**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

புத்தகயா வெடிப்புகளும் 'பூக்கயிறு' திரிக்கும் வைத்திகளின் 'அரிப்பு'களும்

>> Tuesday, July 9, 2013

புத்தகயா குண்டுவெடிப்பு! மோடிக்கு தொடர்பு? புத்தகயா குண்டுவெடிப்புக்கு நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை

பீகாரில், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் தொடர்ச்சியாக 9 குண்டுகள்வெடித்து, இரண்டு புத்தத்துறவிகள் காயமடைந்திருக்கிறார்கள்.

இந்த பயங்கரவாதச்செயல் மிகவும் கோழைத்தனமான செயல் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இச்செயல் நிச்சயம் கண்டிக்கப்படவும், செய்தவர்கள்யாராக இருந்தாலும்கட்டாயம் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், இந்தக்குண்டு வெடிப்புகளைச் சாதகமாக்கிக்கொண்டு சில தரங்கெட்ட ஊடகங்கள் வெளிப்படுத்தும் உள்ள வெடிப்புகளோ சற்றும் சகித்துக்கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. 'பூக்கயிறு' திரிக்கும் ஊடகங்கள் மட்டுமின்றி பெரும்பாலான ஊடகங்கள் இது முஸ்லிம்தீவிரவாத செயல்என்பது போலவே செய்திகளை 'ஊர்ஜிதப்படுத்தி' வெளியிடுகின்றன.

மத்திய உளவு அமைப்புகளும் ஒவ்வொரு குண்டுவெடிப்புக்குப்பிறகும் ஆரம்பத்தில் அவசரகோலத்தில் வெளிப்படுத்தும் தம்வழக்கமான வசனத்தையே இம்முறையும் கூறியுள்ளன. "ஏற்கனவே எச்சரித்தோம்".

ஊடகங்களில் நடுநிலை போல வேடமிடும் ஏடு ஒன்று தமிழகத்தில் உள்ளதென்றால்அது தினமணி தான். அதன்ஆசிரியர், புத்தகயா குண்டுவெடிப்புகளைக் கண்டிக்கும் தனது தலையங்கத்தில் இவ்வாறு எழுதுகிறார் :

//அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமுக்கு கொள்கை அளவில் நேர்எதிரிடையான மதம்பௌத்தம்தான். இஸ்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்களையும் இறை மறுப்பாளர்களையும் "காஃபிர்'கள்" என்று இடித்துரைக்கிறது. ஏனைய மதங்கள் இஸ்லாமைப்போல ஏகஇறைவனை ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர இறை மறுப்பை அங்கீகரிக்கும் மதங்களல்ல. ஆனால், பௌத்தத்தின் அடிப்படையே இறை மறுப்பு என்பதால் பௌத்தமும் இஸ்லாமும் அடிப்படையிலேயே ஒன்றுக்கொன்று முரணானவை.

அதனால்தான் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பாமியான் புத்தர்சிலைகளைத் தகர்க்க முற்பட்டனர். ஆகவே மியான்மர் மற்றும் இலங்கையில் இந்த இரண்டு மதத்தினருக்கு இடையே மோதல்கள் நடந்துகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அதற்காக இந்தியாவிலுள்ள புத்த கயையில் இப்படியொரு தாக்குதலை நடத்தியிருப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல.//


இதைப்படித்தப்பிறகு மனதில்தோன்றியது : "ஏம்ப்பா, முடிவே செஞ்சிட்டியா?" என்கிற கேள்வி தான். காவல்துறையும், அரசு அமைப்புகளும், தீர விசாரித்து முடிவெடுக்கும்முன்பே 'இன்னார்தான் செய்திருப்பார்கள்' என்று காழ்ப்புணர்வின் அடிப்படையில் ஒரு 'நடுநிலை' ஊடகம் முடிவெடுக்கிறது என்றால், அந்த ஊடகத்தைப்பற்றி என்னவென்று சொல்வது. (இந்த இடத்தில் குறிப்பிட்டுச்சொல்ல நினைப்பது : பயங்கரவாதச் செயல்கள் யார் செய்திருந்தாலும் நிச்சயம் ஊடகங்கள் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு பாரம்பரிய ஊடகம் 'தன்மன ஊகத்தை' அல்லது ‘மன ஊன’த்தை உண்மை போல எழுதுவதைத் தான்ஏற்க இயலவில்லை. மாறாக, ஊடகங்களின் இப்போக்கு கருத்தியல் தீவிரவாதமாகவே கருதப்படத்தக்கது).

இத்தனைக்கும, கோயிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் பதினைந்து கண்காணிப்புப் படக்கருவிகளைக் கொண்டு 48 மணி நேர நிகழ்வுகளை ஆராய்ந்து வரும் காவல் அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் வினோத் மிஸ்த்ரி ஒரு முஸ்லிமல்லாதவரே.

எந்தவொரு குண்டு வெடிப்பிலும், தொடகத்தில் 'க்ளிஷே'வாக முதலில் முஸ்லிம் அமைப்புகளின் பெயரை *உரத்துச்சொல்வதும், பின்னாள்களில் ஆர் எஸ் எஸ் போன்ற வேறு மத பயங்கரவாத அமைப்புகளே குண்டு வெடிப்புகளுக்கு உணமையான காரணம் என்று தெரியவரும் போது இயன்ற அளவு அதை அமுக்கி வாசிப்பதும் அண்மைக் காலமாக ஊடகங்களின் இயல்பாகி வருகிறது. மாலேகாவ்ன், ஹைதராபாத், என்று தொடங்கி அதுதான் நடைபெற்று வருகிறது.

மியான்மர், இலங்கையில் நடைபெறும் பெளத்த பயங்கரவாதங்களுக்குப் பதிலடியாக முஸ்லிம் பெயரிலான தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் இதைச் செய்திருக்கும் சாத்தியங்களினும் மிகுதியாக கீழ்க்காணும் சாத்தியங்கள் வலிமையாக உண்டு என்பதை அவசரமும், அரசியற் குதர்க்கமும் நிரம்பி வழியும் தினமணி வைத்திகள் விளங்க வேண்டும்.

அவையாவன: 1). 'நிதீஷ் குமாருக்குப் பாடம் புகட்டப்படும்' என்று குஜராத் இனப்படுகொலைகளின் நாயகன் மோடி திருவாய் மலர்ந்தருளியது.

('முஸ்லிம் அமைப்புகளின்மீது சுமத்தப்பட்ட அண்மை குற்றச்செயல்களை உண்மையில் செய்தவர்களாக இந்துத்துவ அமைப்பினர் என்றே பின்னாள்களில் வெளிப்பட்டுள்ளதன் கோணத்தில் இது பார்க்கப்பட வேண்டும்)

2). கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு விசாரணையில் சிபிஐ - ஐ.பி ஆகியவற்றுக்கான மோதலைத் திசைத் திருப்பும்விதமாகவும் 'அரசியல்' இதில் இருக்கலாம்.

3). இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கு மீண்டும் தன் கழுத்தை வளைப்பதை விரும்பாத அரசியல் தீய சக்திகளின் செயலாகவும் இருக்கலாம்.

4)இலங்கையில் பெளத்தர்களின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சிறுபான்மையினரின்செயலாகவும்இருக்கலாம்.

5). இதே ரீதியில், இந்தியாவில் குழப்பம் விளைவிக்க முயலும் அந்நிய நாடுகளின் சதியாகவும்இருக்கலாம்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் குறித்து விடுதலைபுலிகள், மாவோயிஸ்ட் எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது என சில பொறுப்புள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்.

மேலே கூறப்பட்ட சாத்தியங்கள் எல்லாமே ‘லாம்’கள் தான். ஊடகப் பொறுப்புடன் எதையும் தற்சமயம் ஊர்ஜிதமாக உறுதிப்படுத்த இயலவில்லை எனும் போது பாரம்பரியமிக்க தினமணி போன்ற ஊடகங்களின் முந்திரிக்கொட்டைத் தனங்களும் பொறுப்பின்மையான தலையங்கங்களும் தொடர்ந்து ஒரு சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் அரசியல் உள்நோக்கங்களும் தேசத்தின் சாபக்கேடாகவும், நல்லிணக்கத்திற்கு ஊறாகவும் அமைவன என்றால் மிகையில்லை.

இவ்வாறு பல கோணங்கள் இந்த வெடிப்புகளுக்குப் பின்னிருக்கும் போது, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று தன் மன 'அரிப்பை' வெளிப்படுத்துகிற வைத்திகளும், அவர்தம் ஊடக நாடகங்களும் இந்நாட்டின் நல்லிணக்கத்திற்கு மிகச் சிறிதளவும் பொருந்தக்கூடியதாக அமையவில்லை என்பதையே இங்கு நாம் உணர வேண்டுவது. -பாபு.

THANKS TO SOURCE: http://www.inneram.com/article/readers/835-bodh-gaya-blast.html

புத்த கயா குண்டுவெடிப்பு!-மோடிக்கு தொடர்பு? – திக்விஜய் சிங் தகவல்!

டெல்லி: பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார்.

மியான்மரில் முஸ்லிம்களை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையிலேயே பீகார் மாநிலம் புத்த கயாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறலாம் என்று மத்திய உளவு அமைப்பு ஏற்கெனவே எச்சரித்தது என்று ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பாரதிய ஜனதா கட்சியும் ஊடகங்களும் மத்திய உளவு அமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, புத்தகயா சம்பவத்துக்கு முஸ்லிம்கள் காரணம் என்கின்றன. மத்திய உளவு அமைப்பான ஐபி கொடுத்த எச்சரிக்கையை பீகார் அரசு புறக்கணித்துவிட்டது என்கின்றனர்.

புத்த கயா சம்பவத்தின் மூலம் அரசியல் செய்கின்றனரா?


முழுமையான விசாரணை நடத்தாமலேயே இவர்கள் முஸ்லிம்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுகின்றனரா?

இன்னொரு பக்கமும் பாருங்கள். அயோத்தியில் மிகப் பெரிய கோயில் கட்டப்படும் என்று பாஜகவின் அமித்ஷா கூறினார். பீகார் மாநில பாஜகவினரிடையே பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியோ, நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.

அதற்கு மறுநாளே புத்தக கயாவில் மகாபோதி கோயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இரண்டுக்கும் தொடர்பிருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று திக் விஜய்சிங் கூறியுள்ளார்.

THANKS TO SOURCE: - http://www.thoothuonline.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%af%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#sthash.DN7FZyGV.dpuf

நேர்மையான விசாரணை - உறுதி செய்யுமா உச்சநீதிமன்றம்!

பீகார் மாநிலத்தில் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட புத்த கோவிலில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 5.30 மணி அளவிலிருந்து 6 மணி வரை சுமார் 9 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.

இறைவனின் அருளால் பெரிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இரு புத்த துறவிகள் காயமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை, சுமார் 13 இடங்களில் குண்டுகள் வைக்கப் பட்டுள்ளன. .

குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்து வருகிறது. குண்டு வெடிப்பு தொடர்பாக அடையாள அட்டையைக் கோவிலில் விட்டுச் சென்ற வினோத் மிஸ்ரி என்பவரும், கொல்கத்தாவில் ஒருவரும் கைது செய்யப் பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். .

வினோத் மிஸ்ரி ஒரு புத்த சன்னியாசியல்லாத நிலையில், புத்த சன்னியாசி வேடமணிந்து கோவிலில் வந்துள்ளது வீடியோவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது உள் வேலையாக இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. .

இன்னும் விசாரணை முழுவதும் முழுமை பெறாத நிலையில் வழக்கம் போலவே ஊடகங்கள் இந்தக் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன்கள் தான் காரணம் என்றும் மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. முஸ்லீம்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் என்று கூறப்படும் ரியாஸ் பட்கலே ஊடகங்களிடம் வந்து கூறினாரா என்பது தெரியவில்லை! .

இந்தியாவில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாலேகான், சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் உள்ளிட்ட பல குண்டுவெடிப்புகளில் ஒரு தரப்பினரைக் குற்றவாளிகள் எனக் கருதி கைது செய்து சித்ரவதை செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்த பின்னர் சில நேர்மையான அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் யாரையோ காப்பாற்றும் நோக்கில் அனைத்து ஊடகங்களும் குண்டு வெடித்த ஒரு மணி நேரத்தில் ஒரே பெயரை உச்சரிப்பதும் தலையங்கம் தீட்டி தாம் சார்ந்த மத அமைப்புகளுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதும் நல்லதல்ல.


புத்த கோவில் தாக்கப்படலாம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே மத்திய உளவுத் துறை எச்சரிக்கை செய்ததாகவும் எனினும் பீகார் மாநில அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடந்தது எனவும் ஒரு சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மியான்மரிலும் ஸ்ரீ லங்காவிலும் கடந்த 4 ,5 மாதங்களாகவே முஸ்லீம்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், 9 மாதங்களுக்கு முன்னரே நடக்காத தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியது எப்படி? .

இதில் இன்னொரு விசயமும் உண்டு. மியான்மரிலும், ஸ்ரீ லங்காவிலும் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை உணர்ந்துள்ள பயங்கரவாத இயக்கங்கள் முஸ்லீம்களின் மீதான பௌத்தர்களின் கோபம் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்காக ஏன் இத்தாக்குதலை நடத்தி இருக்கக் கூடாது? .

சில மாதங்களுக்கு முன்னர் பயங்கர தாக்குதல் நடத்த டெல்லி வந்ததாக ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கதினைச் சேர்ந்தவர் எனக் கூறி லியாகத் அலி ஷா என்பவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்வதற்கு முன்னர் டெல்லி ஜாமியா மஸ்ஜித் அருகே உள்ள ஹோட்டலில் சோதனை நடத்தி பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை மீட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது. .

ஜாமியா மஸ்ஜித் அருகே செயல்படும் தங்கும் விடுதியில் ஆயுதங்களைக் கொண்டு வைத்து விட்டு பயங்கரவாதி ஒருவன் தப்பி ஓடி விட்டதாகவும் தங்கும் விடுதியில் உள்ள சி சி டி வி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை டெல்லி காவல்துறை வெளியிட்டது. .
தங்கும் விடுதியில் பயங்கர ஆயுதங்களை வைத்து விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதி இது வரை கைது செய்யப் படாததும் ஊடகங்களும் இது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க பயங்கர சதி திட்டத்துடன் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக வரும் பொது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்த நிலையில், ஜம்மு மாநில அரசும் காவல்துறையும் லியாகத் அலி ஷா டெல்லியைத் தாக்க வர வில்லை என்றும் ஜம்மு மாநில அரசின் மறு வாழ்வளிப்பு திட்டத்தின் மூலம் மாநில அரசிடம் சரணடைய வந்ததாகவும் தெரிவித்தது. .

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் இப்பிரச்னையை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டது. .

தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில், லியாகத் அலி ஷாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை அளித்த ஆதாரங்கள் உறுதி செய்யப் படாததால் லியாகத் அலி ஷா பிணையில் விடுவிக்கப் பட்டார். மத்திய உள்துறை அமைச்சகம் சரியான நேரத்தில் தலையிட்டு விசாரணையைத் தேசிய புலனாய்வு அமைப்பு வசம் ஒப்படைத்து இருக்கா விட்டால் போலி என்கவுண்டரில் லியாகத் அலி ஷா கொலை செய்யப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. .

பயங்கரவாதிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தண்டிக்கப்படுபவர்கள் உண்மையான பயங்கரவாதிகள்தானா என்பதில் தான் பலத்த சர்ச்சை உள்ளது. .

பல குண்டுவெடிப்பு வழக்குகளிலும் அப்பாவிகள் கைது செய்யப் படுவதால், உண்மையான பயங்கரவாதிகள் வெளியே சுற்றித் திரிந்து மீண்டும் மீண்டும் பல்வேறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். .

மத்திய அரசையும் நம்ப முடியவில்லை; மாநில அரசுகளையும் நம்ப முடிய வில்லை. மத்திய மாநில அரசுகளே ஊடகங்களின் பொய்ப் பிரசாரத்துக்குத் துணை போகிறதோ என்ற அச்சமும் உள்ளது.
.

உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு இது போன்ற பயங்கரவாத தாக்குதல் வழக்குகளை தாமே கையிலெடுத்து, நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை முடியும் வரை ஊடகங்களுக்கு வாய்ப் பூட்டு போடுவதோடு, நிஜ குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். .

THANKS TO SOURCE: http://www.inneram.com/inneram-specials/editorial/847-buddha-gaya-blast-case.html

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP