**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தினமல(ம்)ர் நாளிதழின் கேவல வக்கிர ஊடக விபசார பிழைப்பு

>> Wednesday, June 5, 2013

முஸ்லிம் பெயர்களைக் கோர்த்து வக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்! இந்தக் கேவலமான பிழைப்பில் முன்னணியில் நிற்பது தினமலர்

நாட்டில் எங்காவது தீவிரவாதச் செயல்கள் நடந்தால் காவல்துறை விசாரணை துவங்கும் முன்பே முஸ்லிம்களைக் கோத்துக் கதை எழுதும் வழக்கம் இருப்பது போல் கிளுகிளு கள்ளக்காதல் செய்திகளிலும் முஸ்லிம் பெயர்களைக் கோர்த்து எழுதுவது பரபரப்பான விற்பனைக்கு வழிவகுக்கும் என்பது தினமலரின் வியாபாரத் தந்திரம்.

ஊடகங்கள் தங்கள் வணிகத்தை உயர்த்திக் கொள்வதற்காகப் பல வகைப்பட்ட செய்திகளையும் கட்டுரைகளையும் கற்பனை வளத்துடன் புனைந்து வெளியிடும் வழக்கம் தற்போது மலிந்து விட்டது

நாள்/வார இதழ்கள் தங்கள் விற்பனையைக் கூட்ட இப்படிச் செய்வது போல, ஒளி ஊடகமான தொலைக்காட்சிகள் அவற்றின் T.R.P ரேட்டை அதிகரிக்க நீயா-நானா, அரட்டை அரங்கம் போன்ற "டாக் ஷோ"க்கள், பாட்டு அல்லது நடனப்போட்டிகள் நிறைந்த "Reality Show" - க்கள் அல்லது உண்மை விளம்பல்(?) போன்ற நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. இவை பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்பட்டுப் பரபரப்பான மோதல்களுடன் அல்லது ஆவேசமான அழுகைக் காட்சிகளுடன் ஒளிபரப்பப்பட்டுப் பார்வையாளர்களைக் கவர்கின்றன.

நோக்கம் விற்பனை ஒன்றே.. பெண்களைக் கட்டிப் போட்டுள்ள கண்ணீர்த் தொடர்களும் கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும் செய்யும் வஞ்சனையையும் நம்பிக்கை மோசடியையும் விலாவாரியாகக் காட்டுகின்றன. ஒழுக்கம் பண்பாடு சமூகக் கட்டுப்பாடு என்பனவெல்லாம் 1995 ஆம் ஆண்டோடு போய்விட்டன. இன்று வளரும் தலைமுறைக்கு ஊடகங்கள் அறிமுகப்படுத்துவன தரங்கெட்ட - ஒழுக்க மாண்புகளைப் புறந்தள்ளிய- உலகமும் வாழ்க்கையுமே ஆகும்.

இன்றைய தலைமுறை, கற்பு என்ற ஒன்றை அறியாமல் கள்ளத்தொடர்புகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஊடகங்கள் செயல்படுகின்றன. கள்ளக்காதல் காரணமாகக் கணவனை அல்லது மனைவியை அல்லது கள்ளக்காதலனை/ காதலியைக் கொலை செய்யும் செய்திகளை நாள் தவறாமல் ஊடகங்கள் தருகின்றன.

முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை அவ்வப்போது செய்தியாக வந்ததால் மக்களுக்கு அவை மிகுந்த அதிர்ச்சியையும் கூச்சத்தையும் தந்தன. மது குடிப்பதையும் புகை பிடிப்பதையும் சமூகத்துக்குப் பயந்து ஒதுக்குப்புறமாகச் செய்தது போல அந்தக் கள்ள உறவுகள் நிகழ்ந்தன. ஆனால் இன்று அரசே மது விற்பனை செய்வதால் குடிப்பதை இயல்பாக ஏற்றுக்கொண்டதைப்போல, இன்று ஊடகப்போட்டியில் அன்றாடம் இத்தகு செய்திகள் விலாவாரியாகத் தரப்படுவதால் இவற்றையும் மக்கள் இயல்பாக எடுத்துக்கொள்ளும் அவல நிலை வந்து விட்டது.

கோபத்தில் நிகழும் அடிதடித் தகராறு கொலையில் முடிந்தாலும் அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த கொலையாக இருந்தாலும் ஊடகங்கள் கிளுகிளுப்புக்காகக் "கள்ளக்காதல் காரணமா?" எனக் கொக்கி போடுகின்றன. அடுத்தவனின் அந்தரங்கத்தைத் துழாவும் மலிவான ஆர்வத்துக்குத் தீனிபோடும் வகையில் செய்திகள் புனையப்படுகின்றன.

ஆனால் அவற்றில் ஒரளவுக்கு மேல் கிளுகிளுப்பூட்ட முடியாது. மஞ்சள் பத்திரிகைத் தரத்துக்கு விஷயங்களை விலாவாரியாகத் தர முடியாது. எனவே "அந்தரங்கம்" "ஆலோசனை" என்று போட்டு இவைபோன்ற கள்ளக்காதல், ஓரினப் புணர்ச்சி, விலக்கப்பட்ட உறவுக்குள் புணர்ச்சி, கல்யாணத்துக்கு முன் கற்பிழந்தது, கல்யாணத்துக்குப் பின் கணவனை வஞ்சிப்பது, மாமனாரின் இன்ப வெறி என "சுயமைதுன"க் கதைகளை உண்மைபோல வெளியிடுகின்றன. இந்தக் கேவலமான பிழைப்பில் முன்னணியில் நிற்பது தினமலர்.

நாட்டில் எங்காவது தீவிரவாதச் செயல்கள் நடந்தால் காவல்துறை விசாரணை துவங்கும் முன்பே முஸ்லிம்களைக் கோத்துக் கதை எழுதும் வழக்கம் இருப்பது போல் கிளுகிளு கள்ளக்காதல் செய்திகளிலும் முஸ்லிம் பெயர்களைக் கோத்து எழுதுவது பரபரப்பான விற்பனைக்கு வழிவகுக்கும் என்பது தினமலரின் வியாபாரத் தந்திரம்.

நடுநிலையான தமிழ் மக்கள் பெரும்பாலோர் இந்த இதழுக்கு பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொடுத்த பெயரைத்தான் பயன்படுத்துகின்றனர். அந்தப் பெயர் தனக்குப் பொருத்தமானதுதான் என நிரூபித்துக் கொண்டே இருக்கிறது அவ்விதழ்.

சில மாதங்களுக்கு முன் (09/09/2012) வெளியான தினமலர் வாரமலர் இதழில் மேற்சொன்னதுபோன்ற ஒரு கதை, கடிதம் என்ற பெயரில் "அன்புடன் அந்தரங்கம்" பகுதியில் வெளியானது. இது கடிதமன்று; புனையப்பட்ட கதை என்பதை இதன் உள்ளடக்கமே வெளிப்படுத்தி விடுகின்றது.

"அன்புடன் அந்தரங்கம்" சகுந்தலா கோபிநாத்துக்கு கடிதமாம்.

கதை வசனங்கள் முழுமையாக இங்கே

அன்புள்ள அம்மாவிற்கு வணக்கம்,

நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன்.

கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கு இருந்து வருகிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர். என் தகப்பனார், முன்னாள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்று விட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவராகவும், மாநில அளவில் செயலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த கல்வியாளராகவும் இருந்து வருகிறார்.

எனக்கு ஒரு தம்பி. நல்ல வேலையில், அதிக பட்ச சம்பளத்தில், சவுதியில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். மற்றொரு தங்கை மட்டும் ஊரில் வசித்து வருகிறாள். அவர் கணவரும், இங்கு தான் வேலை செய்து வருகிறார். என் அப்பாவும், அம்மாவும், என் தங்கை பையன்கள் இருவரையும், படிக்க வைத்தும், தனியாக வசிக்கின்றனர். எல்லாரும் தனி, தனியாக சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களை, வருடம் ஒரு முறை இங்கு வந்து பார்த்து செல்வார் என் தகப்பனார்.

இங்கு வீட்டு வாடகை அதிகம் என்பதால், தமிழ் தெரிந்த குடும்பங்கள் பெரும்பாலும், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, இரு குடும்பமாக ஷேர் செய்து இருந்து வருகின்றனர். இது போலவே, நானும், ஒரு வீட்டை ஆறு வருடமாக எடுத்து, தமிழகத்தில் இருந்து வரும் குடும்பத்தை, ஷேரிங்கில் வைத்து வருகிறேன்.

கடந்த ஆறு வருடத்தில், ஐந்து குடும்பங்கள் நல்ல விதமாக தங்கி சென்றுள்ளனர். தற்போது, ஒரு முஸ்லிம் நண்பர், வீடு தேடிக் கொண்டு இருந்தார். என்னுடைய வீட்டில் தங்குவதற்காக கேட்கவே, நானும் சரி என்றேன்.

மார்ச் 1, 2011 முதல் என்னுடன் இருந்து வருகிறார். குடும்பத்தை அழைத்துவர முயற்சி செய்து வருவது போல் பாவ்லா காட்டுவார். ஆனால், அழைத்து வந்தபாடில்லை. என் மனைவி தான், அவர் வந்த நாள் முதல், சமைத்து கொடுக்கிறாள். ஒன்றாக தான் சாப்பிடுகிறோம்.

என் மனைவி எட்டாம் வகுப்பு வரை படித்தவள். நல்ல அறிவாளி, குடும்பத்தை பொறுப்பாகவும், நேர்த்தியாகவும் நடத்திச் செல்வாள். எந்த ஒரு சிறு குறையும் இல்லாமல் என்னையும், என் பிள்ளைகளையும் பார்த்து கொள்வாள். நான் காலையில் வேலைக்கு சென்றால், இரவுதான் வீட்டிற்கு வருவேன். என் வீட்டில் உள்ள நண்பரோ, காலையில் எனக்கு முன்பாக வேலைக்கு சென்று விடுவார். மாலை எனக்கு முன்பாக, நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார். அவர் வரும் நேரங்களில், பிள்ளைகள் வீட்டில் இருப்பர். எனவே, எவ்வித அச்சமும், பயமுமின்றி வாழ்ந்து வந்தேன். என் பிள்ளைகளிடமும், என் மனைவியிடமும் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். நான் வேலையில் இருந்து வருவது வரை, பிள்ளைகளுடன் கேரம் விளையாடுவது, "டிவி' பார்ப்பது என்று இருந்து வந்தார்.

என் நண்பருக்கும் மூன்று பிள்ளைகள், இரண்டு பையன், ஒரு பெண், முதலாவது பையன், 11வது படிக்கிறான். இரண்டாவது பையன், 5வது படிக்கிறான். ஒரு பெண் குழந்தை, முதல் வகுப்பு படிக்கிறாள். எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்.

இடையில், இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு போய் விட்டார். அந்த நேரங்களில், என் மனைவி பைத்தியம் பிடித்தவள் போல், என்னிடமும், பிள்ளைகளிடமும் நடந்து கொண்டாள். அப்போது தான், அவளை, அன்போடு அரவணைத்து, என்ன விவரம் என்று கேட்டதற்கு, அவன் வந்தது முதல், ஊர் செல்லும் வரை நடந்த விவரங்கள் அனைத்தும் கூறி, கதறி அழுதாள். அப்போது தான் எனக்கே விவரம் தெரியும்.

சரி நடந்தது நடந்து விட்டது, இனிமேல் நல்லவளாக நடந்து கொள் என்று கூறியதற்கு, "அவன் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. உயிரை மாய்த்து கொள்வேனே தவிர, அவனை விட மாட்டேன்...' என்று கூறுகிறாள். அவனும், ஊரில் இருந்து திரும்பி வந்து விட்டான். புது பெண்ணை போல், அலங்கரித்து, "என் மாப்பிள்ளை வருகிறார், வா ஏர்போட்டுக்கு போகலாம்...' என கூட்டி சென்றாள்.

அவள் எதையும் மறைக்கவில்லை. என்னிடம் சொல்லிவிட்ட விவரத்தை, அவனிடமும் கூறி விட்டாள். என்னிடம் கூறிய பின், என் முன்னாலேயே அவனை கட்டிப் பிடிக்கிறாள், முத்தமிடுகிறாள். எனக்கு தெரிந்து விட்டது என்ற பின், அவன், என்னை பார்க்கவே பயப்படுகிறான். அவளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருக்கிறான்; என்னிடம் பேசும் போது மட்டும், அவளை வெறுப்பது போல் பேசுகிறான். எனக்கு கடிதத்தில் எப்படி எழுதுவது என்று புரியவில்லை. தாங்களாக புரிந்து கொண்டு மேற்கொண்டு நான், என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள்.

என் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவள் கேட்பதாக இல்லை. அவனது காலை பிடித்து கெஞ்சி கேட்டு விட்டேன். "உன் மனைவி இப்படி இருக்கும் போது, நான் என்ன செய்ய முடியும். நீ வெளியே போகச் சொன்னால், இப்போதே போய் விடுகிறேன். அவள் உயிருக்கு நீதான் பொறுப்பு...' என்கிறான்.

வாரம் ஒரு முறை, அவனிடம் உறவு கண்டிப்பாக வேண்டும் என்று என்னிடமே சொல்கிறாள். அதற்கும் ஒத்து கொண்டு தான், ஒரே வீட்டில் இருந்து வருகிறோம். குடும்ப மானம் வெளியில் செல்லக்கூடாது என்று தான் இவ்வளவையும், மனதுக்குள் புதைத்து, உயிரற்ற உடம்பாக சுற்றி வருகிறேன். இன்று வரை குழந்தைகள் இருவருக்கும், எதுவும் தெரியாது. 1993 முதல் 2011 வரை ஒரு சிறிய சண்டை கூட என் மனைவி போட்டது கிடையாது. ஆனால், இந்த கயவன் வந்து வீட்டில் நுழைந்த பின், நாங்கள் இருவரும் சண்டை போடாத நாளே இல்லை. சிறு சிறு விஷயத்திற்கு கூட, சண்டை போடுகிறாள்.

தவறு செய்பவள் அவள், ஆனால், நான் தவறு செய்வது போல், தினம் என்னை வாட்டி வதைக்கிறாள். இரு பிள்ளைகளையும், தமிழகத்தில் ஹாஸ்டலில் கொண்டு சேர்த்து விடுங்கள் என்று கூறுகிறாள். என்ன செய்வது, எப்படி செய்வது, என்று புரியவில்லை. என் மன ஆதங்கங்களை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.

எனக்கு வயது 45, என் மனைவிக்கு வயது 36, நண்பருக்கு வயது 47, அவளுக்கு தற்போது என்னை விட்டால் யாரும் இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே, பண விவகாரத்தினால், அம்மா வீட்டுக்கும், அவளுக்கும் உறவே இல்லாமல் போய் விட்டது. அவளை என்னால் வெறுக்கவும் முடியவில்லை. எப்படி இதைத் தடுப்பது என்றும் புரியவில்லை. நான் சம்பாதித்த சொத்துகள் எல்லாம், அவளின் பெயரில் தான் உள்ளது. தாங்கள் தயவு செய்து, எனக்கு நல்ல அறிவுரையை வழங்க அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

— இப்படிக்கு தங்கள் அன்பு மகன்.

"அன்புடன் அந்தரங்கம்" சகுந்தலா கோபிநாத் பதில்

அன்புள்ள மகனுக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. விக்கிரமாதித்தனுக்கு, வேதாளம் கதை சொல்லி, முடிவு கேட்பது போலிருந்தது உங்கள் கடிதம். குளிருக்கு நடுங்கும் ஒட்டகத்திற்கு, கூடாரத்திற்குள் சிறு இடம் கொடுக்க, அது முழு இடத்தையும் ஆக்கிரமித்து, உரிமையாளனை வெளியே தள்ளி விட்டது போலிருக்கிறது உங்கள் கதை.

நீங்கள் செய்த முதல் தவறு, திருமணமாகியும், பிரம்மசாரியாக இருப்பவனை கொண்டு வந்து, நீங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டில் குடி வைத்தது. ஐந்து வேளை தொழும் முஸ்லிமாக அவன் இருந்தது, உங்கள் மனைவிக்கு கூடுதல் ஈர்ப்பு.

அவன் பணி நேரமும், உங்கள் பணி நேரமும் முன்பின்னாக அமைந்திருந்தது, அவனுக்கு வசதியாக போய் விட்டது. உங்கள் மனைவியை புகழ்ந்து, தன் வசப்படுத்தியிருக்கிறான்.

இனி, உங்கள் பிரச்னைக்கான தீர்வை யோசிப்போம்.

தவறு செய்யும் உங்கள் மனைவியையும், நண் பரையும் தனியே அழைத்து பேசுங்கள். இனிமேல் ஒரு நொடியும் அவர்களின் கள்ளக்காதலுக்கு பார்வை யாளனாக இருக்க தயாரில்லை என கூறி விடுங்கள். உங்கள் மனைவியிடம், "உனக்கு முத்தலாக் கொடுத்து விலகுகிறேன். நீ விரும்பியவரோடு சேர்ந்து வாழ்...' என கூறுங்கள்.

நண்பருக்கு இரு விஷயங்களை தெளிவுபடுத்துங்கள்: ஒன்று, "வீட்டை காலி செய்துவிட்டு, எங்காவது, என் மனைவியின் கண்களுக்கு தென்படாமல் வாழ்...' என கூறுங்கள். அல்லது, "என் மனைவியுடனான தகாத உறவை, உன் மனைவிக்கு தெரிவித்து விடுவேன். உன் மனைவியை தலாக் சொல்லி விட்டோ, அவளின் அனுமதியுடனோ, என்னுடையவளை, இரண்டாவது திருமணம் செய்து கொள்...' என கூறுங்கள்.

அவர்களின் கள்ள உறவு தகாதது. உங்களின் இரு குழந்தைகள் மற்றும் நண்பரின் மூன்று குழந்தைகளின் எதிர் காலத்தை, அவர்களின் கள்ள உறவு, சீரழித்து விடும் என விளக்குங்கள். "நீங்கள் தூங்கச் செல்லும் நேரத்தில், உங்களுடைய வீடுகளில் நெருப்பை (அணைக்காமல்) விட்டு விடாதீர்கள்' என்ற நபிமொழி, உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த நபிமொழிக்கு, நேரடி அர்த்தம் ஒன்றிருக்கிறது... வாழும் வீட்டை, பாழும் நெருப்புக்கு இரையாக்கி விடக் கூடாது. மறைமுக அர்த்தம் என்னவென்றால், இரவில் நிம்மதியாக தூக்கம் பெற, உள்ளத்தில் புகைந்து கொண்டிருக்கும் தீமைகளை, தூங்கும் முன், மனிதன் அணைத்து விட வேண்டும். பொறாமை, வெறுப்பு, சண்டை, சச்சரவுகள், ஊடல், பூசல், மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் அனைத்திலும், தீ இருக்கிறதே, அதை பாவமன்னிப்பு எனும் நீர் ஊற்றி, அணைத்துவிட்டு, தூங்கினால், மனிதன் மறுநாள் புத்துணர்ச்சியுடன் எழ முடியும் என்பதே.

உங்கள் மனைவியை இந்தியாவுக்கு அழைத்து வாருங்கள். ஒஸ்தாத் பி போன்ற மதப்பெண்மணி களை விட்டு, கவுன்சிலிங் கொடுங்கள். சவுதி வாசம் போதும் என குடும்பத்தோடு, இந்தியா திரும்பி, புது வாழ்க்கை வாழப் பாருங்கள். கடைசி ஆயுதமாக, முத்தலாக் என்ற ஆயுதத்தை பிரயோகியுங்கள்.

நல்ல திருமண உறவு என்பது, கணவன், மனைவிக்கு ஆடையாகவும், மனைவி, கணவனுக்கு ஆடையாகவும் இருப்பதுதான்.

— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.

நன்றி : தினமலர்

விறுவிறுப்பான துவக்கத்துக்காக, "நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன்" என்று துவங்குகிறது கதை. மிகவும் கட்டுப்பாடான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் மிக மிகக் கட்டுப்பாடாகச் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஸவூதி அரேபியாவில் வாழ்ந்து கொண்டு "கள்ள உறவுக்கதை" சொன்னால்தான் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டான் கதாசிரியன்.

உண்மைதான் முரண் இன்றி வரும்; கற்பனை பல்லிளித்து விடும். இளித்திருக்கிறது. மேற்கொண்டு வாசியுங்கள்.

இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பது:-

1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கு இருந்து வருகிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர்

எனக்கு வயது 45, என் மனைவிக்கு வயது 36, நண்பருக்கு வயது 47

அடே கதாசிரியனே.. உன் கதைப்படி அவன் வயது 45, அவன் ஸவூதிக்கு வதது 1983.. அதாவது அவன் ஸவூதியில் 29 வருடங்கள் இருந்தால் அவன் 16 வயதில் அங்கு வந்திருக்க வேண்டும் இல்லையா?

16 வயதுக்காரனுக்கு ஸவூதியில் வேலை பார்க்க விஸா தரமாட்டார்களே? கதை புனையும் அவசரத்தில் இதைப் புரிந்துகொள்ள மறந்து விட்டாய்.

அத்துடன் குடும்பமின்றி தனியே வசிக்கும் ஒருவர் (Bachelor) இன்னொரு குடும்பத்துடன் ஒரே வீட்டில் "ஷேரிங்" இல் தங்க முடியாது எனும் சவூதி நாட்டின் சட்டத்தையும், கதாசிரியனான நீ அறியாமல் இருந்தது பரிதாபகரமாக இருக்கிறதே!

என் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவள் கேட்பதாக இல்லை. அவனது காலை பிடித்து கெஞ்சி கேட்டு விட்டேன். "உன் மனைவி இப்படி இருக்கும் போது, நான் என்ன செய்ய முடியும். நீ வெளியே போகச் சொன்னால், இப்போதே போய் விடுகிறேன். அவள் உயிருக்கு நீதான் பொறுப்பு...' என்கிறான். வாரம் ஒரு முறை, அவனிடம் உறவு கண்டிப்பாக வேண்டும் என்று என்னிடமே சொல்கிறாள். அதற்கும் ஒத்து கொண்டு தான், ஒரே வீட்டில் இருந்து வருகிறோம். குடும்ப மானம் வெளியில் செல்லக்கூடாது என்று தான் இவ்வளவையும், மனதுக்குள் புதைத்து, உயிரற்ற உடம்பாக சுற்றி வருகிறேன்

வாரம் ஒரு முறை கள்ளக்காதலனுடன் உறவு இருந்தே வேண்டும் என்று கணவனிடமே கூறுவது கற்பனையின் உச்சம். மிச்ச ஆறுநாளும் என்ன செய்வாளாம் கதாசிரியனே?

எந்த மானமுள்ள ஆண்மகனாவது, மனைவி அடுத்தவனுடன் வாரம் ஒருமுறை உறவு கொள்வேன் என்று சொல்வதை ஒப்புக்கொள்வானா? கற்பனைக்கும் அளவில்லையா?

ஐந்து வேளை தொழும் முஸ்லிமாக அவன் இருந்தது, உங்கள் மனைவிக்கு கூடுதல் ஈர்ப்பு. என்று ஆறுதல் சொல்லும் கதாசிரியரே! உன் கதைப்படி வாசகரின் விரிவான கடிதத்தில் மேற்கண்ட கூற்றே இல்லை...மடத்தில் எழுதிக் கொடுத்ததில் மடத்தனம் ஆகிவிட்டதோ?

ஐவேளை தொழும் முஸ்லிம், இப்படிப்பட்ட அயோக்கியத் தனத்தில் இறங்க மாட்டானே!

கள்ள உறவுகளைப் பற்றி எவ்விதப் பதற்றமோ கூச்சமோ இன்றி விலாவாரியாக, சுவை குன்றாமல் விறுவிறுப்பாக யாராவது கடிதம் எழுத முடியுமா?

அவனுக்கு என்று ஒரு சமுதாயம் இருக்கிறது. அங்கு சென்று முறையிடாமல் தினமலரில் கடிதம் எழுதும் அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தில் தரம் கெட்டவர் யாரும் இல்லை.

வக்கிர மனம் கொண்ட Pervert ஆன கதாசிரியரே! சமூகப்பொறுப்போ அக்கறையோ இல்லாமல் இந்தக் கதைகளை வாராவாரம் பெயரையும் நிகழிடத்தையும் மாற்றிப்போட்டு எழுதுவதால், தொடர்ந்து வாசிப்போருக்கு நாமும் இதைப்போல் முயன்றால் என்ன என்ற எண்ணம் வளராதா?

விடலைப் பையன்களும் பெண்களும் இதில் தப்பில்லை என்று துணிந்து விட மாட்டார்களா?

கடைசி ஆயுதமாக, முத்தலாக் என்ற ஆயுதத்தை பிரயோகியுங்கள்.

என்று தனது முட்டாள்தனக் கதைக்கு ஒரு ஃபினிஷிங் டச் வைத்து முடித்துள்ள தினமலரைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.

முஸ்லிம்கள் பற்றி சாதாரண அடிப்படைகளை அறிந்த பிற மதத்தினர் கூட "முத்தலாக்" என்ற இவர்களின் கற்பனை ஆயுதம்(!) இஸ்லாத்தில் கிடையாது என்பதை அறிவர். "ஒரே நேரத்தில் தலாக்-தலாக்-தலாக் என்று முஸ்லிம்கள் முத்தலாக் செய்வர்" என்று முன்னொரு காலத்தில் செய்யப்பட்டு வந்த கோயபல்ஸ்தனத்தை, தினமலர் இன்னும் பிடித்துத் தொங்குவதைக் கண்டு 'வாயால்' சிரிக்கத் தோணவில்லை.

இதே கதையைக் கொஞ்சம் மாற்றி ,"நான் மயிலாப்பூரைச் சேர்ந்த ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பையன். கடந்த 8 ஆண்டுகளாக, கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தலித் நண்பனை வீட்டில் தங்க வைத்திருந்தேன். அவன் என் மனைவியை மயக்கி ..." என்றோ - தனது அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து மாட்டிக் கொண்ட அந்துமணி ரமேஷ் தனது லீலைகளைப் பற்றிய ஐடியாக்களையோ சகுந்தலா மாமியிடம் ஆலோசனை கேட்பது போல் கதை எழுத முடியுமா என்று நாம் நினைத்தால்.... அதுகூட நடக்கலாம்.

REDஏனெனில், காசுக்காக எத்தகைய விபச்சாரம் செய்யவும் தயங்காத ஊடக எழுத்து விபச்சாரிகளான இவர்களுக்குச் சொந்த சமுதாயத்தின் மானம்கூட மதிப்பற்றதுதான்; பணத்திற்காகத் தன்னுடைய அந்தரங்கத்தையே பிரசுரிக்கும் கும்பலுக்கு இது சாதாரண விஷயம் தான்!
 "மக்களைப் பிளவுபடுத்துகிறது பத்திரிகைகள்" என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சும்மாவா சொன்னார்? "உண்மையின் உரைகல்" என்றொரு பெயரை தனது நெற்றியில் வெட்கமின்றி ஒட்டிக் கொண்டு, மூட நம்பிக்கைகளையும், மதவெறியையும், பாரபட்சமான செய்திகளையும் விட அதிக லாபம் கொழிக்கும் ஆபாசப் படங்கள் மற்றும் மூன்றாம் தரக் கதைகளையும் முதலீடாகக் கொண்டு காசு பார்க்கும் தினமலர், ஊடக விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.- ஆக்கம்: மஹ்மூத் அல் ஹஸன்

THANKS TO SOURCE:http://www.satyamargam.com/news/news-and-views/2109-dinamalar-a-modern-media-prostitute.html

மேலும் படிக்க... Read more...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP