**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

வன்கொடுமை வட்டியும் இஸ்லாமிய வங்கியும்.

>> Friday, August 23, 2013

வன்கொடுமை வட்டியும் இஸ்லாமிய வங்கியும்.

நாட்டில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி: கேரளாவில் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய வங்கி முறையே ஒரே தீர்வு!
***********


வட்டியைக் குறித்து இஸ்லாத்தின் கருத்து என்ன ?


***********


இந்தியாவில் முதன் முறையாக கேரள அரசே வட்டியில்லா முறையிலான "இஸ்லாமிய கூட்டு வங்கி" ஒன்றை உருவாக்கியிருப்பினும் இஸ்லாத்தின் மீதான காழ்ப்பால் சுப்பிரமணிய சுவாமி அந்த வங்கியின் செயல்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவு வாங்கி முடக்கினார். "நல்லவைகளை நல்லவர்களே வரவேற்பர்!".

அத்தகைய நல்லோர் பலருக்கு இன்னமும் வட்டியில்லா பொருளாதாரம் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அதனுடைய அவசியம் குறித்தும் விரிவாக விளக்கப்படவில்லை. அவர்கள் அதன் நன்மைகளை அறிந்து கொண்டால், "இஸ்லாமிய வங்கிகள்" மூலம் இந்த உலகமே ஒரு பொருளாதார புரட்சியைச் சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
***********


இஸ்லாமிய வங்கி என்றால்....?


இஸ்லாமிய வங்கியியல் என்ற பெயரிருந்தாலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பயன் பெறத்தக்க வங்கியியல் முறையே இஸ்லாமிய வங்கி முறையாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்
***********


வங்கியில் கடன் வாங்கலாமா?


***********


நாட்டில் முதன்முதலாக வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கி: கேரளாவில் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி


வட்டிக்கு பணம் தருவதையும் வட்டிக்கு பணம் வாங்குவதையும் இஸ்லாமிய சட்டமான ‘ஷரியத்’ பாவப்பட்ட செயலாக விலக்கி வைத்து தடை செய்துள்ளது.

இதையும் மீறி, காலப்போக்குக்கு ஏற்ப சிலர் பண கொடுக்கல்-வாங்கலில் வட்டியை அனுமதித்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனினும், பெரும்பாலான இஸ்லாமியர்கள் தங்களது சேமிப்புக்கு வங்கிகள் அளிக்கும் சொற்ப வட்டியையும் பெற்றுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.

இவ்வகையில், அரபு நாடுகளில் வாழும் கேரள மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம்களின் கேரள கணக்குகளில் கோரப்படாத தொகையாக சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக தெரியவருகிறது.

இந்நிலையில், வட்டி என்ற நடைமுறையே இல்லாத ‘ஷரியத்’ வங்கி முறையை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என வளைகுடா நாடுகளில் வாழும் கேரள மாநில முஸ்லிம்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை கேரள மாநில அரசு மத்திய ரிசர்வ் வங்கியிடம் முன் மொழிந்தது.

இதனையடுத்து, கேரள மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வட்டியில்லா ‘ஷரியத்’ வங்கியை தொடங்க ரிசர்வ் வங்கி இன்று அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று மும்பையில் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் அல்பனா கில்லாவாலா, ‘இஸ்லாமிய நிதி கொள்கைகளின்படி, வங்கியமைப்பை சாராத நிதி நிறுவனத்தை தொடங்க கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது’ என்று கூறினார்.

இஸ்லாமிய வங்கிமுறை கொள்கைகளின் படி, முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது. கடன் பெறுபவர்களிடமும் வட்டி வசூலிக்கப்பட மாட்டாது.

வங்கியில் தேங்கும் பணத்தை வைத்து பங்கு வர்த்தகம், பாதுகாப்பு பத்திரங்கள், மது, புகையிலை மற்றும் சூதாட்டம் தொடர்பான தொழில்கள் தவிர இதர வகை தொழில் முனையோர் கடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. -

Ref: http://www.maalaimalar.com/2013/08/18203138/first-sharia-bank-to-open-in-k.html
***********


பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய வங்கி முறையே ஒரே தீர்வு! - நூருல் அமீன்


மத்தியக் கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான அரபு நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வரும் இஸ்லாமிய வங்கிமுறை, இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார, விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கும் என்று பிரபல பொருளியல் வல்லுநர் இர்பான் ஷாகித் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரபல பொருளியல் வல்லுனர்களால் பொருளியல் தீர்வுக்கான சிறந்த மாற்று என ஒப்புக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய வங்கி முறை (Islamic Banking) என்பது வட்டியில்லா வங்கி முறையாகும்.

கடன் வாங்குபவரையும், கொடுப்பவரையும் கடனாளி, கடன்காரர் என்ற நிலையிலிருந்து முதலீட்டாளர்களாக மாற்றி இருவரின் பொருளாதார தேவைகளிலும் வங்கி தலையிட்டுத் தீர்க்கும் வங்கியல் முறை, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இஸ்லாமிய வங்கியல் குறித்த கருத்தரங்கில் பிரபல பொருளியல் வல்லுனர் இர்பான் ஷாகித் பேசும்போது, நமது நாட்டின் விவசாயிகளின் பிரச்சினை களைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியியல் முறையே சரியான தீர்வாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 செப்டம்பர்11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் முதலீடு செய்துள்ள அரேபிய வணிகர்களின் நிதியாதாரங்கள், அல்காயிதாவுடன் தொடர்புபடுத்தப்பட்டு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து 600 பில்லியன் டாலர் மதிப்பிலான அவர்களின் முதலீடுகளை அமெரிக்கா தவிர்த்து ஏனைய ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் வட்டி வசூலிப்பதை இஸ்லாம் தடை செய்திருப்பதால் தங்களது சேமிப்புகளும், முதலீடுகளும் பாதுகாப்பாக இருப்பதற்கு இஸ்லாமிய வங்கிகளே காரணம் என்று அரபு நாடுகளில் மட்டுமின்றி உலகெங்கும் சுமார் 75 நாடுகளில் 500க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இஸ்லாமிய வங்கியியல் என்ற பெயரிருந்தாலும் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் பயன் பெறத்தக்க வங்கியியல் முறையே இஸ்லாமிய வங்கி முறையாகும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.

மாற்று வங்கியியல் (Alternative Banking), ஷரியா பைனான்ஸ் (Sharia Finance) என்றெல்லாம் அறியப்படும் இஸ்லாமிய வங்கியியல் முறையை உலகெங்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றி வருகின்றன.

சர்வதேச வங்கிகளான Standard Chartered, HSBC ஆகியவை தங்களின் பழைய வங்கியியல் நடைமுறையுடன் (Conventional Banking) இஸ்லாமிய வங்கியியல் முறைக்கு கடந்த ஐந்தண்டுகளுக்கு முன்பே மாறத் தொடங்கி விட்டன.

உலகெங்குமுள்ள முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள இஸ்லாமிய வங்கியல் முறையை இந்தியாவில் கேரள அரசு சமீபத்தில் நடை முறைப்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவருமான சுப்ரமணிய சுவாமி இதற்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கிற்கு எதிராக உச்ச நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த பிரவரி முதல் இஸ்லாமிய வங்கியியல் முறைக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த இருவருடங்களாக உலகெங்கும் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச வங்கிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்த போதும், இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 200% அதிகரித்தன் மூலம் தற்கால பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சரியான மாற்றுத் தீர்வு இஸ்லாமிய வங்கியியல் முறையே என்ற கருத்து உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.- நூருல் அமீன்
***********


வங்கி மைனஸ் வட்டி - இஸ்லாமிய வங்கி . -இரா. முருகன்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP