**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

காந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி!

>> Tuesday, February 13, 2007

காந்தியார் கொலையில் பார்ப்பனர் பின்னணி!
காந்தியாரின் பேரன் துஷார் காந்தி தரும் திடுக்கிடும் தகவல்கள்!!

புதுடில்லி, சன. 31- காந்தியார் படுகொலையின் பின்னணியில் பார்ப்பனர்கள் இருந்ததாக காந்தியாரின் பெயரன் துஷார் காந்தி, தனது புத்தக அறிமுக விழாவில், திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தேசப் பிரிவினைக்குக் காரணமாக இருந்ததால்தான் காந்தியைக் கொன்றதாகவும், பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடியை இந்தியா தர வேண்டும் என்று காந்தி வற்புறுத்தியதால்தான் காந்தியைக் கொன்றதாகவும் சங் பரிவார் அமைப்புகள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தத் தத்துவம் கொலையை மறைப்பதற்காகக் கூறப்படும் சாக்குப் போக்குகள். அது உண்மையில்லை.

பார்ப்பனர்கள் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற விரும்பினர். அதன் பின்னணியில் தான் தேசத்தின் தந்தையை பலமுறை கொல்ல முயன்றனர். இறுதியில் படுகொலை செய்தனர்.

பார்ப்பனர்களின் திட்டம்!

காந்தியார் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். பார்ப்பனர்கள் ஆதிக்கச் சக்திகளாக விளங்கவேண்டும் என்பதற்காகவே இந்தியாவை அவர்கள் இந்து தேசமாக மாற்ற விரும்பினர். அதனால்தான் காந்தியார் குறி வைக்கப்பட்டார்.

(கேள்வி: அன்று காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்ற பச்சை குத்தப்பட்ட பெயர்; இது எதைக் காட்டுகிறது?

பதில்: ஆர்.எஸ்எஸ் பார்ப்பன புத்தி மோசடியைக் காட்டுகிறது! VIDUTHALAI )

1948 ஆம் ஆண்டு மகாராட்டிரா மாநிலம் சனவரி 30 ஆம் நாள் காந்தியார் கொலை செய்யப்படுவதற்கு முன்பே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றது. இந்த முயற்சிகளுக்கு பூனே மையமாகத் திகழ்ந்தது.

1935 ஆம் ஆண்டு பூனேயில் தாழ்த்தப்பட்டோர் பேரணி ஒன்றில் காந்தியார் கலந்துகொண்டபோது, அவரை நோக்கிக் குண்டுகளை வீசிக் கொல்ல முயன்றனர். அதில் காந்தியார் தப்பினார்.

காந்தியாரைக் கொல்ல மூன்று முறை முயற்சிகள்

மகாராஷ்டிராவில் வர்தா, பஞ்ச்கனி ஆகிய இடங்களில் காந்தியாரைக் கொல்ல முயற்சிகள் நடைபெற்றன. மேற்-கண்ட மூன்று கொலை முயற்சிகளிலும் நாதுராம் கோட்சே, நாராயண் அப்தே ஆகியோர் தலைமையிலான தீவிரவாதக் குழுவினர் ஈடுபட்டனர்.

காந்தியார் கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 1968 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'கபூர் ஆணையம்'' காந்தியார் கொலையின் பின்னணியில் உள்ள சதி தொடர்பான ஏராளமான விவரங்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டில் தற்போதும் இந்து முஸ்லிம்கள் இடையே வெறுப்புணர்வு நீடித்து வருகிறது. அதைப் போக்கி இரண்டு மத மக்கள் இடையேயும் மனித நேய உறவுகளை மேம்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் பிளவுபட்டுள்ளனர். ஒன்றுபடுத்தத் தேவையான முயற்சிகளை எடுக்காவிட்டால், நாடு மற்றொரு பிரிவினையைச் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு துஷார் காந்தி பேசினார்.

COURTSEY: VIDUTHALAI 1.02.07

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP