**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

பரவும் விஷ கலாசாரம்

>> Saturday, January 13, 2007

எங்கள் இறைவா.. எங்களையும் எங்கள் சந்ததியினரையும்ஏனைய இஸ்லாமிய சமூகத்தினரையும் இது இதைப்போன்ற பலா முஸீபத்துகளிலிருந்து தடுத்து காத்து அருள்வாயாக ( ஆமீன;)

பரவும் விஷ கலாசாரம் இளைஞர்கள் இளைஞிகள்
' எஸ் எஸ் ' பயங்கரங்கள் .........

எச்சரிக்கைக் கட்டுரை.‘கைநிறையச் சம்பளம்... அடுத்து அமெரிக்கா போகவும் வாய்ப்பிருக்கிறது...’ என்று உங்கள் மகன் அல்லது மகள் பற்றி ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால், உங்களுக்கான எச்சரிக்கக் கட்டுரைதான் இது

இன்றைக்கு ஐ.டி. எனப்படும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையில் பெங்களூர், ஹைதராபாத்க்கு அடுத்தபடியாக, சென்னைதான் புலிப் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. சாஃப்ட்வேர் துறயில் உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் பல முன்னணி நிறுவனங்களும் சென்னயில் தங்கள் கிளைகளை நிறுவிவிட்டன. நேற்றுவரை இரும்புப் பட்டறைகளும், அலுமினிய கம்பெனிகளுமே நிரம்பிக் கிடந்த பழைய மகாபலிபுரம் ரோடு, இன்றக்குப் பளபளக்கும் வானுயர்ந்த சாஃப்ட்வேர் கட்டடங்களோடு தகவல் தொழில் நுட்பச் சாலயாக உருமாறி, மெருகேறிக் கொண்டிருக்கிறதுசாஃப்ட்வேர் அல்லது பன்னாட்டு கம்பெனிகளில் வேலை என்பதான் இன்றய இளஞர், இளஞிகளின் கனவாக இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே 20.000 ரூபாய் சம்பளம் தருகிற சாஃப்ட்வேர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது மலிய ஆரம்பித்விட்டன.இங்கே வேலை பார்க்கிற பல ஆயிரக்கணக்கான இளஞர்கள், இளஞிகள் மத்தியில்தான் ‘செக்ஸூவல் ஷேரிங்’ என்ற விபரீதமான புதிய அபாயம், தற்போது வேர்விட்டுக் கொண்டிருக்கிறது. சுத்தத் தமிழில் ‘பாலியல் பகிர்வு’ என்று சொல்லப்படும் இந்தப் புதிய சீரழிவால், இளய சமுதாயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதான் வேதன.

பெரும்பாலும் இந்த ‘செக்ஸ§வல் ஷேரிங்’ விபரீதத்தில், விருப்பப்பட்டே விழுவதும் பலியாவதும் திருமணமாகாத இளம்பெண்கள் என்பதான் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது.இந்த விபரீதம் எந்த அளவுக்கு இளசுகள் மத்தியில் வேர்விட்டு, கிள பரப்பிக் கொண்டிருக்கிறது என்பதற்கு, ஒரு பானைசோற்றுப் பதமாக ஓர் உண்மச் சம்பவத்தைப் பார்க்கலாம்.தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூரில் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இளஞன் அவன். படிப்பு வெறும் ப்ளஸ்டூதான். அந்த இளஞனின் தகப்பனார், தனக்கு வேண்டியவர்களைப் பிடித்து ஒரு நிறுவனத்தில் ‘ஸ்வீப்பர்’ வேலைக்காகத் தன் மகன அனுப்பிவை த்தார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? 6,000 ரூபாய்! ‘கூட்டிப் பெருக்குகிற சாதாரண வேலைக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளமா?’ என்ற ஆச்சரியம் கலந்த ஆர்வத்துடன், அந்த இளஞனும் வேலக்குச் சென்றான். இரண்டாம் நாளே அலறியடித்க் கொண்டு ஓடிவந்து, ‘இனிமே அங்கே வேலக்குப் போக மாட்டேன்’ என்று கதறியிருக்கிறான். அந்த இளஞனின் அப்பா காரணம் கேட்டதற்கு, ரொம்பவே தயங்கித் தயங்கி அந்த அதிர்ச்சியூட்டும் தகவலச் சொல்லியிருக்கிறான்.‘‘எல்லா மாடிகளிலேயும் இருக்கிற லெட்ரீன், பாத்ரூம்களில் யூஸ் பண்ணின காண்டம்ஸ் கிடக்குப்பா. அவ்வளவயும் கூட்டிப் பெருக்கி அள்ளிக் கொட்டுறதான் என்னோட வே லை அதுக்குத்தான் ஆறாயிரம் ரூபாய் சம்பளம். அருவருப்பா இருக்குப்பா. அதோட லேடீஸ் யூஸ் பண்ற கருத்தடை மாத்திரைகவரெல்லாம் குப்பைக் கூடையில கிடக்குப்பா!’’ என்று அந்த இளஞன் சொன்னதக் கேட்டு அவனுடய அப்பாவும் அதிர்ந்திருக்கிறார்.

வாயப் பிளக்க வக்கும் வானுயர்ந்த கட்டடங்களின் உள்ளே, இப்படி முகத்தைச் சுளிக்க வக்கும்படியான சங்கதிகளும் வெளி உலகுக்குத் தெரியாமல் நடந்துவருகின்றன என்பதே அதிர்ச்சியூட்டும் உண்மைகல்லூரிகளில் படிக்கும் இளசுகள் மத்தியில், டேட்டிங் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதைவிட கூடுதல் முக்கியத்துவமும், ஈர்ப்பும் கொண்ட, இந்தப் பன்னாட்டுக் கம்பெனிகளில் பணியாற்றும் இளசுகள் மத்தியில் பிரபலமாகிவரும் வரும் ‘செக்ஸூவல் ஷேரிங்! இதன அவர்கள் மிகச் சுருக்கமாக ‘எஸ்.எஸ்.’ என்கிறார்கள்.‘டீ சாப்பிடலாம் வர்றியா?’ என்பது போல் சர்வசாதாரணமாக ‘எஸ்.எஸ். போகலாமா?’ என்று விஷயம் தெரிந்த இளவட்டங்கள் கேட்பது அவர்கள் மத்தியில் வாடிக்கயான மற்றும் சகஜமான ஒன்றாகிவிட்ட.துஇந்த ‘எஸ்.எஸ்’ கலாசாரம் குறித்து, மேலும் விஷயங்கள அறிந் துகொள்வதற்காக அங்கே வேலை பார்க்கும் சமூக அக்கறையுள்ள ஒரு நண்பரிடம் பேசினோம்.

அவர் அணுகுண்டாக அடுத்தடுத் துஅள்ளி வீசிய விவரங்களக் கேட்டு, அதிர்ச்சியில் அப்படியே ஆடிப்போய் விட்டோம். இனி, அந்த நண்பர் சொல்வதைக் கேட்போம். ‘‘இந்த ‘எஸ்.எஸ்’ கலாசாரம் பெங்களூர்லேயும், ஹைதராபாத்லேயும் ஏற்கெனவே பரவிடுச்சு. அதிலேயும் பெங்களூரில் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு விஷம் மாதிரி பரவிக்கிடக்கு. இப்போ சென்னைக்கும் வந்தாச்சு. சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படித்து முடித்,து பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கும் எல்லா இளஞர்களும், இளஞிகளுமே அமெரிக்கக் கனவுலதான் இருதுந்ட்டு இருக்காங்க. அங்கே போய் லட்ச லட்சமா சம்பாதிக்கணும். சொந்தமா ப்ளாட் வாங்கணும். ஆடம்பரமா வாழணும். அமெரிக்காவிலேயே செட்டில் ஆகணும். இந்த அழுக்குப் பிடிச்ச இந்தியாவும், நாத்தம் பிடிச்ச தமிழ்நாடும் வேண்டவே வேண்டாம்னு மனசளவுல முடிவு பண்ணிட்டுத்தான் இங்கே வேல பார்க்கிறாங்க. அதனால அப்படியே மெள்ள... மெள்ள அமெரிக்க லஃப் ஸ்டலுக்கு இங்கேயே மாறிடறாங்க. அமெரிக்க ஸ்டைல்ல ஆங்கிலம் பேசுறாங்க. பசிச்சா பிரட் சாண்ட்விச், ஜூஸ் சாப்பிடுறாங்க. தாகத்துக்கு பீர் குடிக்கிறாங்க. வாரக் கடசியில் டிஸ்கொதே போறாங்க. அதோட அடுத்த கட்டம்தான் ‘எஸ்.எஸ்!’’ என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லி நிறுத்தியவர், தொடர்ந்தார்.

‘எஸ்.எஸ்.’ கலாசாரத்தோட கான்செப்ட் என்னன்னா அழகும், இளைமயும் கொண்ட இளம்பெண்கள பலாத்காரம் பண்ணாமல், கட்டாயப்படுத்தாமல் மெள்ள மெள்ள அவர்கள கன்வின்ஸ் செய், அவர்களின் முழு சம்மதத்டனும், ஒத்ழப்புடனும் செக்ஸ் உறவில் வீழ்த்வதான். அந்தப் பெண்களும் த்ரில்லுக்காகவும், பணத்க்காகவும், ஒரு சிலர் பதவி உயர்வுக்காகவும் எஸ்.எஸ்.ஸ§க்குப் பளிச்சுன்னு ஓ.கே. சொல்றாங்க. இந்தப் பெண்கள் கட்டுப் பெட்டித்தனமா இருக்க விரும்பறம் இல்.லை கற்பு, கல்யாணத்க்குப் பிறகு செக்ஸ், ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம கலாசார விஷயங்களெல்லாம் அவர்களுக்கு முட்டாள்தனமாகப்படுகிறது.. அவர்களக் கேட்டால் ‘எங்ககிட்டே இளைமைஇருக்கு... அழகு இருக்கு... அத இப்போ அனுபவிக்காமல், கிழவி ஆன பிறகா பயன்படுத்திக்க முடியும்’னு பளிச்சுன்னு பதில் சொல்வாங்க.

இவர்கள இந்த அளவுக்கு மூளைச்சலவ செய் தயார் பண்ணி வத்திருப்பதே, அவர்களுடய செக்ஸ் பார்ட்னர்கள்தான். இந்த பார்ட்னர்கள், கூட வேலை பார்க்கும் இளஞர்களாகவே இருப்பார்கள். அல்ல அதிகாரிகளாக இருப்பார்கள். இதில் நிறுவன அதிகாரிகளுடன் ‘எஸ்.எஸ்’ போகவே அதிகமான இளம்பெண்கள் விரும்பறாங்க. அதற்குக் காரணம் என்னன்னா, அவர்கள் மூலமா, படாரென்று அமெரிக்காவுக்குப் பறந்துடலாம் பாருங்க!’’ என்று சொல்லி, நீண்ட வேதனப் பெருமூச்சோடு நிறுத்தினார் அந்த நண்பர்.வாயப் பிளந்தபடி அவர் சொன்னதயெல்லாம் கேட்டபடி அதிர்ச்சியில் அப்படியே உறந்து போயிருந்த நாம், சட்டென்று சுதாரித்து, சேலையூர் இளஞனுக்கு ஏற்பட்ட அனுபவத்தச் சொல்லி, ‘இந்த ‘எஸ்.எஸ்’ விஷயம் வேல பார்க்கும் நிறுவனக் கட்டடத்திற்குள்ளேயே தான் நடக்கிறது என்ப துகொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லயே?’ என்ற நம சந்தேகத்த அவரிடமே கேட்டோம். அதற்கும் விரிவான பதிலத் தெளிவாகச் சொல்ல ஆரம்பித்தார் நண்பர்.‘‘அந்தப் பையன் சொன்னதுல கொஞ்சங்கூட பொய்யில்லேங்குறதான் உண்ம. வெளியிலிருந்து பார்க்கும்போது, வெறும் கட்டடமாகத் தெரியுற ஒவ்வொரு கம்பனியும், உள்ளே பிரமிச்சுப் போற அளவுக்கு இருக்கும். கான்பிரன்ஸ் ஹால், ரிலாக்ஸ் ரூம், டாய்லெட், பாத்ரூம்னு அத்தனயும் கமகம வாசனயோடு படு ரிச்சா இருக்கும். ‘எஸ்.எஸ்’ பார்ட்னர்கள் தங்களோட வசதிக்கும் அவசரத்துக்குத் தகுந்தாற்போல, இதுல ஏதாவது ஒண்ணுல ஒங்கிடுவாங்க. இந்த ‘எஸ்.எஸ்’ மேட்டர் நட்ஷிப்ட்டுல மட்டும்தான் நடக்கும். இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, இங்கே பாதுகாப்புக்கு நூறு சதவிகிதம் கியாரண்டி, போலீஸ் ரெய்டு, தெரிஞ்சவங்ககிட்டே ஏடாகூடமா மாட்டிக்கிற மாதிரியான எந்தப் பிரச்னயும் இங்கே இல்லே. NIGHT ஷிப்ட் வேல பார்த்த மாதிரியும் ஆச்சு... மேட்டரை முடிச்ச மாதிரியும் ஆச்சு. எந்த ரிஸ்க்கும் இல்லே!’’ என்று சொல்லி முடித்தார்.

‘பெரிய நிறுவனங்களில் இதுபோன்ற அசிங்கங்கள் நடப்ப து அந்த நிறுவனங்களுக்குத்தானே கெட்ட பெயர்? அந்த வகையில் இந்தத் தவறுகளத் தடுக்கும் முயற்சிகளில் அந்த நிறுவனங்கள் இறங்குவதில்லயா?’ என்ற அடுத்த நியாயமான சந்தேகத்தையும் அவரிடமே கேட்டோம். நம்மைப் பார்த் மெலிதாய் புன்னகத்தவாறே தொடர்ந்தார். ‘‘நீங்கள் கேட்பது நியாயமான சந்தேகம்தான். ஆனால், அந்த நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கிறவங்களே ‘எஸ்.எஸ்’ பார்ட்னரா இருக்காங்களே... தவிர, நம்ம கண்ணுக்குத் தப்பாத் தெரியுற இந்த விஷயங்கள், அவங்களுக்கு ஒரு மேட்டரே கிடயாது. இன்னொரு முக்கியமான விஷயம், பெரிய நிறுவனங்களோட அகராதில ஆண், பெண் வித்தியாசங்கிற விஷயமே கிடயாது

நிறுவன முதலாளிகளப் பொறுத்தவர வேல பார்க்கிற ஆண்கள், பெண்கள் இரண்டு தரப்புமே ‘மேன்பவர் _ அவ்வளவுதான். ‘மேன்பவர்’ ஒழுங்கா பயன்படுதான்னு அதிகாரிகள் பார்ப்பாங்களே தவிர, இந்த ‘எஸ்.எஸ்.’ கலாசாரமெல்லாம் அவங்க கவனத்க்குப் போகவே போகா!’’ என்று ஆச்சரியமூட்டினார் அவர். ‘அதெப்படி கவலப்படாமல் இருக்க முடியும்னு சொல்றீங்க? நாளைக்கு பிரச்னன்னு ஒண்ணு வந்துட்டா, போலீஸ் கேஸ் ஆகி, விவகாரமெல்லாம் வெட்டவெளிச்சமாகி, நிறுவனங்களின் பெயர் நாறிடாதா?’ என்று கேட்ட நம்மைப் பரிதாபமாகப் பார்த் துவிட்டுத் தொடர்ந்தார் அந்த நண்பர். ‘‘பிரச்னைஎப்படி சார் வரும்? பாதிக்கப்பட்ட பொண்ணுங்கன்னு யாராவது போலீஸ§க்குப் போய் புகார் கொடுத்தாத்தானே விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வரும்? ‘எஸ்.எஸ்.’லதான் அதுக்கு வாய்ப்பே இல்லயே. அந்தப் பொண்ணுங்களோட முழு சம்மதத்தோடதானே நடக்கு. விருப்பத்தோட நடக்கிற இந்த விவகாரத்தைஎந்தப் பொண்ணுதான் விவகாரமாக்குவா?’’ என்று பளிச்சென்று கேட்டு நம் வாய அடைத்தார் அவர்.அதிர்ச்சியில் உறந்துபோய் நின்றோம் நாம்.
சங்கேத மொழிகள்!எஸ்.எஸ். _ செக்ஸூவல் ஷேரிங். எஸ்.சி.பி. _ சூப்பர் கம்பெனி பார்ட்னர்.
பி.வி.பி. _ பர்ஸ் வெயிட் பார்ட்டி.
வி.பி.பி. _ வெயிட் பர்ஸ் பார்ட்டி.
ப்யூஸ் மானிட்டர் _ எஸ்.எஸ்.ஸ§க்கு சம்மதிக்காத பெண் (புதுசு).வைரம் _ அதிகமான ‘எஸ்.எஸ்’ பார்ட்னர்களப் பார்த்துவிட்ட இளஞன் அல்ல இளஞி.சங்கேத அழைப்புகள்!
ஹா _ ஹாய்’ என்பதன் சுருக்கம். இதன ஸ்டைலாக உச்சரித்தால் ‘எஸ்.எஸ்.ஸ§க்கு ரெடியா’ என்று அர்த்தமாம்.

ஹாஹா_டூத் பேஸ்ட் விளம்பரங்களில் உள்ளங்கை அருகே வாய வைத்து‘ஹாஹா’ என்பார்களே.. அதனயே கொஞ்சம் உல்டாவாக மாற்றி... அதாவது, புறங்கைஅருகே வாய வைத்து‘ஹாஹா’ என்றால், ‘நான் ரெடி’ என்று அர்த்தமாம்.

இவற்றைத் தவிர, பார்ட்னரப் பார்த்தம் ஆட்காட்டி விரலால் காற்றில் எஸ்.எஸ். என்று போடுவது, எஸ்.எஸ். இளஞனும், இளஞியும் கேஷ§வலாய் கைகுலுக்கிக் கொள்வதுபோல் செய்து, ஆட்காட்டி விரலால் மெள்ள உள்ளங்கையச் சுரண்டுவது, இவை இரண்டுமே அழைப்புக்கான சைகைதானாம்.

வல்லம் மகேசு REPORTER. 7.12.06

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP