**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

>> Friday, April 23, 2010

பிணிக்கு மருத்துவமணை எதற்கு? சமயலறை இருக்கவே இருக்கு !!

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே?

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ? தொண்டைப் புண்ணுக்கு, நகச்சுற்றுக்கு, மூக்கடைப்பு, இரத்தக் கட்டு, கபத்துக்கும், வாதத்துக்கும், புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு,

குடல் பிணிகள், பூச்சித் தொல்லை, கண் உஷ்ணத்தினால் எரிச்சல், புற்றுநோய் வராமல் தடுக்கும்

அப்படி என்ன இருக்கிறது இந்த மஞ்சளிலே? சொல்லுகிறேன் கேட்டுக்கங்க.

கபத்துக்கும், வாதத்துக்கும் இது ரொம்ப ரொம்ப நல்லதுங்க.
பையன் விளையாடும்போது அடிபட்டுட்டான். இரத்தக் கட்டு வேற. என்ன செய்யலாம்? மஞ்சளை அரைத்துப் போடுங்க. இரண்டு அல்லது மூன்று முறை போட்டதுமே குணம் தெரியுமே?

புண், சிரங்கு, வேனில் கட்டிக்கு, மஞ்சளோட கொஞ்சம் வேப்பிலையும் சேர்த்து, நீர்விட்டு மைபோல் குழைய அரைத்துப் போட்டுவர விரைவில் ஆறிவிடும்.

பழுத்தும் உடையாத வேனில் கட்டியை உடையவைக்க மஞ்சளையும், கார சோப்பையும் (துணிக்குப் போடும் சோப்பு) இழைத்துப் போட்டால் உடைந்து விடும்.

குழந்தைகளின் தொடர்ந்த இருமலுக்கு மஞ்சள் கைகண்ட மருந்து. வெந்நீரில் சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் கலந்து பருகக் கொடுத்தால் இருமல் நின்றுவிடும்.

மூக்கடைப்பு ஏற்பட்டால் மஞ்சளைச் சுட்டு அந்தப் புகையை முகர்ந்தால் சரியாகி விடும்.

விரளி மஞ்சள் தூளை நல்ல எண்ணெயில் இட்டுக் காய்ச்சவும். இதைத் தேய்த்துக் குளித்தால், மூக்கில் நீர்வடிவது நின்று விடும்.

வயிற்றில் இருக்கும் கிருமிகளைப் போக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. பச்சை மஞ்சளை அரைத்து சில நாட்கள் வெறும் வயிற்றில் காலை சாப்பிட்டு வந்தால் குடல் பிணிகள் தீரும். பூச்சித் தொல்லை நீங்கும்.

தொண்டைப் புண்ணுக்கு மஞ்சள் தூளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, விரைவில் குணமாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கிறதோ?

கவலைப் படாதீங்க, காய்ந்த மஞ்சள், வெல்லம் இரண்டையும் சமமா எடுத்துக்குங்க. அரிசி களைந்த நீர்விட்டு அரைத்து வடிகட்டி சாப்பிட்டு வந்தால், சீறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும்.

நகச்சுற்றுக்கு மஞ்சள் நல்ல மருந்து. சிறிது மஞ்சள்பொடி, சுண்ணாம்பு இரண்டையும் குழைத்துப் போட்டு வந்தால் விரைவில் குணம் தெரியுமே.

கண் உஷ்ணத்தினால் எரிச்சல் உண்டாகி அவதிப்பட்டால் மஞ்சள் கஷாயம் போட்டு, ஆறிய பின் அதனால் கண்களைக் கழுவி வர வேண்டும்.

மஞ்சள் நீரில் நனைத்த துணியால் கண்களை ஒற்றி எடுத்தாலும் நல்லது. உஷ்ணம் மற்றும் கண் சிவப்பும் கூட மாறி குணமாகி விடும்.

மஞ்சள், மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த விழுதை மோரில் கலக்கி இளம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க் காலங்களில் வரும் வயிற்று உபாதை, தலைவலி எல்லாம் காணாமற் போய் விடும்.

சமையலில் மஞ்சள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்க்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டென்றால், இதன் மகிமை சொல்லவும் இயலுமோ?

அடிபட்ட இடத்தில் இரத்தக்கட்டுடன், வீக்கமாய் இருப்பின், அரிசிமாவு, மஞ்சள், விளக்கெண்ணெய் கலந்து இரும்புக் கரண்டியிலிட்டுக் கிண்டினால் திரண்டு வரும். சூட்டுடனே, மெல்லிய துணியில் அதனை வைத்து, முடிச்சிட்டு, ஒத்தடம் கொடுத்தால், வீக்கம் குறைந்து, இரத்தக் கட்டும் குறைந்து விடும். வலிக்கு இதமாக இருக்கும்.

இருமல் தொடர்ந்து தொல்லை செய்கிறதா? கவலை வேண்டாம். மஞ்சள் தூளை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குணம் ஆகிவிடும்.
தோல்நோய்கள் அண்டாது.

இப்போது ஒரு அழகுசாதனக் குறிப்பு சொல்லட்டுமா?
மஞ்சள், வேப்பம்பூ, வெள்ளரிக்காய் மூன் றையும் அரைத்து உட லில் பூசிக் குளித்து வந்தால் நாளடைவில் சருமம் நல்லநிறம் பெறும்.

அதுமட்டுமின்றி இரவு தூங்கப் போவதற்கு முன்னால் காய்ச்சிய பசும்பாலில், தேன், மஞ்சள் பொடி, சிறிது குங்குமப்பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடம்பும், முகமும் பளபள என்றாகி விடுமே!

அட எங்கே போறீங்க? சமையலறையில் மஞ்சள் இருக்கான்னு பார்க்கக் கிளம்பிட்டீங்களா?

தனியா தனியான்னு ஒரு சாமான். அட அதுதாங்க கொத்துமல்லி விதை. அது இல்லாம சமையலா? சரிதான் சமையலுக்கு மட்டுமா அது பயன்படுது? இதோ இப்ப பார்க்கலாமா அது இன்னும் எதுக்கெல்லாம் பயன்படுதுங்கிறத?

காலைல படுக்கைய விட்டு எழுந்ததும் இலேசாய்த் தலை சுத்துது. நெற்றிப்பொட்டு இரண்டும் விண் விண்ணுனு தெறிக்குது. பித்தமா இருக்குமோ? வாந்தி வேற வரமாதிரி இருக்கா?

கவலையே படாதீங்க! ஒரு டேபிள் ஸ்பூன் தனியா, சிறு இஞ்சித் துண்டு, கிஸ்மிஸ் (அதுதாங்க உலர்ந்த திராட்சை) பழம் ஐந்து எல்லாத்தையும் அம்மியில வெந்நீர் விட்டு அரைக்கணும். பிறகு வடிகட்டி, தேன் கலந்து அரை டம்ளர் குடிங்க. புத்துணர்ச்சியோட வேலைகளைப் பார்க்கத் துவங்குவீங்களே. இதை `மல்லி சொரஸம்' அப்படீன்னு சொல்வாங்க. இது அந்தக் காலத்துல பெரியவங்க கையாண்ட முறை.

உஷ்ணத்தால் சில பேருக்கு பேதியாகும். கடுப்பா இருக்கும். ஏன் எரிச்சல் கூட ஏற்படும். இதுக்கு மருந்து இதோ. தனியாவைச் சிறிது எடுத்து வாணலியில் வறுத்து தூள் செய்துக்கணும். அதோட சமஅளவு சர்க்கரை கலந்து 1 ஸ்பூன் எடுத்து வாயில் போட்டு, கொஞ்சம் நீர் சேர்த்து சாப்பிடவும்.

இப்படி 3 வேளை சாப்பிட்டா பேதியும் குணமாகும். வயிற்றுவலி, எரிச்சல் எல்லாம் நீங்கி விடும்.

சுக்கு மல்லி காபி. இப்பவெல்லாம் இது ரொம்பப் பேசப்படற ஒரு பானம். சுக்கைப் பொடி செய்துக்கவேணும்.

தனியாவை லேசா வறுத்துப் பொடி செய்து சமஅளவு இரண்டையும் கலந்து, இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பொடியோட ஒரு டம்ளர் நீர் விட்டுக் கொதிக்க வைங்க. பிறகு இறக்கி வடிகட்டி பால் சேர்த்து, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் குடிச்சா, ஆஹா என்ன சுவை! உடம்பிற்கும் ரொம்ப நல்லது. தாகம், நாவறட்சி தீரும். உடம்பு சூட்டுக்கு, அதாவது உஷ்ண உடல்வாகு கொண்டவங்க, வெறும் தனியா கஷாயம், பால், சிறிது சீனி சேர்த்து அருந்தலாம்.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP