**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கண் புரை எனப்படும் கேட்ராக்ட்.

>> Wednesday, March 7, 2007

குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.

பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான குணப்படுத்தக்கூடிய கேட்ராக்ட் நோய் ஆகும்.

கேட்ராக்ட் என்றால் என்ன?

கேட்ராக்ட் என்பது லத்தீன் வார்த்தை. கேட்ராக்ட் என்றால் நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். இங்கு நீர்வீழ்ச்சியினூடே ஒரு பொருளைப் பார்க்கும்போது கண்ணுக்குப் புலப்படும் தோற்றத்தைப் போன்ற பார்வைக் கோளாறைக் குறிப்பிடுகிறது.

கேட்ராக்ட் என்பது வயோதிகம் காரணமாகவோ, பரம்பரை, விபத்துகள், நீரிழிவு நோய் போன்ற பல காரணங்களால் கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் சக்தியை இழப்பதினால் வரக்கூடிய தன்மை. இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் படர்ந்தது போன்ற சூழ்நிலையில் பார்வை தெளிவாகத் தெரியாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து முழு பார்வை இழப்பிற்கும் காரணமாகிறது. இந்த நிலையே கேட்ராக்ட் எனப்படும்.

கேட்ராக்ட் என்பது பொதுவாக வயோதிகர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னையா? அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?

கேட்ராக்ட் பொதுவாக வயோதிகர்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னை என்றாலும் எல்லா வயதினர்களையும் பாதிக்கக்கூடிய கண் சார்ந்த ஒரு பிரச்னை ஆகும். குறிப்பாக,

சூரிய ஒளியிலிருந்து அதிகமாக வெளிப்படக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகமாக ஏற்றுக் கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கும்,

 நீரிழிவு நோய் போன்ற காரணத்தினாலும்,

 கண்களில் ஏதேனும் நோய் தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,

 பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்

 நாம் பிறப்பதற்கு முன்பே நமது தாய்க்குப் பிரசவ காலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்பட்டிருந்தாலும்,

 நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்

 கிட்டப்பார்வை கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்

 கண்களில் காயம் ஏற்பட்டிருந்தாலும்

 கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதாவது இருந்தாலும்

 புகைப்பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கும் கண்புரை நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

 மேலும் பல்வேறு உயிர் வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்ராக்ட் உருவாகலாம்.

 புரோட்டின், வைட்டமின்கள் மேலும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக் குறைபாடு இருந்தாலும் கேட்ராக்ட் உருவாகலாம்.

கேட்ராக்ட்டின் அறிகுறிகள்:

ஒவ்வொருவரும் தமக்கு கேட்ராக்ட் இருக்கும்போது வெவ்வேறு அனுபவங்களைப் பெறுகிறார்கள். ஆனாலும் கேட்ராக்ட் பிரச்னை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவகளை உணர்வது வழக்கம்.

 பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

 வர்ணங்களைப் பிரித்தறிவதில் சிரமம் மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

 சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவதும்.

 தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.

 பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

 அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.

 படிப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சிரமப்படுவது. இந்நிலை பொதுவாக இரவில் சற்று அதிகமாக இருக்கலாம்.

 வெளிச்சத்தைச் சுற்றி வானவில் தெரிவது போல குறிப்பாக வாகனங்களின் விளக்கு வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம். வர்ணங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

கேட்ராக்ட் ஆபரேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது?

இந்தக் கேள்விக்கு சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மிகவும் பொறுமையாக அழகாக விளக்கம் தந்தார்.

தற்போது பேக்கோ எமல்ஸிபிகேஷன் என்ற புதிய முறையில் கேட்ராகக்ட் ஆபரேஷன் நடபெறுகிறது.

இந்த புதிய முறை நோயாளியின் கண்ணில் உள்ள இயற்கயான லென்ஸை அகற்றுவதற்கு, முன்பு போல 10 முதல் 12 மில்லி மீட்டர் வரை காயம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் நோயாளியின் கண்ணுக்குள் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள ஒரு ஊசி செலுத்தப்பட்டு ஊசியுடன் இணைந்த ஒரு புதிய உபகரணத்தின் (பேக்கோ எமல்சிஃபயர்) மூலமாக கண்ணுக்குள் இருக்கும் லென்ஸ் சிறுசிறு துகள்களாக சிதைக்கப்பட்டு உறிஞ்சி வெளியேற்றப்பட்ட. பின்னர் 2 மில்லி மீட்டர் விட்டமே உள்ள துளை வழியாக செலுத்தக்கூடிய, மடித்து உள்ளே வைக்கக்கூடிய செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டது.

இந்த முறையில் நோயாளி மருத்துவமணையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தவிர்க்கப்பட்ட. மேலும் ஆபரேஷனின்போது தையல் போடுவதும் தவிர்க்கப்பட்டது. காயம் ஆறுவதற்கு அதிகபட்சம் ஒரு வார காலமே போதுமான. ஒரு வார காலத்திற்குள்ளாகவே நடைமுறை வாழ்ககைக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் திரும்ப முடிகிறது.

கேட்ராக்ட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பார்வை பெற முடியுமா?

புரை உரித்தல் எனப்படும் கேட்ராக்ட் ஆபரேஷன் மூலமாக மீண்டும் பார்வை பெற முடியும்.

கேட்ராக்ட் ஆபரேஷன் செய்த பிறகு எப்போது மீண்டும் பார்வை கிடைக்கும்?

கேட்ராக்ட் ஆபரேஷனப் பொறுத்தமட்டில் ஆபரேஷன் செய்தவுடனேயே மீண்டும் தெளிவான பார்வை கிடைக்கும்.

ஒருவர் கேட்ராக்ட் ஆபரேஷன் எப்போது செய்து கொள்ளலாம்?

கேட்ராக்ட் ஆபரேஷன் என்பது பொதுவாக நோயாளியின் விருப்பத்திற்கிணங்கவே செய்யப்படுகிறது. மருத்துவர்களும் நோயாளியின் கண் புரை முற்றிய பிறகு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்கிறார்கள். இங்கே நோயாளியின் விருப்பம் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

உதாரணமாக நடைமுறை வாழ்க்கையில் அன்றாட வேலைகைளச் செய்வதற்கு கூட சிரமப்படுகின்ற வகையில் பார்வை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ளலாம். இது குறித்து உங்கள் கண் மருத்துவரின் நிறைவான ஆலோசனையப் பெற்றுக்கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

கண் புரை குறித்து பல தவறான ஊகங்களும் உலவி வருகின்றனது. அவற்றைப் பற்றியும் உண்மை நிலவரத்தையும் தெரிந்து கொள்வது மிகவும் சிறந்தது.

வைட்டமின் 'சி' மற்றும் வைட்டமின் 'இது' எடுத்துக் கொண்டால் கேட்ராக்ட் வருவதைத் தடுக்கலாம். (சரிஃதவறு)

சில ஆராய்ச்சி நிறுவனங்கள் வைட்டமின்களுக்கும் கேட்ராக்ட்டுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. சில ஆய்வுகள் வைட்டமின் 'இ' மற்றும் 'சி' எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு கேட்ராக்ட்டின் தாக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளதாகச் சொன்னாலும், ஒரு நிறைவான தீர்வு கிடைத்த பிறகே செயல்படுவது நல்ல.து

மேலும் வைட்டமின் 'இ' மற்றும் 'சி' அதிகமாக எடுத்துக்கொள்வது பல்வேறு பக்க விளைவுகைளை ஏற்படுத்தும். எனவே, அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை எடுத்துக் கொள்வது தவறு.

ஆஸ்பிரன் மருந்துகளை எடுத்துக்கொண்டால் கேட்ராக்ட் வருவதைத் தடுக்கலாம். (சரிஃதவறு)

ஆஸ்பிரன் மருந்துகளை எடுத்துக்கொண்டால் கேட்ராக்ட் வருவதைத் தடுப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் ஆஸ்பிரன் மருந்துகளை அதிகமாக எடுத்க்கொள்வது பல்வேறு பக்க விளவுகளை ஏற்படுத்தும். எனவே, அங்கீகாரம் பெற்ற மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றை எடுத்துக்கொள்வது தவறு.

உங்களுக்கு கேட்ராக்ட் என்று டாக்டர் தீர்மானித்தவுடன் ஆபரேஷன் செய்து கொள்வது நல்லது. (சரிஃதவறு)

பொதுவாக கேட்ராக்ட் கண்டறியப்பட்டவுடன் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய நடைமுறை வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பட்சத்திலும், உங்களுடய வேலையில் அல்லது தொழிலில் கண் பார்வை காரணமாக சரியாக கவனம் செலுத்தப்பட முடியாத பட்சத்திலும், உங்களுடய பொழுபோக்கு மற்றும் மகிழ்ச்சியான நேரங்களில் கண் பார்வை காரணமாக சிரமம் ஏற்படக்கூடிய பட்சத்திலும் ஆபரேஷன் செய்து கொள்வது நல்லது.

லேசர் சிகிச்சை மூலம் கேட்ராக்ட்ட எளிதாக குணப்படுத்தலாம். (சரி ஃதவறு)

பொதுவாக கேட்ராக்ட் ஆபரேஷனின் போது பாதிக்கப்பட்ட இயற்கயான லென்ஸ் ஆபரேஷன் மூலம் அகற்றிய பின்னர் செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. லேசர் மூலம் அகற்றுவது தற்போது பரீட்சார்த்த நிலையிலேயே உள்ளது. மேலும் தற்போது வழக்கில் உள்ள கேட்ராக்ட் ஆபரேஷன் மூலம் கிடக்கும் தீர்வு, தற்போதய முறைக்குத் தேவைப்படும் நேரம் போன்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பரீட்சார்த்த நிலையிலிருக்கும் லேசர் முறையினால் குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ குறிப்பிடத்தக்க பயனோ ஏதும் இல்ல. இருப்பினும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றனது.

அப்படியானால் கேட்ராக்ட் ஆபரேஷனுக்கும் லேசருக்கும் தொடர்பு கிடையாதா?

கேட்ராக்ட் ஆபரேஷனின் போது இயற்கை லென்ஸின் பின்புற மென்தோல் தவிர்த்து மற்ற பகுதிகள் நீக்கப்பட்டு, பின்புற மென்தோலில் செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிற.து இருப்பினும் செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ள படலத்தில் ஒளி ஊடுருவும் தன்மை குறைவாக இருக்கலாம். இந்நிலையில் தெளிவான பார்வை கிடைக்காது. எனவே, லேசர் கற்றைகளைச் செலுத்தி ஒளி ஊடுருவும் தன்மை குறைவாக உள்ள படலத்தில் துளையிட வேண்டிய அவசியம் நேரிடலாம். இம்முறையில் யாக் லேசர் பயன்படுத்தப்படுகிறது.

கேட்ராக்ட்டை கண் சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். (சரி ஃ தவறு)

கேட்ராக்ட் பிரச்னைக்குத் தீர்வு ஆபரேஷன் மட்டுமே. மருந்துகள் மூலம் குணப்படுத்துவது இயலாத காரியம்.

கேட்ராக்ட் சர்ஜரி மிகவும் ஆபத்தானது. (சரி ஃ தவறு)

கேட்ராக்ட் சர்ஜரி மிகவும் எளிமையான மிக அதிக அளவில் வெற்றியளிக்கக்கூடிய ஆபரேஷன் ஆகும்.

கேட்ராக்ட் ஆபரேஷன் முடிந்த பிறகு குணமடைய சில மாதங்கள் ஆகலாம். (சரி ஃ தவறு)

பொதுவாக சாதாரணமாக கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டவர்கள் சில நாட்களில் நடைமுறை வாழ்க்கையைத் தொடரலாம். ஒரு வேளை கேட்ராக்ட் ஆபரேஷனுடன் மற்ற கண் ஆபரேஷன்களும் சேர்த்து செய்யப்படும்பொழுது நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு கால தாமதம் ஏற்படலாம்.

கண்களில் ஏன் கேட்ராக்ட் உருவாகிறது?

கேட்ராக்ட் என்பது வயோதிகத்தின் காரணமாக ஏற்படக்கூடிய மாற்றங்களால் வருவதாகும். நம் வாழ்க்கை முழுவதும் நம்முடைய உடம்பில் உள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்தப் புதிய செல்களில் புரதச் சத்தின் தன்மை மாறுவதால் ஒளி ஊடுருவும் தன்மை தடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தெளிவற்ற பார்வை ஏற்படுகிறது.

கேட்ராக்ட்டில் பல்வேறு வகைகள் உள்ளனவா?

ஆம். வயோதிகம் சார்ந்தவை _ 95% வயோதிகம் காரணமாகவே பொதுவாக 40 வயதிற்குப் பின்னர் புரை நோய் உருவாகிறது.

பிறவியிலேயே ஏற்படுவது _ பிறக்கும் பொழுதே ஏற்படுவது பொதுவாக கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்று மற்றும் வீக்கம் காரணமாகவோ சிலருக்கு பரம்பரை மூலக்கூறியல் மற்றும் மரபியல் காரணமாகவோ புரை உருவாகலாம்.

விபத்துக்கள் காரணமாக ஏற்படுவது _ கண்ணில் உள்ள லென்ஸ் கடினமாக தாக்குதல்களால் அடிபடுவது, வெட்டுப்படுவது, துளையிடப்படுவது, தாங்கமுடியாத உஷ்ண வெப்பத்தினால் அல்லது இரசாயனப் பொருட்களின் தாக்கத்தினால் புரை உருவாகலாம்.

இரண்டாம் நிலை _ சில மருந்துகளின் ஒவ்வாமை, கண் நோய்கள், கண் தொற்று நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் காரணமாக புரை உருவாகலாம். சிலருக்கு கேட்ராக்ட் ஆபரேஷனுக்குப் பின்னர் பின்புற லென்ஸின் மென் படலம் அதிகமாக ஒளி ஊடுருவும் தன்மையற்றதாக இருப்பதாலும் இவ்வகை கேட்ராக்ட் உருவாகலாம்.

நமக்கு கேட்ராக்ட் இருப்பதை டாக்டர் எவ்வாறு அடையாளம் காண்கிறார்?

உங்களுக்கு கேட்ராக்ட் இருப்பதைக் கண்டறிய டாக்டருக்கு பின்வரும் விவரங்கள் தேவைப்படலாம்.

 உங்களுடய பொதுவான மருத்துவ விவரங்கள்

 உங்கள் கண் பிரச்னைகள் மற்றும் அறிகுறிகள் பற்றிய முழுமையான விவரங்கள்

பார்வைக் துகளை சோதனை விவரம்

 பக்கவாட்டு பார்வை சோதன விவரம்

 கண்களை அசைக்கும் முறை குறித்த சோதன விவரம்

 கண் நீர் அழுத்த விவரம்

 ஸ்லிட் லேம்ப் எனப்படும் உபகரணத்தின் மூலம் பரிசோதனசெய்து, உங்களுக்கு கேட்ராக்ட் இருக்குமேயானால் அதன் அடர்த்தி பற்றிய விவரம்

 கண்களின் பாப்பா விரிவதற்காக சொட்டு மருந்திட்டு கண்ணின் உட்புறப் பகுதிகள் மற்றும் பார்வை நரம்பினை பரிசோதனை செய்து கிடைக்கும் விவரம்.

 உங்களது கண்கள் வெளிச்சத்தை எந்த அளவிற்குத் தாங்குகிறது என்பது குறித்த பரிசோதனைகளின் விவரம்.

ஆகிய விவரங்களைக் கொண்டு கேட்ராக்ட் இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு ஏதாவது பின் விளைவுகள் வருமா?

பொதுவாக, கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க பின் விளைவுகள் ஏதும் வருவது கிடையாது. இருப்பினும் சிலருடைய மற்ற உடல் நலம் சார்ந்த பிரச்னைகளின் காரணமாக சிறு விளைவுகள் வரலாம். இந்த அனுபவம் அதிகபட்சம் 5% பேருக்கு மட்டுமே ஏற்படுவதுண்டு. இவை குறித்து உங்கள் கண் மருத்துவருடன் நீங்கள் ஆபரேஷனுக்கு முன்பே பேசித் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பிரச்னைகளை மூன்று பிரிவுகளில் குறிப்பிடலாம்.

1. ஆபரேஷன் நடபெறும் போது வரக்கூடிய பிரச்னைகள்:

கண் ஆபரேஷன் நடைபெறும் போது இரத்தம் வெளியேறுவது. இது பொதுவாக 300 நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே இவ்வாறு நேரிடுகிறது. மேலும் சுமார் 3%சதவீதம் நோயாளிகளுக்கு கண்ணுள்ளே இருக்கக்கூடிய விட்ரியஸ் ஹமர் என்ற திரவம் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பெரிய விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை.

2. ஆபரேஷனுக்குப் பின் வரக்கூடிய பிரச்னைகள்:

இவை பொதுவாக ஆபரேஷன் நடைபெற்றவுடன் உடனடியாக வரக்கூடிய பிரச்னைகள் எனப்படும். காயத்தில் இருந்து கசிவுகள், இரத்த ஒழுக்கு மற்றும் நோய்த் தொற்று இவை உடனடியாக கவனிக்கப்பட்டு சரிசெய்யப்படுகின்றது.

3. ஆபரேஷன் காயம் ஆறிய பின்னர் வரக்கூடிய பிரச்னைகள்:

நூறில் ஒருவருக்கு விழித்திரை பிரிதல் என்னும் பிரச்னை வரலாம். இவை ஆபரேஷன் மூலம் சரிசெய்யப்படுகிறது. கண்ணின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள செயற்கை லென்ஸ் காரணமாக முன்பகுதியான கார்னியாவில் வீக்கம் ஏற்படுதல், மேலும் விழித்திரையில் வீக்கம் ஏற்படவும் கூடும். மிக அதிகமான அளவில் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவருக்கும் குறைவாக நோய்த் தொற்று அல்லது இரத்தப் போக்கு காரணமாக ஏற்படக்கூடிய விளவுகள். ஆனாலும் கேட்ராக்ட் ஆபரேஷன் செய்து கொண்டதால் வரக்கூடிய விளைவுகள் மிகவும் அரிதே.

கேட்ராக்ட் ஆபரேஷனின் போது இயற்கையான லென்ஸின் பின்புற மென் தோல் நீக்கப்படாமல் அவற்றின் மீது செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிற.து பின்புற மென்தோல் கடினமாக இருந்தால் ஒளிக்கதிர் விழித்திரையில் குவிவை தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பார்வை தெளிவற்றதாக இருக்கும். இந்த நிலை இரண்டாம் நிலை கேட்ராக்ட் (Secondary Cataract) எனப்படும். உங்கள் கண் மருத்துவர் லேசர் சிகிச்சை மூலம் பின்புற மென் தோலில் ஒரு துளையிட்டு ஒளிக்கதிர் செல்வதற்கு வழி ஏற்படுத்தி பார்வை தெளிவானதாக இருக்க உதவி செய்வார்.

சிறு துளையிட்டு எமல்சிபிகேஷன் எனப்படும் கேட்ராக்ட் சர்ஜரி (Phacoemulsification with smaller incision) செய்யும்போது விரைவில் குணமாவதற்கும், பின் விளைவுகள் ஏதுமின்றி பாரவையை மீட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது. இது கண் மருத்துவ உலகில் சமீபத்திய உயர் மருத்வ தொழில் நுட்பம் மற்றும் அதிவேக முன்னேற்றத்தின் பயன் ஆகும். இந்த சிகிச்சையை சங்கர நேத்ராலயாவின் சிறப்பு மருத்வர்கள் குழு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார்கள்.

அ.போ. இருங்கோவேள்

NANDRI: KUMUDAM HEALTH.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP