**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

முஸ்லிம்களால் உயிர் பிழைத்த‌ கலைஞர் கருணாநிதி!

>> Monday, September 23, 2013

சாக்கடையில் தூக்கிப் போடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிருக்குப் போராடிய நேரத்தில் முஸ்லிம்களால் காப்பாற்றப்பட்ட கருணாநிதி!

கலைஞர் கருணாநிதி அவர்களின் தொடக்க கால வாழ்க்கையில் அவரை கைத்தூக்கி விட்டவர்கள், அவருடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த பெருமகனார்கள், பெரும்பாலும் இஸ்லாமியச் சகோதரர்களாகவே இருந்தார்கள்

கருணாநிதிக்கு பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது.

கருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக் கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை.

இங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர்.

கருணாநிதியுடன் இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம்.

இந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப்படுத்திய அவசரகால அடக்குமுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமணத்துக்கு வந்தது மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார்.

இங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம், இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர்.

ஆனால் மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை.

மேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கோபம் கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர்.

கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம்.

பகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில் நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட கருணாநிதியின் முக்கல் முனகல் கேட்டது.

மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர்.

காலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண அடியாட்கள் தவித்தனர்.

கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர்.

ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற பின் ஈரோடு சென்றார். - -முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,

கண்ணதாசன் vs கருணாநிதி

மு.க. பற்றி கண்ணதாசன் கூறிய மற்றொரு நிகழ்வு உண்டு. அதை நினைக்கும்போது எவ்வளவு திட்டமிட்டு ஒரு மனிதன் தன்னை முன்னிலைப் படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம்.

சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தது. திமுக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த காலம். திமுக கூட்டங்களுக்கு எக்கச்சக்க கூட்டம். ஆதரவு. அந்த தேர்தலில் தி மு க பெற்ற வெற்றி திமுகவின் சரித்திரத்தில் முக்கியக் கட்டம். ஒரு வளர்ந்து வரும் கட்சி தலைநகரின் மாநகராட்சியைக் கைப்பற்றுவது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி/ நிகழ்ச்சி.ஊக்கம். ஊட்டம்.

திமுகவின் அனைத்துத் தலைவர்களும் மூலைக்கு மூலை ஊடியாடி/ ஓடியாடிச்சென்று பாடுபட்டு அந்த வெற்றிக் கனியப் பறித்தனர். முகவின் உழைப்பும் கணிசமானது.

மேயருக்கு பாராட்டுவிழா வெற்றிவிழா நடைபெற்றது. அண்ணா பேசினார் - பேசும்போது ஒரு மோதிரத்தைக் கூட்டத்தினருக்குக் காட்டினார்.

"என் மனைவிக்குக் கூட தங்கம் வாங்குவதற்கு நான் இவ்வளவு சிரமப் பட்டது கிடையாது. அப்படி கடைகளில் ஏறிப்போய் இந்த ஒரு பவுன மோதிரத்தை வாங்கினேன். இந்த சென்னை மாநகராட்சியில் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அருமைத்தம்பி கருணாநிதிக்கு உங்கள் சார்பாக இதனை சூட்டி மகிழ்வதில் பெருமைப் படுகிறேன்."

என்று அண்ணா பேசி மோதிரத்தை கருனாநிதியின் விரலில் அணிவித்தார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.

மறுநாள் கோபத்துடன் அண்ணாவை சந்தித்தார் கண்ணதாசன். "என்ன வேடிக்கை அண்ணா? கருணாநிதி மட்டுமே உழைத்துப் பாடுபட்டு வெற்றிக்கனியைப் பறித்ததாக நீங்கள் மோதிரம் போட்டீர்கள்? மற்றவர்கள் எவரும் உழைக்க வில்லையா ?" என்று கேட்டார்.

அண்ணா நமுட்டு சிரிப்புடன் சொன்னார்.

"எல்லோரும் உழைத்தீர்கள். ஆனால் சொந்தக் காசில் மோதிரம் வாங்கித் தந்து கூட்டத்தில் பாராட்டி அணிவிக்கச்சொன்ன அறிவு கருணாநிதிக்கு மட்டும்தானே இருந்தது? நீயும் அதுபோல் ஒன்றை வாங்கித்தந்து இருந்தால் அணிவிப்பதில் எனக்கென்ன தயக்கம்" என்றாராம்.

எப்படி இருக்கிறது கதை?

கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் vs சுயநலம்!

கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் அவரை எப்படி அரசியல் உச்சாநிக்கொம்புக்கு கொண்டு சென்றதோ, அதே கலைஞரின் குடும்ப பாசமும், குடும்ப அரசியலும் அவரின் அரசியலுக்கு அவ்வப்பொழுது சாட்டையடி கொடுக்கத்தான் செய்தது.

இருப்பினும் இன்றுவரை அவரின் நிர்வாகத்திறமை, மற்றும் ஞாபக சக்தி , தமிழகத்தை பொருத்தவரை வேறெந்த அரசியல் வாதிக்கும் இருந்ததாகத்தெரியவில்லை.

சுய நலம் இல்லை என்றால் இவரைவிட ஒரு சிறந்த அரசியல் வாதி இந்தியாவிலேயே இல்லை எனலாம்.

சுயநலமே ஒரு நடிகரிடம் தோற்க வைத்தது . சுயநலமே ஒரு நடிகையிடம் தோற்க வைத்தது.

சுயநலமே ஒரு பண்பட்ட பெருந்தலைவரை (காம ராஜர் ) தோற்கடிக்க ஒரு மாணவனை நிற்க வைத்தது. இவரைப்போல சிறந்த அரசியல்வாதியும் இல்லை. இவரைப்போல சிறந்த சுயநலவாதியும் இல்லை.- முத்துப் பேட்டை P.பகுருதீன் B.Sc.,

-நேற்று! இன்று! நாளை! - 7, தொடரில் இருந்து ஒரு பகுதி. source: http://adirainirubar.blogspot.in/2013/07/7.html

*********************************


1972-ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்களின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் அதற்கு நன்றி கூறும் விதத்தில், இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்று சொன்னாராம். இந்த வசனத்தை இதுநாள்வரை பலமுறை மேடைகளில் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பறைசாற்றி வருகிறார். இப்போது காயிதேமில்லத் அவர்களிடம் யாரும் கேட்க முடியாது என்ற தைரியத்தினால்கூட இருக்கலாம்.

கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களுக்கு இஸ்லாமிய சமுகத்தை வழிநடத்த மாண்புமிகு கலைஞர் அவர்களைத் தவிர வேறு ஆளே கிடைக்கவில்லையா என்ற கேள்வி நம் மண்டையைக் குடைகின்றது. காயிதே மில்லத் அப்படி சொல்லியிருப்பாரா?

காயிதே மில்லத் அவர்கள் மரணிக்கும் தறுவாயில் அவரோடு உடன் இருந்த அ.கா.அப்துல் சமத் போன்றவர்களிடம் “கலைஞர் சொல்வது உண்மையா?” என்ற கேள்வியை முன்வைத்த போது “இது பச்சைப் பொய்” என்று உறுதி படுத்தினார்கள்.

ஒருவர் மரணிக்கும் தறுவாயில் அவரை சந்தித்ததை வைத்து தனக்கு சாதகமான இப்படியொரு வசனத்தை வசனகர்த்தா கலைஞர் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டாரே என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.

முஸ்லீம் லீக் என்ற பாரம்பரியமிக்க கட்சியை துண்டு துண்டாக உடைத்த பெருமை மஞ்சள் துண்டு அணிந்த கலைஞர் அவர்களையேச் சாரும்.

கலைஞர் அவர்கள் காயிதே மில்லத்திற்கும், முஸ்லீம் லீகிற்கும் செய்த பச்சைத்துரோகம் இஸ்லாமியர்களின் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் அழிந்துவிடப் போவதில்லை என்பதுமட்டும் திண்ணம்.

“முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்று வீர வசனம் பேசி பேசிப் பேசியே, வாய்ச்சொல்லில் வீரராக, முஸ்லீம்களின் காப்பாளனாக, காவியநாயகராக, Good Samaritan-ஆக, இஸ்லாமியர்களை தன்பால் ஈர்த்தவர் கலைஞர் கருணாநிதி.

. ‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” – இதுவும் டாக்டர் கலைஞரின் பஞ்ச் டயலாக்கில் ஒன்று.

இன்று இஸ்லாமியச் சமூகம் இத்தனைப் பிரிவாக போனதற்கு காரணம் கலைஞர் அவர்கள்தான்.

அப்துல் லத்தீப், காதர் மொய்தீன் போன்ற அப்பாவி நபர்களை பகடைக்காயாக வைத்து அவர் ஆடிய சதுரங்க விளையாட்டை – இஸ்லாமியச் சமுதாயத்தில் கலைஞர் ஏற்படுத்திய பிரிவினையை – இந்தச் சமுதாயம் ஒருக்காலும் மன்னிக்கவே மன்னிக்காது. திரைப்படத் தயாரிப்பளர்களான கமால் பிரதர்ஸ் கருணாநிதிக்கு வாங்கித் தந்த வீடுதான் கோபாலபுரம் வீடு. அந்த கோபாலபுரம் வீடு, கலைஞர் அவர்கள் தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி”யில் சொன்னது போல் திரைப்படத்தில் வசனம் எழுதி வாங்கிய வீடு என்ற கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கூத்தாநல்லூரைச் சேர்ந்த கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் “கமால் பிரதர்ஸ்” என்ற நிறுவனத்தைத் தொடங்கி படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். இவர்களின் குடும்பத்திற்கு வியட்நாம் நாட்டில் சைகோன் (Saigon) நகரத்தில் வணிகத்தொழில் இருந்து வந்தது. 1957-ல் வியட்நாம் போரின்போது சைகோன் நகரம் பெரும் வீழ்ச்சிக்கு உள்ளானது. ஆதலால் வியாபாரம் நஷ்டத்திற்கு உள்ளானது. தமிழ்நாட்டில் இவர்கள் தொடங்கிய “கமால் பிரதர்ஸ்” என்ற படநிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கமால் சகோதரர்கள் கலைஞர் கருணாநிதிக்கு பலவிதத்தில் பணஉதவி புரிந்திருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டை 45,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கிக் கொடுத்தவர்களும் அவர்களே.

திரைப்படத்தயாரிப்பில் இறங்கி நொடித்துப் போன அவர்கள் வறுமையில் வாடி வதங்கியபோது, அவர்களின் பொருளாதார நிலைமையை யாரோ முதலமைச்சர் கலைஞரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒருகாலத்தில் நம்மிடம் உதவியை எதிர்பார்த்து நின்றவரிடம் நாம் போய் உதவி கேட்பதா?’
என்று தன்மானம் கருதி அவர்கள் கலைஞரைச் சந்திக்க மறுத்து விட்டனர்.- Abdulqaiyum.

இதையும் படியுங்கள்


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம் – 1)


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (பாகம்-2)


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (3-ஆம் பாகம்)


நாகூர் ஹனிபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (4-ஆம் பாகம்)


நாகூர் ஹனீபாவுக்கு அல்வா கொடுத்த கலைஞர் (5-ஆம் பாகம்)

1 comments:

VANJOOR September 23, 2013 at 9:57 PM  

மோடி வருகையை சாதகமாக்கி பா.ஜ.க.வினர் கலவர முயற்சி!!

திருச்சி: நரேந்திரமோடி திருச்சிக்கு வருகை புரிவதற்கு பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பா.ஜ.கவினர் இதனை சாதகமாக்கி ஆங்காங்கே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக மக்கள் கலை இலக்கியக் கழகம், கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்:

நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முஸ்லீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர்.

இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம்.

இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர்.

நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது.

இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.


மருதையன்,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP