஸ்லிம்களுக்கு, வெந்த புண்ணில் மருந்திடுவதாக அமைந்தது.

இன்றும் அதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்.

நண்பர் திரு. கமலஹாசன் அவர்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது நட்பும் சகோதர வாஞ்சையும் கொண்டவர் தான் என்பதை நாங்கள் அறிவோம்.

அவர், முற்போக்கு சிந்தனைக் கொண்டவர்.

பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்.

1992ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து நண்பர் திரு. கமலஹாசன் அவர்கள், பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.

இப்போதும் நாங்கள் கமலஹாசனை எதிரியாகக் கருதவில்லை.

அவர் எடுத்திருக்கும் திரைப்படம் ஏற்படுத்தப் போகும் பாதிப்பைக் கருத்தில் கொண்டுதான் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

நாங்கள் விஸ்வரூபம் திரைப்படம் விஷயத்தில் பொறுமைக் காத்தோம்.

மூன்று மாதங்களுக்கு முன்னரே திரைப்படத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

அவர் காலம் தாழ்த்திக் கொண்டே வந்தார்.

திரையிட வெகு சமீபமாகத்தான் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

படத்தில் அவர் சித்தரித்திருக்கும் காட்சிகள் எங்களைக் கவலையுறச் செய்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விரும்பத்தகாத செயல்கள் காரணமாக முஸ்லிம்களாகிய நாங்கள் ஏற்கனவே மனவேதனை அடைந்திருக்கிறோம்.

காயம் பட்டிருக்கும் எங்களை ஒரு நண்பராக இருந்துகொண்டு திரு.கமலஹாசன் அவர்களும் இப்படியானதொரு திரைப்படத்தை எடுத்திருப்பது தான் எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டில் சினிமாவின் மூலமாக புகழ்பெறும் ஒருவர் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆகமுடியும் என்றால்,
அதே சினிமாவைக் கொண்டு ஒரு சமூகத்தைக் குற்றவாளியாக சித்தரிக்கவும் முடியும்.

இதை ஏன் திரு. கமலஹாசன் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் எங்கள் வருத்தம்.

இதனை சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

விஸ்வரூபம் படம் குறித்த திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஆலோசனைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,

(ஜே.எஸ்.ரிபாயீ)
தலைவர், தமுமுக

UNMAIKAL January 26, 2013 at 7:40 PM  

கமல்ஹாசன் கருத்துக்கு தமுமுக வன்மையாக கண்டனம்
Saturday, 26 January 2013 11:01

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளியிடும் கண்டன அறிக்கை:

விஸ்வரூபம் படம் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கமல்ஹாசன் ஏதேதோ கூறுகிறார்.

முதலில் கலாச்சார பயங்கரவாத்தை எதிர்கொள்வேன் என்றார்.

இப்போது முதுகில் குத்திவிட்டார்கள் என்கிறார்,

தேசப்பக்தி உள்ள முஸ்லிம்கள் எதிர்க்க மாட்டார்கள் என்கிறார்.

முஸ்லிம்களை கொச்சைப் படுத்த கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபம் படப் பிரச்சனை கருத்து தீவிரவாதமாகவே பார்கிறோம்.

படத்தை பார்க்க காலத்தை நீட்டித்தார்.

படத்தை இறுதிவரை பார்த்தப் பின் அதிர்ச்சி அடைந்ததால் அவருடன் மேலும் ஏதும் பேசாமல் கிளம்பினோம்.

அவர் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கையை படம் தகர்த்து விட்டது.

இந்தப் படத்தில் எந்த மாச்சரியங்களும் இடம் பெறாது என்றும், கமலுடன் நடந்த முதல் இரண்டு சந்திப்புகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்ற நம்பிக்கையும் எங்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் அவருடைய அலுவலகத்தில் இந்த படத்தை நாங்கள் பார்த்த போது அங்குலம் அங்குலமாக படம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு விரோதமாகவும் அனைத்து காட்சிகளும், கதாபாத்திரங்களும் ஒரு வெறுப்பு பிரச்சாரமாகவே அமைந்திருந்தது

இதன் காரணமாகதான் இப்படத்தை தடை செய்ய தமிழக அரசிடம் கோரினோம்.

படத்தை பார்த்த பின்னர் நாங்கள் படத்திற்கு கமலிடம் நற்சான்றிதழ் எதுவும் தரவில்லை

தேசப்பற்று இருக்கின்ற காரணத்தால் தான், நாட்டில் ஏதும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்ற அக்கறையில் தான் களத்தில் இறங்கினோம்.
எனவே கமல்ஹாசன் அவர்களின் கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது.


இவண்,
(ஜே.எஸ்.ரிபாயீ)

SOURCE: TMMK

UNMAIKAL January 26, 2013 at 7:44 PM  

கடைசி நேரத்தில் பத்ம விருதுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கமல் பெயர்...

விஸ்வரூபம் சர்ச்சை காரணம்?


Posted by: Shankar Published: Saturday, January 26, 2013, 16:22 [IST]


டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்பூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமல்ஹாஸனின் பெயர் கடைசி நேரத்தில் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
விஸ்வரூபம் சர்ச்சைதான் இதற்குக் காரணம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு நேற்று பத்ம விருதுகளை அறிவித்தது.

விருது பெறுவோர் பட்டியலில் தமிழகத்திலிருந்து கமலுக்கு பத்மபூஷன் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாம்.

ஆனால் கமல் மீதான தற்போதைய பிரச்சினைகள் மத்திய அரசு அதிகாரிகளை கடைசி நேரத்தில் யோசிக்க வைத்துள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன.

இதையடுத்து தமிழகத்தில் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

வேறு சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் கமலுக்கு பத்மபூஷன் விருது வழங்குவது பொருத்தமாக இருக்காது என்று கருதி விருது பெறுவோர் பெயர்களை அறிவிப்பதற்கு முந்தைய நாள் பட்டியலில் இருந்து கமல் பெயரை கடைசி நேரத்தில் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/01/kamal-s-name-removed-from-padma-award-168638.html

UNMAIKAL January 26, 2013 at 10:46 PM  

தேவையெனில் உச்சநீதிமன்றத்துக்கும் போவோம்... - முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு

சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாகக் கூடாது. தேவைப்பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும் செல்லத் தயாராக உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

விஸ்வரூபம் படத்தின் மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றம் அறிவிக்கவிருக்கிறது.

இதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விஸ்வரூபம் படத்தை சென்னையில் பார்த்தனர்.

இதற்கிடையே, விஸ்வரூபம் படத்தின் மீதான தடை ஒருவேளை நீக்கப்பட்டால், அதே நாளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

24 அமைப்புகளும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதாக அறிவித்துள்ளனர்.

விஸ்வரூபம் படத்தை ஏற்கெனவே ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் திரையிட முடியாத சூழல் உள்ளது. கேரளாவில் இந்தப் படம் வெளியான இரண்டு நாளில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

எனவே பிற மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு தடை கோர முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/01/islamic-organisations-decide-approach-supreme-court-168642.html

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP