**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

மாத்திரையர்கள் உஷார்.ஹார்ட் அட்டாக்!

>> Wednesday, February 7, 2007

மாத்திரையர்கள் உஷார்.ஹார்ட் அட்டாக்!

ஆபீஸ் வேலை. டென்ஷன். லேசாக தலைவலிக்கிற மாதிரி இருக்கிறது. பியூனைக் கூப்பிடுகிறீர்கள். ''இந்தாப்பா.. ஒரு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வா.. கூடவே சூடா ஒரு காபி..'' இப்படிச் சிலர் எந்தச் சிறு தொந்தரவும் உடலில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறவர்கள், சட்சட்டென்று எதற்கெடுத்தாலும் மாத்திரையை தேடுகிறார்கள். சிலர் தாங்கள் கொண்டு வருகிற பையில், சூட்கேஸில், ஆபீஸ் டேபிளில், வீட்டு அலமாரியில் என்று எல்லா இடங்களிலும் ஒரு இருபது, இருபத்தைந்து வகையான மாத்திரைகள் வைத்திருப்பார்கள். கூட இருக்கிறவர்களுக்கும் எடுத்து, எடுத்துத் தருவார்கள்.

''காலையில இருந்து வயத்தைக் கலக்கி இரண்டு தடவைப் போயிட்ட.து.!'' ''அப்படியா.. இந்தாங்க இதைப் போடுங்க.. கப்புனு கழுத்தை இறுக்கிப் பிடிச்சாப்ல நின்னுடும்..'' என்பார். யார் என்ன சொன்னாலும் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். இது சரியா? என்று ஒரு ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டு முடிவு வெளிவந்திருக்கிறது

மாத்திரையர்கள் இரண்டு நிமிடம் ஒதுக்கி இந்த முடிவைப் படித்துவிடுவதான் எதிர்கால ஆரோக்கியத்திற்கு நல்லது.

பொதுவாக, இந்த மாத்திரையர்களிடம் சிக்குவது சின்னதும், பெரியதுமான வலி மாத்திரைகள்தான். தப்பும், தவறுமாக எடுக்கப்படுகிற இந்த வலி மாத்திரைகள் என்ன செய்கின்றன தெரியுமா? ஹார்ட் அட்டாக்! ஆம்..

இஷ்டம்போல வலி மாத்திரைகளை எடுக்கிறவர்களுக்கு வெகு சீக்கிரத்தில் ஹார்ட் அட்டாக் வந்துவிடுகிறது. இந்த முடிவை உலகுக்கு அறிவித்திருப்பது 'கமிஷன் ஆன் ஹியுமன் மெடிசன்' என்கிற லண்டனில் இருக்கிற ஆய்வுக்கழகம்.

இந்த ஆய்வு முக்கியமாக மூன்று வலி மாத்திரைகளைத்தான், கவனத்தில் எடுத்க்கொண்ட.து ஒன்று ஆஸ்பிரின். இரண்டாவது ப்ரூஃபன். மூன்றாவது பாரசிட்டமால். இந்த மூன்றும்தான் சுலபத்தில் கடைகளில் சீட்டு எதுவும் இல்லாமல் கேட்டு வாங்கி, மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் முதல் இரண்டைவிட, மூன்றாவதாக வருகிற பாரசிட்டமால் கொஞ்சம் பாதுகாப்பானது என்றாலும், தவறுதலான பயன்படுத்துதல் என்கிற விஷயம், இந்த மூன்று மாத்திரைகளுக்கும் அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் சிக்குன் குனியா வந்த பொதுமக்களை மூட்டுக்கு மூட்டு கவனித்ததில் எல்லோரும் கிட்டத்தட்ட வலி மாத்திரைகளிடம் இரண்டு மாதத்திற்கு தஞ்சம் அடைந்துவிட்டார்கள். ஆனால், அவற்றின் பின் விளவு இவ்வளவு மோசமான விஷயங்களோடு இருக்கிறது என்பது பலருக்குத் தெரரிந்திருக்காது.

உலகம் முழுக்க இந்த வலி மாத்திரைகளில் பல தடை செய்யப்பட்டிருக்கிற.து தற்சமயம் 'நிமுலிட்' என்கிற வலி மாத்திரையை மருத்துவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். காரணம், இந்த வலி மாத்திரைகள் உதவி செய்வதைவிட, உபத்திரவங்கள அதிகம் உருவாக்கி விடுகின்றன.

அல்சர் என்கிற ஒரு சிறு சிக்கலில் ஆரம்பித்து, சிறுநீரகப் பழுது என்கிற பெரிய பிரச்னை வரை இந்தவலி மாத்திரைகளால் ஏற்படும் என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட முடிவுகள். இப்போது இந்தப் புது ஆய்வு ஹார்ட் அட்டாக் என்கிற மற்றொரு பெரிய பிரச்னையயும் உறுதி செய்திருக்கிறது.

ஆனால் காய்ச்சல், உடல் வலி, வலி, அடிபடுதல் போன்ற மிக மிக இயல்பான நேரங்களில், இந்த வலி மாத்திரைகளின் உதவியில்லாமல் எப்படிச் சமாளிப்பது என்று நீங்கள் கேட்கலாம்?

நல்லது. உங்களுக்கு அந்த நேரத்தில் வலி மாத்திரை தேவையா இல்லயா? அது எந்த அளவில் தேவை? எத்தன நாட்களுக்கு? என்பதை உங்கள் டாக்டர் முடிவு செய்யட்டும். அதுவே பாகாப்பானது. எந்தப் பின்விளைவும் ஏற்படுத்தாது என்று, நாம் நினக்கிற பாரசிட்டமால் அளவு, உடலில் 15 கிராம் என்பதைத் தாண்டும் போது லிவர் என்கிற கல்லீரலைத் தாக்கிவிடும்.

பிரிட்டனில் நடக்கிற பல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குக் காரணம், இந்த பாரசிட்டமால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதான் என்கிற தகவலும் உண்டு.

பல இருதய நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். மருத்துவர்களே இதைப் பரிந்துரைக்கிறார்கள். அவர்களுக்கும் சொல்வது இதுதான். அந்த மாத்திரையின் அளவை உங்கள் மருத்துவர் தீர்மானிக்கட்டும். 75கிராம் என்கிற அளவுதான் மிகப் பாகாப்பானது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதிகமாகும்போது இரைப்பையைப் பாழ்படுத்தி, புண்ணாக்கி, செரிமானத்தைக் கோளாறாக்கி, கண்ணுக்குத் தெரியாத இரத்த இழப்பை உருவாக்கி, முடிவில் அனிமியா என்கிற இரத்த சோகை உடம்பில் பேஸ்த்து அடிக்கும். காரணம், வலி மாத்திரகளின் தவறான உபயோகம்.

ஆய்வு முடிவில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் இதுதான்.

சிறு தலைவலி, லேசான காய்ச்சல் போன்றவற்றிற்கெல்லாம் மாத்திரைகளைத் தேடாதீர்கள். ஜண்டுபாம், நண்டுபாம் என்று பல குண்டுகள் அதே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றைப் போட்டு வலியையும், காய்ச்சலையும் தாக்கிப் பார்க்கலாம். இல்லை சற்று ஓய்வு. முடியாதபட்சத்தில் அருகில் இருக்கும் நம்பகமான டாக்டரைச் சந்தியுங்கள்.

சரி, இந்த வலி மாத்திரைகள் எப்படிச் செயல்படுகின்றன? அதாவது நம் உடம்பில் ப்ரோஸ்டோகிளான்டின் என்ற ஒரு வஸ்து... வேண்டாம் விளக்கிச் சொன்னால் மறுபடியும் உங்கள் தலை வலிக்க ஆரம்பித்து விடும். விட்டுவிடலாம்.

மேலும் பதிவுகளுக்கு VANJOOR

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP