**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

சிரியுங்கள் - சிந்தியுங்கள்

>> Tuesday, January 23, 2007

பஸ் பயணத்தின்போது, பக்கத்து சீட்காரர் நம் மீது தூங்கி விழுந்து தொல்லை தராமல் இருக்க என்ன வழி?

அந்தத் திருத்த முடியாத ஜென்மங்களைத் தண்டிக்க என்னுடய டெக்னிக்கச் சொல்லட்டுமா? நல்ல தூக்கத்தில் ஆழ்ந்து, நம் மீது டுபுக் டுபுக் என்று பலமுறை விழும் வரை பொறுமை காட்ட வேண்டும். பிறகு, நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்து, அந்தத் தொங்குத் தலையான் நம் மீது ஹை ஸ்பீடில் தலையச் சாய்க்கும் போது, சரேலென்று எழுந்து விட வேண்டும். தொம் என்று விழுந்து, சில சமயம் சீட் கம்பியில் மோதி, வாயில் ஜொள் வழிய அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். ஆஹா, அந்த சுகமே தனி. (கொஞ்ச நேரத்தில் மறுபடி தொங்கலை ஆரம்பித்துவிடுவார் என்பது தொடர்கதை.)
---------------------
மின்னல் சிரிப்பு“மின்னல் அடிக்கும்போதெல்லாம் சர்தார்ஜிகள் சிரிப்பது ஏன்?”“தங்களை யாரோ போட்டோ எடுப்பதாக அவர்கள் நினைப்பதுதான்”
---------------------------
சர்தார்ஜியின் பேக்ஸ்
“ஒரு ஃபேக்ஸ் சர்தார்ஜியிடம் இருந்து வந்திருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?”“சர்தார்ஜி அனுப்பியிருந்தால், அதில் ஸ்டாம்ப் ஒட்டிய அடையாளம் இருக்கும்”
-----------------------------
சர்தார்ஜியின் லீவ் லெட்டர்
‘என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. அவளைப் பார்த்துக் கொள்ள கணவர்கள் என்று வேறு யாரும் இல்லாததால் எனக்கு விடுப்பு வேண்டும்’
------------------------
இரண்டு சர்தார்ஜிகள்
சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் செஞ்சதையெல்லாம் பார்த்துட்டேன்சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!

-----------------------
குட்டி சர்தார்ஜியின் வேண்டுதல்
சர்தார்ஜியின் மகன்:- கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமா மாத்திரு...அப்பா சர்தார்ஜி:- ஏண்டா அப்படி வேண்டுறே?சர்தார்ஜியின் மகன்:- ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்

-----------------------
ஜார்ஜ் புஷ்ஷின் கேள்விநேரம்

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்புஉரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார்.

ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.“உன் பெயர் என்ன?”“டேவிட்”“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’“3 கேள்விகள் கேட்கப்போகிறேன்.

ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார்.

இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும்வகுப்புக்குவந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.“ராபர்ட்”“உன் கேள்விகள் என்ன?”“5 கேள்விகள் கேட்கப் போகிறேன்.

ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?”
-----------------------------

பன்றி ஜார்ஜ்

புஷ் ஜார்ஜ் புஷ் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி காரில் விரைந்து கொண்டிருந்தார். கார் ஒரு பன்றிப் பண்னையை நெருங்கும்போது, வெள்ளைப் பன்றி ஒன்று எதிர்பாராத விதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது. ஜார்ஜ் புஷ் டிரைவரிடம், “உள்ளே சென்று நடந்ததை பண்ணை உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உடனே வா” என்று பணித்தார். அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார்.

“அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்?” என்று கேட்டார்.

அதற்கு டிரைவர் சொன்ன பதில்: “நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை (ஜார்ஜ் புஷ்ஷை) இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.”
-------------------------------

ஜார்ஜ் புஷ்சுக்கு கூட அவ்வளவு பாதுகாப்பு இல்லை. ஆனால், தமிழகத்தில் தான் சிலர் (ஜெயலலிதா?) பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை விட்டு விலகி நிற்கின்றனர். இது வெட்கக்கேடானது. ஆனால், எனக்கு ஏ.கே47 தேவையில்லை. மக்களே என் காவலர்கள் " (சசியின் கணவர் நடராஜன்) ---------------------------
வெட்டி(ள்ளி)த் திரை விமர்சனம்

“நீ ஆம்பளையா?”னு கேட்டுட்டா கோபத்தில் நிரூபிக்கிறேன் பேர்வழினு பொண்ணைக் கெடுத்துப்புட்டு, “ஆடத் தெரியுமான்னா ஆடிக்காட்டலாம்; பாடத் தெரியுமான்னா பாடிக் காட்டலாம்; ஆம்பளையான்னு கேட்டுட்டா. அதான் செஞ்சு காமிச்சுட்டு வர்றேன்’னு வீரவசனம் பேசுற பயலுகளைப் பிடிச்சு முதல்ல “குடும்ப வன்முறை” சீச்சீ... குடும்பமே இல்லை... “பாலியல் வன்முறை” சட்டத்தில உள்ள பிடிச்சுப் போடுறதை விட்டுட்டு ஹீரோவாக் காட்டினா, நாட்டில அப்புறம் கற்பழிப்பு, ஈவ் டீசிங் நடக்காமல் வேறென்ன நடக்கும்?
----------------------------
மெட்ராஸ் சிட்டியில ரத்த தானம் செய்யும் பழக்கம் உண்டா?

யாரைப் பாத்து இன்னா வார்த்தை கேட்டுப்புட்ட நைனா? பிளட்டு குடுக்காம இந்த மெட்ராஸ் சிட்டியில ஒரு சோமாரி லிவிங் ஆக முடியுமா? புரியாத கொயந்த பைய்யனா கீறியே? தெனோம் ராவு ஆறு மணி அடிச்சியாங்காட்டியும் இங்க பிளட்டு டொனேசனு ஷ்டார்ட் ஆயுடும் கண்ணு. கூவம் காவா ஏரியா கொசுங்கோ சும்மா சால்பேட்ட ரவுடிங்கோ கணுக்கா வூட்டுக்குள்ளார பூந்கினு, லிட்டரு கணக்குல ரத்தத்தை உறிஞ்சிக்கினு போய்க்கினே இருக்கும். அஆங்! நீ மல்லாக்கா பட்த்துக்கினு ரத்ததான தியாகி போல அப்பீட் ஆவணும் தெர்ஞ்சுகினியா?
---------------------------
கேள்வி: திமுக கதை முடியப் போகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளாரே? பதில்: பாவம், ஆல மரத்தடிக்கு வந்து அரசியல் ஜோதிடராகி விட்டார்! அவரே, அவர் பார்த்த ஜோதிடமே அவரைக் கைவிட்டு விட்ட பிறகு ஏன் இந்த துர் ஆசை! ஆசை வெட்கமறியாது!!

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP