**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புஷ்ஷை தூக்கிலிட வேண்டும் மகாதிர் ஆவேசம்

>> Saturday, January 13, 2007

சதாம் உசேனைக் கொலை செய்த காட்சியை டி.வி.யில் ஒளிபரப்பியது சரியா?

ஒரு மனிதன் அவன் எப்படிப்பட்டவனாகவும் இருக்கட்டும் மரண தண்டனை கொடுத்துக் கொல்வதை வீடியோ எடுப்பது என்பது அந்த மனித உயிரக் கேவலப்படுத்தும் ஈனச்செயல். அந்த மனிதனின் கடைசி நிமிடங்களில் உரிய மரியாதை கொடுக்காமல் திட்டுவதும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதும் மனிதாபமற்ற கொடுமை. அந்த வீடியோவை டி.வி.யில் உலகம் முழுவதிலும் காட்டியதிலும் அரசியல் இருக்கிறது. அது ஏற்படுத்தக்கூடிய பகைமை யுத்த வெறி கலவரம் இனச்சணi;ட போன்றவை மேலும் ஈராக்கிலேயே தங்கி பஞ்சாயத்து செய்ய அமெரிக்காவுக்கு பெருமளவில் உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா. சபை பிரிவு உபச்சார உரையில் கோஃபி அன்னான் புஷ்ஷைப் பற்றிச் சொன்னது ரொம்பச் சரியானது. 'இன்காரிஜிபிள் பாஸ்டர்ட்!'

பதில்-தான் என்ன?

புஷ் மதம்அவரவர் செய்யும் கொலைகளுக்கு கடவுளரைத் துணைக்கழைக்கும் போக்கு. ஈராக் மீது போர் தொடுக்கும் போது ஜார்ஜ் புஷ் என்ன சொன்னார்?

“கடவுளிடம் அனுமதி பெற்றுத்தான் நான் இப்போரில் இறங்கினேன்.”இப்போது அதே புஷ் இன்னொன்றையும் சொல்லியுள்ளார். “சதாம் உசேனுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஈராக்கின் சட்டபூர்வ அரசும் தளிர்விட்டு வரும் ஜனநாயகமும் படைத்த மாபெரும் சாதனை”. - எப்படியுள்ளது கதை.

சதாம் மீதான வழக்கு என்ன? சதாம் ஈராக்கின் அதிபராக இருந்தபோது அதன் தலைநகர் பாக்தாத்-திற்கு 60 கி.மீ. தொலைவில் உள்ள துஜைல் என்ற கிரா-மத்திற்குச் சென்றார். அப்போது அவரை ஷியா பிரிவு மு°லீம் இளைஞன் ஒருவன் கொலை செய்ய முயன்றான். ஆனால் அதிலிருந்து சதாம் தப்பிவிட்டார். இந்த ஆத்திரத்திலிருந்த அவர் அக்கிராமத்திலிருந்த ஆயிரக்-கணக்கானோரை விசாரணை செய்ய உத்தரவிட்டார். பலர் சித்ரவதைக்கு ஆளாகி காணாமல் போனார்கள். இந்த நிலையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 148 பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில்தான் சதாமுக்கு இப்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்ததும் தண்டனை வழங்கியதும் பன்னாட்டு நீதிமன்றம் அல்ல; அமெரிக்க அதிபர் புஷ் நியமித்த சிறப்பு நீதிமன்றம்தான் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது புஷ் சொல்லியதை அது செய்துள்ளது.

புஷ் ஏன் ஈராக் மீது படையெடுத்தார். அப்போது அவர் என்ன சொன்னார். கொஞ்சம் நினைவுபடுத்துங்கள். “ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளன; அவற்றைக் கண்டெடுக்கப் போகிறோம்” என்று கூறித்தான் பன்னாட்டுப் படைகள் ஈராக்கில் நுழைந்தன. ஆனால் இன்று வரை ஒரு ஆயுதத்தையாவது அவர்கள் கண்டெடுத்து உலகின் கண்களுக்குக் காட்டினார்களா? இல்லவே இல்லை.

அமெரிக்காவின் இலக்கெல்லாம் ஈராக்கின் எண்ணெய் வளம் மற்றும் தனக்கு எதிராளி சதாம் என்ற காரணம்தான் அமெரிக்காவைப் படையெடுக்க வைத்தது. 148 கொலைகளுக்காக சதாமுக்குத் தூக்குத் தண்டனை அளித்த அமெரிக்கா, ஈராக்கில் கொன்ற உயிர்கள் ஆறரை இலட்சம். இந்தக் குற்றத்தை எந்த நீதிமன்றத்தில் விசாரிப்பது? புஷ்ஷை எத்தனை முறை தூக்கில் போடுவது?

அமெரிக்கா, தனக்கு வேண்டும் என்றால் பின்லேடனை ஊக்குவிக்கும். வேண்டாமென்றால் தேடுதல் வேட்டை நடத்தும். இப்படித்தான் சதாமுக்கும் ஒரு காலத்தில் அமெரிக்கா ஆதரவாக இருந்தது. எட்டாண்டு-கள் நடந்த ஈரான் -- ஈராக் போரின் போது சதாமை அமெரிக்கா ஆதரித்தது. இப்போது எதிர்க்கிறது.பின்னர் ஒரு கட்டத்தில் ஈராக்கிற்கு எதிராக ஈரானையும் அமெரிக்கா ஆதரித்துள்ளது. உலகின் சட்டாம் பிள்ளையாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க உலக நாடுகள் பலவற்றிலும் மூக்கை நுழைப்பது அதிகரித்தே வருகிறது.

தன்னை ஒரு சர்வதேச பேட்டை ரவுடியாகக் கருதும் அமெரிக்காவுக்கு அய்.நா.வின் ஆதரவும் பிரிட்டன் போன்றவற்றின் ஒத்துழைப்பும் உண்டு. க்யூபாவும் வெனிசுலாவும் தான் புஷ்ஷை உறுதியுடன் எதிர்க்கின்றன.

புஷ், தான் செய்யும் எல்லாக் காரியங்-களுக்கும் கடவுளின் துணை உண்டு எனக் கூறிக்கொள்கிறார். இன்னும் எத்தனை காலத்திற்கு கடவுளை சொல்லி மனித உயிர்களைக் கொல்லப்போகிறார்கள்?
===========================
உயிர் விடும் கணத்தில், பதற்றம் இல்லை, பயம் இல்லை. கண்ணீர் இல்லை, செய்தவற்றை நினத்துக் கலங்கவோ, வருந்தவோ கூட இல்லை.

அவர் சதாம். உத்தரவிட்டுத்தான் அவருக்குப் பழக்கம். உணர்ச்சிவசப்பட்டு அல்ல.சற்றும் மனிதத்தனமையற்ற, காட்டுமிராண்டித்தனமான, அருவருப்பூட்டக்கூடிய, தண்டனை என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலக்கு, இராக்கியப் பெரும்பான்மயினரான ஷியாக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள். மிகச் சரியான தண்டனைய இராக்கிய நீதிமன்றம் வழங்கியதாக அமெரிக்க அதிபர் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். 'நாங்கள் மரணதண்டனக்கு எதிரானவர்கள்தான். ஆனாலும் சதாம் விஷயத்தில், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி' என்று வழிந்திருக்கிறார்

பிரிட்டனின் பிரதமர் டோனி ப்ளேர்.அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் தவிர, பெரும்பாலான உலக நாடுகள் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தெரிவித்திருக்கின்றன.

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் வரை அத்தனை பேரும் அறிக்கை மழை பொழிந்து தீர்த்துவிட்டார்கள். பட்டும் படாமலும் வருத்தம் தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃபயும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம் என்றால், தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவிகித உலக நாடுகளின் எதிர்ப்புடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் மரண தண்டனை இது.

என்ன செய்தார் சதாம்?சதாம் நிறையவே செய்தார், நல்லதும் கெட்டதுமாக. ஆனால், அவர் செய்த கெட்ட காரியங்களின் வீரியம் மிக அதிகம் என்கிறபடியால், நல்லவை எதுவும் வெளியே தெரியாமல் போய்விட்டது மத்தியக் கிழக்கு தேசங்கள் அனத்துமே இஸ்லாமிய நாடுகளாகத் தங்களை அறிவித்க்துகொண்டு, வெளிப்படையாக மத அடிப்படைவாத ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, சதாம் ஒருவர்தான் இராக்கை மதச்சார்பற்ற தேசம் என்று சொல்லி, ஆட்சி புரிந்தவர். கொஞ்சநஞ்ச காலம் அல்ல.

இருபத்து நான்கு ஆண்டுகள் (ஜூல 16, 1979 முதல் ஏப்ரல் 9, 2003 வரை). கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி, முதியோர் வேலை வாய்ப்புகள், சிறு வியாபாரிகளுக்கு வரித் தள்ளுபடி, நாடெங்கும் நல்ல சாலைகள், நிறைய பள்ளிகள், கல்லூரிகள், எண்ணெய்த் தொழிலை நவீனப்படுத்தியது, உற்பத்திப் பெருக்கம், சிறப்பான ஏற்றுமதிக் கொள்கைகள் என்று சதாமை நல்லவிதத்தில் நினவுகூரப் பல விஷயங்கள் உண்டு.ஆனால், அவர் இனவெறி மிக்கவராக இருந்தார்.

சன்னி முஸ்லிமான சதாமுக்கு, இராக்கின் பெரும்பான்மை சமூகத்தினரான ஷியாக்களப் பிடிக்காது. இன்னொரு முக்கிய இனமான குர்த் மக்களை அறவே பிடிக்காது. குர்த்துகள் தங்களுக்கெனத் தனிநாடு கேட்டுப் போராடத் தொடங்கிய (குர்திஸ்தான்), இராக்கிய ஷியா பெரும்பான்மயினர், இரானின் உதவியுடன் சதாமைக் கவிழ்ப்பதற்கு அந்த இருபத்து நான்கு ஆண்டுகளும் முயற்சி செய்தது ஆகியவை அவரை இனப் படுகொலை நடவடிக்கைகள் வரை இட்டுச் சென்றன.தற்போதய மரணதண்டன, 1982_ல் சதாமால் செய்யப்பட்ட 148 படுகொலகளுக்கான. இந்த வழக்கில் ஒருவேளை சதாம் விடுபட நேர்ந்திருந்தால் கூட, அடுத்தடுத்துப் பல வழக்குகள் தயாராகக் காத்திருந்தன. அத்தனயுமே இனப்படுகொலை வழக்குகள். ஒன்று ஷியா அல்ல குர்த்.

இந்தக் குறிப்பிட்ட சம்பவம், இராக்கின் வடக்கு எல்லயில் அமைநை;துள்ள துஜல் என்கிற நகரில் நடபெற்ற. ஷியாக்கள் நிறந்த துஜல். யுத்த காலம் அது. இரானுடனான யுத்தம் தொடங்கி சூடு பிடித்திருந்த. சதாமின் பணிகளில் அப்போ முதன்மையாக இருந்தது, மக்களை நேரில் சந்தித்துப் பேசுவது. யுத்தத்க்கு ஆதரவு திரட்டுவது பகல் பொழுதுகள் முழுவதையும் அவர் இதற்கே செலவிட்டுக்கொண்டிருந்தார். ராணுவத் தளபதிகளுடனான ஆலோசனைகளை இரவுகளில் வைத்துக்கொண்டார். இராக்கின் அத்தன மூலைகளுக்கும் சதாம் அப்போது போய்க்கொண்டிருந்தார். ஜனநாயக தேசங்களில் தேர்தல் பிரசார சமயங்களில் கூடத் தலைவர்கள் அப்படியரு தீவிரப் பயணம் மேற்கொள்வது சிரமம்.ஜூல மாதம் எட்டாம் தேதி, 1982_ம் வருடம் அவர் துஜலுக்கு வந்தார். 'என் அன்பு மக்களே! நீங்கள் எந்த இனம், எந்தப் பிரிவு என்று பார்ப்பவனல்ல நான். நாம் அனவரும் இராக்கியர்கள். இந்த தேசிய உணர்வு நம் அத்தன பேரின் ரத்தத்திலும் ஊறித் திளக்க வேண்டும். நடக்கிற யுத்தம் யாருக்காக? நமக்காக. நமது உரிமைக்காக. உங்கள் அத்தன பேரின் பங்களிபபையும் நான் இதில் எதிர்பார்க்கிறேன்.'உருக்கமான பேச்சு. அழகான பேச்சு. கூட்டத்த முடித்துக்கொண்டு அதிபரின் கார் புறப்பட்டது.

அப்போதுதான் அது நடந்தது. சடாரென்று அதிபரின் வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்த சாலையில், ஆறு ஷியா இளஞர்கள் குதித்தார்கள். ஆயுததாரிகள். சற்றும் தாமதிக்காமல் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்கள்.சதாம் சடாரென்று தானிருந்த வாகனத்தின் சீட்டுக்கு அடியில் படுத்துக்கொண்டார். பாக்தாத் திரும்பும் வழியிலேயே தன் செக்யூரிடி ஆபீஸருக்குக் கண்ணைக் காண்பிததுவிட்டார். துஜல் நகரத் ஷியாக்கள் ஒருவர் கூட உயிருடன் இருக்கக் கூடாது. அல்லது ஜல் நகரமே இருக்கக் கூடாது.அது நடந்தது. அந்த ஊர் அப்படியே ராணுவத்தால் சுற்றி வளக்கப்பட்டது. கண்ணில் பட்ட ஷியாக்கள் அத்தன பேரயும் (148) சுட்டுக்கொன்றார்கள். கடைகள் சூறயாடப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டன. பதின்மூன்று வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் இரக்கமே இல்லாமல் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்கள். சுமார் 1500 பெண்களும் வயோதிகர்களும் சித்திரவதை செய்யப்பட்டு விரட்டப்பட்டார்கள். இதெல்லாம் போதாதென்று துஜல்வாசிகளின் விளைநிலங்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன. மிஞ்சி இருந்தவர்கள் அச்சமுடன் தான் அவ்வப்போது வெளியே வந்தார்கள். பெரும்பாலும் பங்கு குழிகளுக்குள்ளேயே இருந்தார்கள்.சிலகாலம் கழித்து துஜல் மீண்டும் சீரமக்கப்பட்டுவிட்டது என்றாலும், சமநிலை குலந்துபோன அந்த மக்கள், அந்த ஊரில் வசிக்கவே விரும்பவில்ல.

சரியாக இருபத்து நான்கு வருடங்கள். அதே துஜல் படுகொலகளுக்காகத்தான் சதாமுக்கு இன்று தூக்குதண்டன நிறைவேற்றப்பட்டிருக்கிறது. துஜல்வாசிகள் ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். 'கொஞ்சம் தாமதம்தான். ஆனாலும் சரியான தீர்ப்பு' என்று சப் டைட்டிலுடன் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.கடா வளர்த்தவர்கள்:1959_ல் இராக்க ஆண்டுகொண்டிருந்த அப்துல் கரீம் காசிம் என்கிற இடதுசாரி அனுதாபியை ஒழித்துக்கட்டுவதன் பொருட்டு, அமெரிக்க உளவுததுறையான சி.ஐ.ஏ. நிகழ்த்திய ஒரு கொலை முயற்சியில் பங்குபெற்றதுதான், சதாமின் அரசியல் தொடக்கம் எனலாம். கொலை முயற்சி தோற்ற பிறகு, சி.ஐ.ஏ.வே அவரைப் பாகாப்பாக எகிப்துக்கு அழைததுப் போய் தங்கவைதது;, பணம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, சாப்பாடு போட்டு, தனது இராக்கிய வாரிசாக ஆக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சந்தேகமில்லாமல் சதாம் ஓர் அமெரிக்கத் தயாரிப்பு. எண்பதுகளின் தொடக்கத்தில் ஆரம்பித்து சுமார் எட்டாண்டு காலம் நீடித்த இரான் இராக் யுத்தம் முடிவடையும் வரை அவரை ஆதரித்து, போஷித்து, வளர்த்ததெல்லாம் அமெரிக்காதான். யுத்தம் முடிந்தபோது இரண்டு தரப்புக்கும் வெற்றி, தோல்வி இல்லாமல்தான் இருந்தது. நிறைய இழப்புகள், சேதாரங்கள். ஆனாலும் சதாம் தான் வெற்றி பெற்றதாகவே அறிவித்துக்கொண்டார். அதனாலென்ன?

இரானின் அதிபர் அயாதுல்லா கொமேனியை ஒழித்துக்கட்ட அமெரிக்கா தீட்டிய திட்டத்துக்கு எட்டு வருடங்கள் உயிரைக் கொடுத்து உதவியிருக்கிறார் அல்லவா?ஆகவே, சதாமைப் பாராட்டி அப்போது அமெரிக்கா மிகப்பெரிய தொகை ஒன்றை அவருக்கு அன்பளிப்பாக அளித்த. சுமார் 65 முதல் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அப்படி பில்லியன் கணக்கில் கொட்டிக்கொடுதது, தட்டிக்கொடுத்து வளர்த்த அமெரிக்காதான் பிறகு, முறைத்துக்கொண்டு குவைத்தில் மல்லுக்கு நின்றது.

குவைத்தில் குடித்க்துகொண்டிருக்கும் எண்ணெய்க்கும் சதாமால் ஆபத்து வந்துவிடப் போகிறதே என்றுதான் அந்த யுத்த சமயத்தில் சட்டென்று சதாமுக்கு எதிராக நின்றது அமெரிக்கா. அன்று தொடங்கிய பகைதான் அது. முதலில் சொற்களாலும் பிறகு ஸ்கட் ஏவுகணகளாலும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

வளகுடா யுத்தம்:குவைத்தை இராக் ஆக்கிரமித்ததற்குப் பதிலடியாக ஜனவரி 12, 1991_ம் ஆண்டு இராக் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தது. 'பாலைப்புயல்' என்று தாக்குதலுக்குப் பெயர் வைத்தார்கள். படு உக்கிரமான யுத்தம். ஒட்டுமொத்த அரேபிய தேசங்களும் குவைதi;த அடுத்து எங்கே சதாம் தங்களைத் தாக்க வருவாரோ என்கிற பயத்தின் காரணமாக, அமெரிக்காவின் பின்னால் அணி திரண்டு நின்றன. ஆச்சர்யம், அமெரிக்காவின் தோழமை தேசமான இஸ்ரேல் மட்டும் இந்தப் போரில் நடுநிலை காப்பதாக அறிவித்துவிட்டு, சமர்த்தாக நின்று வேடிக்கை பார்த்தது. சொந்தச் சகோதரர்களைக் கொண்டே சதாமை ஒழிப்பதான் அமெரிக்காவின் திட்டம். இதற்கு பிரிட்டன் ஒத்துழைத்தது பெரிய விஷயமல்ல. அரபு தேசங்கள் அனைத்தும் சம்மதித்து அணி திரண்டைதத்தான் சதாமால் ஜீரணிக்க முடியவில்ல. அவரது முரட்டுத்தனத்தையும் துவேஷ உணர்வையும் அதிகப்படுத்திய சம்பவம் அது.அதனால்தான் அவர் குவைத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்குத் தீவைக்க உத்தரவிட்டார். அதை உலகமே டி.வி.யில் வேடிக்க பார்த்தது. எப்படியும் தோல்விதான் என்று தெரிந்ததும் இராக்கிய வீரர்களின் பேயாட்டம் உச்சத்தைத் தொட்ட. பிப்ரவரி 26_ம் தேதி போர் நின்றபோது, குவைத்தும் சவூதி அரேபியாவும் இராக்கும் ஏராளமாக இழந்திருந்தன. எங்கும் தீ. மரண ஓலம். குவைத் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது.ஆனால் இராக்க யார் விடுவிப்பது?தடைகள் பலவிதம்:வளைகுடாப் போரின் முக்கிய விளைவுகளுள் ஒன்று, இராக் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள். மக்கள் அப்போது அரிசி முதல் அண்டர்வேர் வரை அனத்துக்கும் லாட்டரி அடித்துக்கொண்டிருந்தார்கள் அங்கே. இராக்கின் வெளிதேச வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தன. வர்த்தகம் தடை செய்யப்பட்டிருந்தது. உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டிருந்த காலமாதலால், மிகவும் அவலமான சூழ்நிலை உருவாகியிருந்தது. மனிதாபிமான அடிப்படையில் இராக் மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா. ஒரு திட்டத்தை முன்வைத்தது. உணவுக்கு எண்ணெய் நட்வர்சிங் வரை பதம் பார்த்த இந்தத் திட்டத்தின் ஊழல் ஆழங்கள், இப்போது உலகப்புகழ் பெற்றுவிட்டன.

உண்மையில் அமெரிக்காவின் நோக்கம், சதாமின் ஊழல்களை வெளிப்படுத்வதோ, அவருக்கு தர்மசங்கடம் அளிப்பதோ அல்ல. சதாமை ஒழிப்பது அல்ல அழிப்பது. இராக்கில் ரசாயன உயிர்க்கொல்லி ஆயுதங்கள் இருக்கின்றன, உயிரியல் ஆயுதங்கள் இருக்கின்றன, அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகள் அங்கே நடக்கின்றன என்று, அடுத்தடுத்து எதையாவ சொல்லிக்கொண்டே இருந்து ஆய்வுக்கு, அறிக்கைக்கு என்று குழு அனுப்பி அனுப்பி போரடித்தபோதுதான், நேரடி யுத்தத்துக்கு ஆயத்தம் செய்ய ஆரம்பித்தார் ஜார்ஜ் புஷ்.

மத்தியக் கிழக்கைப் பொறுத்தவரை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை ஒன்றுதான். எப்போதும் எண்ணெய் வர்த்தகம் தனக்குச் சாதகமாகவே நடக்கவேண்டும். அவ்வளவுதான். நேற்றைக்கு சதாமுக்குத் தூக்கு தண்டன விதித்ததும் அதனால்தான். இன்றக்கு இரானுக்கு அச்சுறுத்தல் விட்டுக்கொண்டிருப்பதும் அதனால்தான். எல்லா தேசங்களும் சவூதி அரேபியாவைப் போல, குவைத்தப் போல அமெரிக்காவின் நட்பு நாடுகளாக எண்ணெய்க் கப்பம் கட்டிக்கொண்டிருந்விட்டால் பிரச்னையே இல்லை. முறத்துக் கொண்டு நின்றதனால்தான் சதாம் தாக்கப்பட்டார், நீக்கப்பட்டார், உயிர் போக்கப்பட்டார்.

செப்டெம்பர் 11, 2001_ அல் காயிதா தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா அறிவித்த 'உலகு தழுவிய பயங்கரவாத ஒழிப்பு' நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான், இராக் மீது 2003 மார்ச் 20_ம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. மூன்றே வாரங்களில் முடிவுக்கு வந்விட்ட யுத்தம். அந்த வருடம் தொடங்கி இன்றுவரை இராக்கில் வெடித்த குண்டுகளுக்கும் விழுந்த தலைகளுக்கும் கணக்கே இல்லை. டிசம்பர் 12, 2003 அன்று சதாம் ஒரு பங்கு குழிக்குள்ளிருந் செத்த எலிபோல் பிடிபட்டு அழத்துவரப்பட்டு, உலகத் தொலக்காட்சிகளில் முதல் முறையாக முகம் மறத்த தாடியுடன் காட்டப்பட்ட பிறகு, இந்தக் குண்டுவெடிப்புகளும் மரணங்களும் இன்னும் அதிகரித்தன.சதாம் கைதான சமயம், அதற்காக வருத்தப்பட்டவர்கள் குறைவு. ஆனால், அவருக்கு நிறவேற்றப்பட்ட மரண தண்டன அதற்கு முற்றிலும் மாறான மக்கள் மனோபாவத்தயே வெளிக்காட்டியிருக்கிறது.

'சதாம் குற்றவாளியாக இருக்கலாம். ஆனால், தண்டிக்க அமெரிக்கா யார்?'இனி என்ன?ஒரு வருடம் நடந்த விசாரண வைபவங்கள். இடையில் பலமுறை நீதிபதிகள் மாறினார்கள். வழக்கறிஞர்கள் கடத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள். சதாம், நீதி மன்றத்தில் நிறைய கெட்டவார்த்தைகள் உதிர்த்தார். கண்துடைப்பு விசாரணை என்று அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஏகப்பட்ட களேபரத்துக்குப் பிறகு, கடந்த நவம்பர் 5_ம் தேதி துஜல் படுகொலகளுக்காக சதாமுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி ரவூஃப் அப்துல் ரகுமான். இவர் குர்த் இனதi;தச் சேர்ந்தவர். (மிக கவனமாக ஷியா பிரிவு நீதிபதி தவிர்க்கப்பட்டார்.)சதாம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட. மேல் முறையீடு செய்யப்பட்ட தினம் தொடங்கி, ஒரு மாதத்தில் தீர்ப்பு வரவேண்டுமென்பது அங்கே விதி. ஆகவே வந்துவிட்டது.

உண்மயில் சதாமின் மரணதண்டனை இத்தனை அவசரமாக, முன்னறிவிப்பு ஏதுமின்றி, திடீரென்று பக்ரீத் தினத்தையட்டி நிறைவேற்றப்படவேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி அனவருக்குமே எழுந்தது.இரண்டு காரணங்கள். ஒரு பண்டிகை தினத்தன்று மரண தண்டன நிறைவேற்றப்படுவது, எழுப்பக்கூடிய அதிர்ச்சி மற்றும் அச்ச அலைகள் நீடித்து இருக்கும். நினவை விட்டு அகலாது. பிற மத்தியக் கிழக்கு தேசங்களிடத்தில் அமெரிக்கா எதிர்பார்ப்பது அதனைத்தான். பயந்திரு. பணிந்திரு.

இரண்டாவது காரணம், இராக்கிய ஷியாக்களுக்கு ஒரு புத்தாண்டுப் பரிசு வழங்குவதுபோலவும் இருக்கும். 2007 தொடங்கி அங்கே நிறையப் புதிய எண்ணெய் ஒப்பந்தங்கள் செய்யலாம். இராக்கின் வர்த்தகத் துறயையே தன் இஷ்டத்துக்கு வளைத்து ஆளலாம். தவிரவும் அங்கே ஒரு நிரந்தரமான ராணுவத் தளததை அமைத்துக்கொண்டு, அடுத்த வருஷ வேட்மடக்கு இரானைக் குறிவைக்கலாம்.இதைத்தவிர, வேறு பிரமாதமான காரணங்கள் ஏதுமில்லை.ஆனால், ஒன்றை மறந்துவிட்டார்கள். சதாம் உசேனின் மரணம், இராக்கிய சன்னி சிறுபான்மயினரயும் ஒட்டுமொத்த இஸ்லாமியப் போராளி இயக்கங்களையும் அவசியம் உசுப்பியே தீரும். ஏற்கெனவே அமெரிக்காவுக்கு எதிராகக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் அல் காயிதா, ஹமாஸ், ஜமா இஸ்லாமியா போன்ற இயக்கங்கள் கண்டிப்பாக பதிலடி தர ஆயத்தம் செய்யும். இராக்கிய சன்னி இயக்கங்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. போதாக்குறைக்கு ஆப்கனில் அமெரிக்காவால் அழிக்கப்பட்டு, காட்டுக்குள் இப்போது பதுங்கி வாழும் தாலிபன்கள், முதல் தகவல் அறிக்க வெளியிட்டுவிட்டார்கள். 'கண்டிப்பாக பதில் சொல்வோம். எங்கள் மொழியில்.'தாலிபன் சொல்கிறதென்றால், அல் காயிதா அங்கீகரிக்கிறது என்று அர்த்தம்.

என்னதான், ஒசாமா பின்லேடனுக்கு சதாமுடன் நெருக்கமான தொடர்புகள் ஏதும் கிடயாது, சதாமின் அரசியலில் அவருக்கு உடன்பாடு கிடயாது (சதாம் மதச்சார்பின்மைவாதி. ஒசாமா எதிர்வாதி அல்லவா?) என்றாலும், இராக்கின் உள் விவகாரத்தில் அமெரிக்கா அத்துமீறியிருப்பதை அல் காயிதா கண்டிப்பாக ஒப்புக்கொள்ளாது. சவூதி அரேபியாவுக்குள் அமெரிக்கப் படைகள் வந்ததை எதிர்த்த்தானே அவர் தம் தாய்நாட்டையே பகைத்க்கொண்டு வெளியேறினார்?இது ஒருபுறமிருக்க, வளகுடா யுத்த சமயம் ஒட்டுமொத்த அரபு தேசங்களும் இராக்குக்கு எதிரணியில் திரண்டிருந்தபோதிலும், யாசிர் அராஃபத்தின் பி.எல்.ஓ. மட்டும் சதாம் உசேனை ஆதரித்தது நினவிருக்கிறதா? பாக்தாத்துக்கே சென்று சதாமுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்துவிட்டு வந்தார் அராஃபத்.

பாலஸ்தீனில் இப்போ ஹமாஸ் ஆளும் கட்சியாகவும் பி.எல்.ஓ. எதிர் இயக்கமாகவும் இருக்கிற சூழலில், கண்டிப்பாக பி.எல்.ஓ.வின் உறுப்பு இயக்கங்கள் சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகக் களமிறங்க நினக்கும்.இராக்கில் மட்டுமல்லாமல், அமெரிக்கா கால் ஊன்றியிருக்கும் அத்தனை மத்தியக் கிழக்கு தேசங்களிலுமே, அடுத்து வரும் நாட்களில் வன்முறைக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாகத் தெரிகின்றன. ஷியாக்கள் தாக்கப்படலாம். இஸ்ரேலில் தாக்குதல் தீவிரப்படுத்தப்படலாம். தாக்குதலுக்குப் பதில், பதிலுக்குப் பதில் என்று நிலைமை மேலும் மோசமாகக்கூடிய சாத்தியங்களே அதிகம்.இராக்கிய பிரதமர் நூரி அல் மாலிக்கி, 'சதாம் இறந்விட்டார். இனி இராக், இராக்கியர்களுடய. அவருடய சகாப்தம் முடிந்விட்டது. நாம் வளர்ச்சிப்பாதையில் இனி நடப்போம்' என்று எழுதிவைத்து, அறிககை வாசித்தாலும் ஒன்று மட்டும் உறுதி.கண்டிப்பாக புத்தாண்டில் அங்கே அமைதி கிடயாது.
===================
புஷ்ஷை தூக்கிலிட வேண்டும்மகாதிர் ஆவேசம்

ஜனவரி 08, 2007 புத்ரஜயா (மலேசியா): சதாம் உசேனுக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையை ஜார்ஜ் புஷ்ஷûக்கும் கொடுக்க வேண்டும் என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மகாதிர் பேசுகையில், அமெரிக்க அதிபர் புஷ்ஷûம், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரும்தான் உண்மையில் மிகப் பெரிய போர் குற்றவாளிகள். சதாம் உசேனின் கரங்களில் இருந்ததை விட இவர்களின் கையில்தான் அதிக ரத்தக்கறை உள்ளது.புஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சதாம் உசேன் சந்தித்த அதே 'கட்டப் பஞ்சாயத்து' முன்பு அவரையும் நிறுத்தி, சதாமுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனையை புஷ்ஷûக்கும் தர வேண்டும்.பிளேர் ஒரு குற்றவாளி. சதாம் செய்ததை விட அதிக அளவிலான தவறுகளை பிளேர் செய்துள்ளார். அமைதியை ஏற்படுத்துவதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க, இங்கிலாந்து படைகள் கொன்று குவித்ததை விட சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பமானது தான் என்று காட்டமாக கூறினார் மகாதிர்.
================

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP