**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

"குமுதம்" அரசுக்கும் சந்தேகம்.+ கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல! தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள்!

>> Monday, December 29, 2008

கார்கரே கொல்லப்பட்டது ஏகே47 மூலம் அல்ல!

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு இடையில் கொலை செய்யப்பட்ட
மும்பைத் தீவிரவாதத் தடுப்புத்துறை(ATS)த் தலைவர் கார்கரே கொல்லப்பட்டது ஏகே 47 ரக துப்பாக்கியின் மூலம் அல்ல என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கியிலுள்ள 9MM ரக தோட்டாக்களே மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலில் காணப்பட்டன எனப் பத்திரிக்கைகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையின்போது கார்கரேயின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 7.52MM ரகத் தோட்டாக்கள் அல்ல எனவும் கைத்துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 9MM ரகத் துப்பாக்கித் தோட்டாக்களே அவர் உடலில் காணப்பட்டன எனவும் தகவல்கள் கசியத் துவங்கியுள்ளன.

தற்பொழுது காவல்துறை கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப் மற்றும் மும்பைத் தாக்குதலின்போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் இஸ்மாயிலின் கைவசமிருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியான குண்டுகள் துளைத்தே கார்க்கரே கொல்லப்பட்டார் என்ற காவல்துறையின் வாதத்தைத் தற்பொழுது வெளியாகும் தகவல்கள் கேள்விக்குறியாக்கி உள்ளன.

கார்கரே கொல்லப்பட்டதைக் கண்ணால் கண்ட ஒரே சாட்சியான கான்ஸ்டபிள் ஜாதவின் வாக்குமூலப்படி, மறைவான இடத்திலிருந்து திடீரென வெளியான இஸ்மாயிலின் கைகளில் இருந்து வெளியான ஏ.கே.47 துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தே கார்கரே கொல்லப்பட்டார்.

இஸ்மாயில், கலாஷ்நிகோவ் 47 ரகத் துப்பாக்கி உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக ஜாதவ் கூறியுள்ளார். ஆனால், கலாஷ்நிகோவ் துப்பாக்கிகளில் 7.52MM தோட்டாக்களே உபயோகிக்க முடியும். கொல்லப்பட்ட கார்கரேயின் உடலிலிருந்து கலாஷ்நிகோவில் உபயோகிக்கும் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கஸபின் கைகளில் கைத்துப்பாக்கி இருந்ததாக இதுவரை வெளியான தகவல்களில் கூறப்படவும் இல்லை. அதுமட்டுமல்ல, கஸப் கைத்துப்பாக்கி உபயோகித்ததாக ஜாதவின் வாக்குமூலத்திலும் இல்லை. ATS அதிகாரி ஸலஸ்கர் சுட்ட குண்டு கஸபின் கைகளில் பாய்ந்து, அந்நேரத்தில் அவன் வலிதாங்காமல் அலறியதாக மட்டுமே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதலைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக் கொண்டு வேறு ஏதேனும் குழுக்கள் கார்கரேயைக் கொலை செய்திருக்கலாம் என்ற சாத்தியமான சந்தேகத்திற்கு இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் வலுக் கூட்டியுள்ளன. கஸபும் இஸ்மாயிலும் சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டுத் தப்பி ஓடிய பின்னரும் சி.எஸ்.டிக்குச் சமீபமுள்ள மெட்ரோ மற்றும் அதன் சுற்றுபுறங்களில் மேலும் பல துப்பாக்கிச் சூடு சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.

தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றத் தொடக்கத்தில் இதனைக் குறித்துப் பலமுறை செய்தி கூறிய ஊடகங்கள், பின்னர் தாஜிலும் மற்ற தாக்குதல்களிலும் கவனத்தை மாற்றியபின் அவற்றைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை. அதே சமயம், "பொது மக்களின் முன்னிலையில் தெளிவுபடுத்தப் படவேண்டிய பிரேத பரிசோதனை அறிக்கை உட்பட மற்ற ஆதாரங்களை ஊடகங்களுக்குக் கொடுக்க வேண்டாம்" என காவல்துறை சம்பந்தப் பட்டவர்களிடம் கடுமையாகக் கட்டளை பிறப்பித்துள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இது, கார்கரே கொல்லப்பட்ட விதம் குறித்து மேலும் சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.

கார்கரேயின் உடலில் துப்பாக்கித் தோட்டா துளைத்த இடத்தைக் குறித்துத் தற்போதுவரை முன்னுக்குப் பின் முரணான அபிப்பிராயங்களே நிலவுகின்றன. "கார்கரே நெஞ்சில் குண்டுகள் துளைத்து இறந்தார்" என ஆரம்பத்தில் வெளியான செய்திகள், அவர் அணிந்த புல்லட் புரூப் காட்சிகள் வெளியாகி பிரச்சனைகளை ஏற்படுத்தியப் பின்னர், "நெஞ்சில் அல்ல; கழுத்திலேயே அவர் குண்டு துளைத்து இறந்தார்" என்று பின்னர் செய்திகள் வெளியாகின. அவர் எங்கு சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தியைக்கூட இதுவரை உறுதியாகக் கூறாமல் மறைத்து வைத்திருப்பது, கார்கரே கொலையைப் பற்றி மென்மேலும் சந்தேகங்களையே அதிகப் படுத்துகிறது.

***

நவம்பர் 26 அன்று நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் துவக்கத்திலேயே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கார்கரே கொலை செய்யப்பட்ட வேளையில் அதற்கு நாயிக் அருண் ஜாதவ் என்ற ஒருவர் மட்டுமே சாட்சியாக இருந்தார்.

காவல்துறையின் விளக்கப்படி, கார்கரே யாத்திரை செய்திருந்த குவாலிஸ் வண்டியில் கார்கரேயுடன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் ஸலாஸ்கர், கூடுதல் நியமன கமிஷனர் அஷோக் காந்தெ, கான்ஸ்டபிள் நாயிக் அருண் ஜாதவ், மேலும் இரு கான்ஸ்டபிள்கள் ஆகிய ஐவர் உடனிருந்தனர்.

இதில் ஜாதவ் மட்டும் சிறு காயங்களுடன் தப்பிக்கிறார். கார்கரேயும் மற்றவர்களும் கொல்லப்பட்டது எப்படி என்பதை ஜாதவின் விவரிப்பிலிருந்து மக்கள் அறிந்துக் கொள்கின்றனர். காவல்துறை கூறும், கொலையாளிகள் நடத்திய ரேண்டம் 'ஃபயரிங்கில் ஜாதவின் வலது தோளில் மட்டுமே குண்டு காயம் ஏற்படுகின்றது. அதாவது, துப்பாக்கிச் சூட்டில் உயர் அதிகாரிகள் அனைவரும் கொல்லப்பட்ட வேளையில் கீழ்மட்டநிலையிலுள்ள கான்ஸ்டபிள் மட்டும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்.

ஜாதவின் வாக்குமூலப்படி, காமா மருத்துவமனைக்கு அருகில் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்த தீவிரவாதிகள் கார்கரே பிரயாணித்த குவாலிஸ் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். சி.எஸ்.டிக்குச் சற்று முன்பாக ஹஜ் ஹௌஸ் முன்பக்கத்தில் வந்து சேரும் கார்கரே, குண்டுதுளைக்காத ஆடையும் தலைக்கவசமும் அணிகிறார். இங்கு வைத்து ஸலாஸ்கரும் காந்தேயும் அவருடன் இணைகின்றனர். 'கார்கரேயின் கடைசி அதிரடி' என்ற தலைப்பில் ஐபிஎன் இணையதளம் வெளியிட்ட அவரது படத்தின்கீழ் "LAST OPERATION: Karkare gears up before entering the Taj Palace hotel" என்று தகவல் தந்தது.

ஆனால், தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற தாஜ் ஓட்டலுக்கோ ஓபராய் ஓட்டலுக்கோ கார்கரே செல்லவில்லை. மும்பைக் காவல்துறையின் மற்றொரு அதிகாரியான தினேஷ் அகர்வால் கூறுவதை கேளுங்கள்: "தீவிரவாதத் தாக்குதல் நடந்த உடனேயே ATS குழுவை அலர்ட் செய்வதற்காக நான் கார்கரேவை அழைத்தேன். 'அகர்வால், நான் இப்பொழுது சம்பவ இடத்தில்தான் இருக்கிறேன்' என்று கார்கரேயிடமிருந்து உடனடியாக எனக்கு பதில் கிடைத்தது" கார்கரே சி.எஸ்.டியில் நிற்கும் வேளையிலேயே அகர்வால் கார்கரேயை அழைத்திருக்க வேண்டும்.

சி.எஸ்.டியில் நடந்த துப்பாக்கிச் சூடுக் காட்சிகளிலிருந்து தீவிரவாதிகளின் ஆயுதபலத்தைக் குறித்து கார்கரே புரிந்திருக்கக் கூடும். என்றாலும் கார்கரே காந்தேவையும் ஸலாஸ்கரையும் அழைத்துக் கொண்டு காமா மருத்துவமனைக்குப் புறப்படுகின்றார். அவர் சென்று சேர்ந்ததோ, காமா மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஆளரவமற்ற பகுதியில்!

அதன் மிக அருகிலேயே மும்பை காவல்துறை கமிஷனர் அலுவலக வளாகத்தினுள் சி.எஸ்.டி தலைமையகம் அமைந்துள்ளது . ஏற்கெனவே சி.எஸ்.டியில் தீவிரவாதிகளுடன் போராட்டம் நடத்திய மூன்று உயர் அதிகாரிகள், வேறு ஆயுதங்களோ காவல்படையின் உதவியோ இன்றி ஒரே ஒரு வண்டியில் தீவிரவாதிகளைத் தேடிச் செல்வது என்பது அசாதாரணச் சம்பவமாகும்.

கார்கரேக்குத் தவறான தகவல் வழங்கி, அவரைக் காமா மருத்துவமனைக்குத் திசைதிருப்பி விட்டது யார்? அல்லது கார்கரே வேறு ஏதாவது இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டாரா?. 50க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களில் பங்குபெற்றவர்; அதில் பெரும்பாலானவையும் போலி என்கவுண்டர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நாயிக் அருண் ஜாதவை நம்பலாமா?(விவாதம் கிளப்பிய சதபோலா என்கவுண்டர் (1997), நவீன்ஷெட்டியைச் சுட்டுக்கொன்ற 2003ல் பாந்த்ரா குர்லா பில்டிங் என்கவுண்டர் போன்றவற்றிலும் இதே ஜாதவ் பங்கு பெற்றிருந்தார். இத்தகைய பல என்கவுண்டர்களிலும் ஜாதவ் மும்பை நிகழ்வைப்போலவே சொல்லி வைத்தாற்போல் அபாயகரமில்லாத அற்ப காயங்களுடன் தப்பியிருந்தார்.)

சந்தேகங்கள் தொடர்கின்றன ...

இன்ஷா அல்லாஹ் தொடரும் ...

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1123&Itemid=53

*******************************************

அரசு பதில் 31.12.08 குமுதத்திலிருந்து

பொன்விழி, அன்னூர். :- போலீஸ் அதிகாரி கார்கரே தீவிரவாதிகளால் மட்டும்தான் கொல்லப்பட்டாரா என்று அந்துலே சந்தேகம் எழுப்பியது சரியா?

அரசு:-அதற்கு வேறு ஏதாவது பின்னணி உண்டா என்பதை விசாரிக்க வேண்டும் என்று அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது.

****************************************

தேசப் பிதா என்று கருதப் பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா?

இதுதான் வெட்கப்பட வேண்டிய விசாரத்திற்குரிய கதை!
அந்துலே அய்யப்படுவதில் அர்த்தம் உண்டு - மின்சாரம்


2008 செப்டம்பர் 29 ஒரு முக்கிய நாள் - அன்று தான் மகாராட்டிர மாநிலம் மாலே காவ்ன் நகரில் குண்டு வெடிப்பு!


இந்தக் குண்டு வெடிப்புக் குக் காரணமாக இருந்தவர்கள் இராணுவத்தைச் சேர்ந்த வர்கள் என்று தெரிய வந்த போது நாடே அதிர்ச்சிக்கு ஆளாகியது.
சிறீகாந்த் புரோகித் என்ப வர் ஒரு இராணுவ அதிகாரி, அமிந்தானந்தா என்பவர் ஒரு சாமியார், பிரக்யாசிங் தாகூர் என்பவர் பெண் சந்நியாசினி - இவர்கள் உள்ளிட்ட பத்துப் பேர் கூட்டுச் சதியில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்பது வெளியில் வந்தபின் சங்பரிவார் வட்டாரத்தில் இடி விழுந்தது போல் ஆகி விட்டது.


அதுவரை பயங்கரவாதம், தீவிரவாதம் என்றாலே அதன் தலைப்புச் செய்தி முஸ்லிம் தீவிரவாதம் என்பதாகத் தானே இருக்கும்.


இந்தத் திட்டமிட்ட பிரச் சாரத்தின் முகமூடி இப்பொ ழுது கிழிந்து தொங்கும்படி ஆகிவிட்டதே என்ற போது அவர்களின் முகங்கள் வீங்கித் தொங்க ஆரம்பித்து விட்டன.


குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே வீராவேசத் துடன் சங்பரிவாரில் உள்ள ஒரு சிலர் நியாயவாதிகள் போலவும் சட்டத்தைக் காப்பாற்றும் சபாஷ் மனிதர்கள் போலவும் திருவாய் மலர்ந்தனர்.


சங்பரிவாரில் உள்ள ஆர். எஸ்.எஸ். போன்ற அமைப் புகள் இந்தக் குரலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதன் பிறகு இது ஒரு திட்டமிட்ட சதி - பொய்ப் பிரச்சாரம்! என்று அவர்களின் உதடுகள் அசைய ஆரம்பித்தன. சட்ட ரீதியான உதவிகளை செய்வோம் என்று சொல்லி முன் வந்தனர்.


குற்றம் நிரூபிக்கப்படும் என்கிற அளவுக்கு ஆதாரங்கள் வலிமை பெற்று விட்டன என்ற ஒரு நிலை வந்த போது வெலவெலத்துப் போய் இந்துக்கள் குற்றம் செய்திருந் தாலும் அவர்களின்மீது விசாரணையே கூடாது என்கிற அளவுக்குக் கூசாமல் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.


ஒருபடி மேலே சென்று சிவில் யுத்தம் தொடுப்போம்! என்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் பேசியிருக்கிறார்.


ஒகேனக்கல்லில் செய்தியாளர்களிடம் (25.12.2008) பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இதுபற்றி ஒரு கருத்தை வெளியிட்டார் இப்படி சொல்வது எவ்வளவு பெரிய தேசியக் குற்றம்.

இதையே வேறு எவராவது சொல்லியிருந்தால் பூகம்பம் வெடித்திருக்காதா? ஊடகங்கள் ஊதிப்பெருக்கி உயிரை வாங்கியிருக்காதா? அவ்வாறு கூறியதற்குப் பிறகும் மத்திய அரசும்கூட மவுனமாகப் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.


மாலேகாவ்ன் குண்டு வெடிப்புச் சதிகாரர்களை வெளியில் கொண்டு வருவதில் முன்னணி மாமனிதராகயிருந்த மகாராட்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே அசோக் காம்தே, விஜய் சாலஸ்க்கர் ஆகிய மூன்று பேரும் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் அதிர்ச்சி ஒரு பக்கம், ஆவேசம் இன்னொரு பக்கம், அய்யப்பாடு மற்றொரு பக்கம் ஏற் படாதா? ஏற்படக்கூடாதா?


அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் (மகாராட்டிர) மாநில முன்னாள் முதல் அமைச்சரும்கூட) அப்துல்ரகுமான் அந்துலே (ஏ.ஆர். அந்துலே) நாடாளுமன் றத்திலே அர்த்தமுள்ள வினாக் கணை தொடுத்தார்.


காவல்துறையின் நேர்மையான அதிகாரி கர்கரேயைக் கொன்றது யார்?

மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதியில் சம்பந்தப்பட்ட மதத் தீவிர வாதிகளை அப்படியே கொத்தாகக் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த அந்த அதிகாரியை காமா மருத்துவமனைக்குச் செல்லுமாறு வழி நடத்தியவர்கள் யார்?


மும்பையில் நவம்பர் 26-இல் (2006) பயங்கரவாரத் தாக்குதலுக்கு ஆளான தாஜ் ஓட்டலுக்கோ, டிரைடன்ட் ஒபாராய் ஓட்டலுக்கோ, சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கோ நரிமன் இல்லத்துக்கோ செல்ல விடாமல், காமா மருத்துவமனை வளாகத்துக்கு அவர்களைச் செல்லுமாறு பணித்தவர்கள் அல்லது வழி காட்டியவர்கள் யார்?

அந்த ஆணை எங்கிருந்து பிறப்பிக்கப்பட்டது? என்ற ஆழமான, அவசியமான, அய்யம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே அந்துலே வினா எழுப்பினார்; சந்து முனையில் அல்ல சாட்சாத் நாடாளுமன்றத்திலேயே அனல் கக்கினார்.


அவ்வளவுதான்! சங்பரிவார் கூட்டத்தின் அக்குளில் தேள் கொட்டியது போல குதியாட்டம் போட்டனர். தங்களுக்கே உரித்தான ஆத்திர விசையோடு நாடாளுமன்றத்தையே ரணகளமாக்கினர் - கடைசி ஆயுதமாக வெளிநடப்புச் செய்தனர்.


போதும் போதாதற்குக் காங்கிரஸ் கட்சியிலேயே உள்ள ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் சேர்ந்து கொண்டனர். ஒரு லாலு பிரசாத் யாதவுக்குத்தான் முதுகெலும்பு இருந்தது என்று நிரூபித்துக் கொள்ளும் வகையில் ஆதரவுக் குரலும் கொடுத்திருக்கிறார்.


பா.ஜ.க.வினர் உத்தம புத்திரர்கள் என்றால் அந்துலே சொல்வது முக்கியமானது. அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றுதானே பேசியிருக்க வேண்டும்.


யாரையும் குறிப்பிட்டுக் குற்றப் பத்திரிகை படிக்கவில்லையே அந்துலே!

அப்படியிருக்கும்போது பா.ஜ.க.வினர் நெஞ்சம் மட்டும் ஏன் குறுகுறுக்கிறது?

பொதுவான பழமொழி குற்றமுள்ள நெஞ்சுதான் குறு குறுக்கும் என்பதாகும். அப் படியானால் அவர்கள் குற்றவாளிகள்தான் என்ற அய்யப்பாடு அறிவைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்.


கார்கரே படுகொலை செய்யப்பட்டது குறித்து பலப்பல தகவல்கள் முரண்பாடான தகவல்கள் குவிந்து கொண்டே யிருக்கின்றன.


1) தீவிரவாத எதிர்ப்பு போலீஸ் படையின் தலைவர் ஹேமந்த் கார்கரே
2) என்கவுன்டர் ஸ்பெஷ லிஸ்ட் விஜய் சாலஸ்கர்.
3) உதவி ஆணையர் அசோக் காம்தே.
கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரிகள்மீது இந்துத்துவவாதிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி கருத்துக் ளைக் கூறி வந்திருக்கிறார்கள்.


மூன்று பேரும் ஒரே இடத்திலே கொல்லப்பட்டனர் என்று தகவல்; இல்லை இல்லை வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர் என்பது மற்றொரு தகவல்: இந்த மூன்று அதிகாரிகளும் ஒரே காரில் சென்றபோது எப்படி வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டு இருக்க முடியும் என்ற நியாயமான சந்தேகம்.


விக்டோரியா டெர் மினஸில் கொல்லப்பட்டனர்; மரத்தின் பின்னால் ஒளிந்திருந்து தீவிரவாதிகள் சுட்டனர்.மக்கள் நடமாட்டமே இல்லாத ஒரு சந்தில் சுடப்பட் டார்கள் என்று மாறி மாறி தகவல்கள் வருகின்றன என்றால் நியாயமாக இதன்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பது தானே நியாயம்?

அந்த நியாயத்தின் அடிப்படையிலே தானே அந்துலே வினாக்கணை தொடுத்தார்.

அவர் சிறுபான்மை முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் நியாயத்துக்காகக் குரல் கொடுக்க அவர் உரிமையற்றவர் ஆகி விடுவாரா?

சரி அந்துலேக்கு மட்டும் தான் இந்த சந்தேகம் வந்துள்ளதா?

கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் எவருக்கு இந்தச் சந்தேகம் வரத்தானே செய்யும்.

நடத்திருக் கக்கூடிய சூழல் முரண்பாடான தகவல்கள், கொல்லப்பட்டவர்கள் அதற்குமுன் யாரால் எப்படி விமர்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை யெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?


ஏதோ அந்துலே மட்டும் தான் கேள்வி எழுப்பியிருக்கிறார் என்றும் சொல்ல முடியுமா?

காங்கிரஸ் கட்சி யின் பொதுச்செயலாளர்களுள் ஒருவரான திக்விஜய்சிங் அந்துலேயின் நிலையை ஆதரித்துள்ளாரே. சமாஜ்வாத கட்சியின் தலைவர் முலாயம்சிங், உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் து.ராஜா எம்.பி., சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யெச்சூரி போன்றோர்களும் பா.ஜ.க.வை நோக்கி கேள்விக் குண்டுகளை வீசியெறிந்திருக்கிறார்களே!


சங்பரிவார்கள் கும்பலின் சூழ்ச்சிகளையும் கடந்த கால நடப்புகளையும் அறிந்தவர்கள், ஹேமந்த் கார்கரேயின் படுகொலையில் சந்தேகப்படுவது என்பது நூற்றுக்கு நூறு சரிதானே!


தேசப் பிதா என்று கருதப் பட்ட காந்தியார் படுகொலை வழக்குத் தொடர்பான ஆவணங்களே காணாமல் போய்விடவில்லையா?


வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காக குறிப்பிட்ட சில பேர் கொலை செய்யப்படுவது, ஆவணங்களை அழிக்க அந்த ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் எரிப்பு என்பது போன்றவை எல்லாம் இதற்கு முன்நடந்ததில்லையா?


இந்தக் கண்ணோட்டத்தில் அந்துலே எழுப்பிய அய்யங்களுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமே.
http://files.periyar.org.in/viduthalai/20081227/snews01.html

ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: மத்திய அமைச்சர் ஏ.ஆர். அந்துலே செய்த தவறு என்ன?
- ஓ. பிரகாசம், திருவள்ளூர்


பதில்: மாலேகாவ் குண்டு வெடிப்பை ஒட்டி, இராணுவ அதிகாரிகளாகி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுனுஓ வெடிகுண்டுகளை வெடிக்க சாமியாரினி,

சங்கராச்சாரி வேடமிட்டு வெடிகுண்டு தீவிரவாதிகளாக - பழியை முஸ்லிம்கள்மீது போட்டது போன்ற பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டு வந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புத் நடவடிக்கை அதிகாரியின் கார்கள் மும்பை ஓட்டல்கள் தாக்குதலின்போது,

நேரே ஒட்டலுக்குப் போகாமல், ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அவர் சுடப்பட்டுக் கொலையானார் என்கிறபோது, அவரை அங்கே வரச் சொன்னவர்கள் யார்?

இவர் அம்மருத்துவமனைக்கு சென்றது பற்றியும் புலன் விசாரணை நடைபெற்று சந்தேகங்கள் களையப்படல் வேண்டும் என்ற கூறியது கேட்டு, பா.ஜ.க. பரிவாரங்கள் பதறின;

பாகிஸ்தானியரை இவர் காப்பாற்ற முனைவதாக திடீரென அபவாதப் பழி கூறினர்;

காங்கிரஸ் கட்சினரும் அவசரப்பட்டு அந்துலே கருத்து எம் கருத்தல்ல என்று கூறி பா.ஜ.க. விரித்த வலையில் விவரம் தெரியாமல் விழுந்தனர். பிறகு எழுந்தனர். இதுதான் வெட்கப்பட வேண்டிய விசாரத்திற்குரிய கதை!
http://files.periyar.org.in/viduthalai/20081227/snews09.html

******************************

(வீடியோ) மாவீரன் ஹேமந்த் கர்கரே-- "பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியவர்.

1 comments:

anbarasan December 29, 2008 at 2:43 PM  

விடியோ பார்க்கவும்.

வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பயங்கரவாதம்.

எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

வாசகர்களே தயவு செய்து விடியோ முழுவதையும் காணுங்கள்.

தாங்க‌ளறிந்த அனைவருக்கும் இதை காணும்படி தெரியப்படுத்துங்கள்.

CLICK BELOW:-


வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP